கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இதுவரை கண்டிராத அளவு மோசமான இழப்பை சந்தித்துள்ளது. 2012-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை ரூ.1151.53 கோடி இழப்பீட்டை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.355.55 கோடியாக இழப்பீடு இருந்தது குறிப்பிடத்தக்கது.
2005-ம் ஆண்டு மே மாதத்திற்கு பின் கிங்பிஷர் விமான நிறுவனம் எந்த லாபத்தையும் பெறவில்லை. விமான எரிபொருளின் விலை ஏற்றம், இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு, இவை அனைத்தும் நிறுவனத்திற்கு 70 சதவீத வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் இந்த நிறுவனத்தின் மொத்த கடன் தொகை ரூ.7,057.08 கோடியாகும்.
No comments:
Post a Comment