Monday, May 7, 2012

தண்ணீர்...தண்ணீர்... - ஓ பக்கங்கள், ஞாநி



‘மூன்றாவது உலக யுத்தம் வெடித் தால் அதற்குக் காரணமாக இருக்கப் போவது தண்ணீர்தான்’ என்று பல வருடங்களாக உலகெங்கும் அறிஞர்கள் எச்சரித்து வருகிறார்கள். மனித வரலாற்றில் பல நாகரிகச் சமூகங்கள் அடியோடு அழிந்ததற்குக் காரணம் தண்ணீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்டதால்தான்.ஏற்கெனவே தண்ணீருக்காக இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையே குட்டி யுத்தங்கள் நடந்து வருகின்றன. இதற்கெல்லாம் தீர்வு நதிகள் இணைப்பு என்ற தவறான பிரசாரம் ஒரு பக்கம் நடக்கிறது. நதிகளை இணைப்பதால் பாதிக்கப்படும் நிலங்கள், மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகள், தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையை விட பிரம்மாண்டமானவை. எனவே ஆறு, குளம், ஏரிகளை மாசுபடுத்தாமல் காப்பது, மணற் கொள்ளையை நிறுத்துவது, மழைநீர் சேகரிப்பு, கடலில் வீணாகக் கலக்கும் நீரை மிச்சப்படுத்துவது, இப்போது நீரைப் பயன்படுத்தும் முறைகளில் சிக்கனத்தைக் கொண்டு வருவது முதலியவைதான் அசல் தீர்வுகள்.இந்த வாரம் வந்துள்ள செய்திகளின்படி சென்னை நகரின் பல பகுதிகளில் - மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, பெசன்ட் நகர், திருவான்மியூர், கொளத்தூர், மகாகவி பாரதி நகர், புளியந்தோப்பு, அண்ணாநகர், தியாகராயநகர், விருகம்பாக்கம், கருணாநிதிநகர், சைதாப்பேட்டை,வேளச்சேரி, கிண்டி, தரமணி - சென்ற ஏப்ரலில் இருந்த அளவை விட இந்த வருட ஏப்ரலில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பாசனத்துக்கான நீர் அளவு சிக்கலாகிக் கொண்டே வருகிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீரை, கூடங்குளம் அணுஉலைக்கு அனுப்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், குமரி மாவட்டத்தில் விவசாயமும் குடிநீரும் கடுமையாகப் பாதிக்கப்படும்.நிலத்தடி நீரைப் பொறுத்த மட்டில் தமிழ்நாட்டில் இருக்கும் மொத்தம் 386 வட்டங்களில் (பிளாக்குகளில்), 139 வட்டங்களில் ஏற்கெனவே அளவுக்கு மேல் உறிஞ்சியாகிவிட்டது. அடுத்து 33 வட்டங்கள் வற்றிப் போகும் ஆபத்தான நிலையில் உள்ளன. இன்னொரு 67 வட்டங்கள் முக்கால் ஆபத்தில் இருக்கின்றன. இன்னொரு 11 வட்டங்களில் தண்ணீர் எதற்கும் தரமற்றது. மொத்தத்தில் தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு பகுதியில் நிலத்தடிநீர் சிக்கல்தான். இந்தச் சூழ்நிலையில்தான் மத்திய அரசின் தண்ணீர் கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது. தண்ணீர் மாநில அதிகார வரம்புக்கு உட்பட்ட விஷயம் எனினும் மத்திய அரசு அறிவிக்கும் கொள்கை அடிப்படையில் தான் மாநிலங்கள் தங்கள் கொள்கை பிரகடனங்களையும் சட்டங்களையும் உருவாக்குகின்றன.கடைசியாக மத்திய அரசு தண்ணீர் கொள்கையை வெளியிட்டு 25 வருடமாகிறது (1987)! அதன் அடிப்படையில் தன் கொள்கையை அறிவிக்க தமிழக அரசுக்கு ஏழு வருடம் தேவைப்பட்டது (1994). 

மத்திய அரசு இப்போது அறிவித்திருக்கும் தண்ணீர் கொள்கையின் பல அம்சங்களுக்கு பல விவசாயிகள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. முக்கியமான காரணம் தண்ணீரை, தனியார் எடுத்து விற்கக்கூடிய ஒரு பொருளாக மத்திய அரசு மாற்ற முயற்சிப்பதுதான்.இதுவரையிலும் இந்தியாவில் தண்ணீர் என்பது அது இருக்கும் நிலத்தின் 13052012ந் தக்காரரின் உரிமைப் பொருளாகும். இந்த உரிமையைக் கடைசியாக கேரளத்தில் பிளச்சிமாடா மக்களுக்கும் கோகோ கோலா கம்பெனிக்கும் இடையே நடந்த வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால் மத்திய அரசின் புதிய தண்ணீர் கொள்கையின்படி இனி எல்லா தண்ணீரும் பொதுச் 13052012 சொத்தாகக் கருதப்படும். அடிப்படை மனிதத் தேவைகளுக்கும், ஆறுகள் வற்றாமல் தக்கவைக்கவும் போதுமான நீர் அளவு நிர்ணயிக்கப்பட்டு, மீதமுள்ள தண்ணீரை விலைக்கு விற்று பொருள் ஈட்டக்கூடிய ஒரு சரக்காகக் கருத மத்திய அரசின் கொள்கை அறிவிப்பு வகை செய்கிறது. மக்களுக்கு குடிநீர், பாசனநீர் விநியோகிக்கும் வேலைகளை அரசுப் பொறுப்பிலிருந்து எடுத்துவிட்டு அதை தனியார் அமைப்புகளிடம் ஒப்படைப்பது இன்னொரு கொள்கை அறிவிப்பாகும். மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்து அவர்கள் அதற்கான சந்தை விலையை நிர்ணயிக்க விடுவதைப் போல, தண்ணீரிலும் செய்வதே மத்திய அரசின் நோக்கம். இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக உலக வங்கி இந்திய அரசுக்குச் 13052012ல்லி வருகிறது. அதைத்தான் இப்போது அரசு தன் கொள்கை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.எல்லா தண்ணீரையும் பொதுச்13052012 சொத்து என்று அறிவித்து அதில் ஒரு பகுதியை மட்டும் மக்களின் அன்றாட உபயோகத்துக்கு ஒதுக்கிவிட்டு, அதையும் மீதியையும் விற்கவும் விநியோகிக்கவும் தனியார் அமைப்பிடம் அளிப்பதற்கு என்ன அர்த்தம்? நந்திகிராம், சிங்கூர் போன்ற இடங்களில் மக்களின் நிலங்களை அரசு குறைந்த விலையில் கையகப்படுத்தி அவற்றை பெருமுதலாளிகள் தொழிற்சாலை அமைக்க சலுகை விலையில் தருவது போலவே, தண்ணீரிலும் அரசு செய்ய விரும்புகிறது. மின்சாரம், தண்ணீர் எல்லாம் பெரு முதலாளி நிறுவனங்களுக்கு சலுகை விலையிலும், பொதுமக்களுக்கு அதிக விலையிலும், அப்படி அதிக விலையில் மக்களுக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் வாப்பையும் அந்த கம்பெனிகளுக்கே ஏற்படுத்தித் தருவதுதான் உலக வங்கியின் நோக்கம். அதற்கு இசைவாகவே மன்மோகன் அரசு கொள்கை பிரகடனங்களைச் செய்கிறது.தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு யாருடையது - அரசுடையதா, விநியோகிக்கும் தனியாருடையதா என்பது நிச்சயம் சிக்கல்களை ஏற்படுத்தும். பெரும் தொழிற்சாலைகள் கிராமப்பகுதிகளில் பெரும் அளவில் நீரைப் பயன்படுத்தினால் அதனால் பாதிக்கப்படும் நிலத்தடி நீரின் அளவைக் கணக்கிட்டு விலை நிர்ணயிக்கப்படுமா? நிர்ணயிக்கும் பொறுப்பே தனியார் நிறுவனத்தின் கையில் சென்றால் அது குடிநீர் விலையை சாதாரண மக்களுக்கு கட்டுப்படியாகாத அளவுக்கு ஏற்றிவிடாதா?விவசாயத்தையே எடுத்துக் கொண்டால் மிக அதிகமாக தண்ணீர் செலவாகக்கூடிய பயிர்கள் நெல், கோதுமை. ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு 4 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இந்தியாவில் மொத்த உணவு விளைச்சல் நடக்கும் நிலத்தில் 57 சதவிகித நிலத்தில் அரிசியும் கோதுமையும்தான் பயிர்கள். இவற்றுக்கான நீர் கட்டணம் ஒன்றாகவும் கம்பு, ராகி போன்ற நீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களுக்கான நீர் கட்டணம் வேறாகவும் நிர்ணயிக்கப்படுமா? விவசாயமே பெருமளவில் நசிந்துவரும் நிலையில் இந்தக் கட்டணங்கள் சாத்தியம்தானா?

நீர் விநியோகத்தையும் நிர்வாகத்தையும் அரசுகளிடமிருந்து எடுத்து, தனியாரிடம் ஒப்படைப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு வட்டாரத்திலும் நீர் பயன்படுத்துவோர் அமைப்புகளை ஏற்படுத்தி அவையும் தனியார் கம்பெனிகளும் சேர்ந்து விநியோக நிர்வாகத்தைக் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்று கொள்கை பிரகடனம் 13052012 சொல்கிறது. இதில் பல சாதக பாதகங்கள் இருக்கின்றன. விவசாயத்தில் பாசன நீர் பயன்படுத்துவோர் யார் என்பது ஆயக்கட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படலாம். ஆனால் குடிநீர் என்று வரும்போது உபயோகிப்போர் அமைப்பு என்பதை எப்படி உருவாக்குவது? குடிநீர் பெறும் மக்கள் வசிக்கும் கிராமத்தின் பஞ்சாயத்திடமா? அல்லது பால் 13052012சைட்டிகள் மாதிரி ஊழலுக்கு வாகான இன்னொரு போட்டி அமைப்பாகவா?  தமிழ்நாட்டில் மாநில அரசு ஏற்கெனவே பாசனத்துறையில் நீர் உபயோகிப்போர் அமைப்புகளை ஏற்படுத்திவிட்டது. இருபது மாவட்டங்களில் 1566 பயன்படுத்துவோர் சங்கங்களும், 161 விநியோக கமிட்டிகளும், 9 திட்டக் குழுக்களும் 2004ல் உருவாக்கப்பட்டுவிட்டன. ஐந்து வருடம் கழித்து 2009ல் இவற்றுக்கு அடுத்த தேர்தலும் நடத்தப்பட்டன. இவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு எதுவும் இன்னும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.நிலத்தடி நீர் நிர்வாகம், கட்டுப்பாட்டுக்காக தமிழகத்தில் 2003லேயே ஒரு தனிச்சட்டம் போடப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு இன்னும் கொண்டுவரப்படவில்லை. இப்போது மத்திய அரசு தண்ணீர் கொள்கையை அறிவித்ததையடுத்து தானும் தன் கொள்கையைத் தயாரித்துவருவதாக தமிழக அரசு 13052012ல்லியிருக்கிறது. ஆனால் 2012-13க்காக வெளியிடப்பட்ட பாலிசி நோட் என்பது 1994ன் கொள்கை அடிப்படையிலேயே உள்ளது. மத்திய அரசின் புதிய தண்ணீர் கொள்கை நாடு முழுவதும் நகரங்கள், கிராமங்கள் எல்லா இடங்களிலும் விவாதிக்கப்பட வேண்டியதாகும். அப்படி விவாதித்து கருத்துகளைத் தெரிவிக்க நிச்சயம் ஒரு மாதம் போதாது.ஆனால், மத்திய அரசு இந்த வருடம் ஜனவரி மாதத்தில் தண்ணீர் கொள்கையை அறிவித்துவிட்டு அது தொடர்பான கருத்துகளை மக்களும் மாநில அரசுகளும் தெரிவிக்க, கடைசி நாள் பிப்ரவரி 29 என்று 13052012ல்லிவிட்டது. எதற்கெடுத்தாலும் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதும் ஜெயலலிதா இன்னும் இதற்கு எந்தக் கடிதமும் எழுதியதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒவ்வொரு பெருநகரத்திலும் விவாதிக்கப்பட வேண்டிய இந்த விஷயத்தை விவாதிக்க ஏற்பாடு செய்யவேண்டிய அரசியல் கட்சிகள் எல்லாம் இதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. நுகர்வோர் அமைப்புகள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என்று பலரும் கூடிப் பேச வேண்டிய விஷயம் யாரும் கவனிப்பாரில்லாமல் அரசுகளால் மக்கள் மீது திணிக்கப்பட்டுவிடும் ஆபத்துதான் நடக்கிறது.சட்டமன்றம் முதல் டி.வி சேனல்வரை உருப்படாத விஷயங்களே நேரத்தை ஆக்கிரமிக்கின்றன. ஒவ்வொரு பிரச்னையையும் அது யாரோ இன்னொருவருடையது என்று பார்க்கும் பார்வை நம் சமூகத்தில் அதிகமாகிவிட்டது. அணுஉலை பிரச்னையை தமிழகத்தின் பிரச்னையாகப் பார்க்காமல் அது இடிந்தகரை மீனவர்கள் மட்டுமே கவலைப்படுகிற விஷயமாகத் தவறாகப் பார்க்கப்பட்டது. தண்ணீரையும் அப்படி கருதினால் தவிச்ச வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் செத்துப் போவோம். 

இந்த வாரக் கேள்விகள்:

1.கலைஞர் கருணாநிதிக்கு:

நீங்களே கொன்ற டெசோவுக்கு, நீங்களே இப்போது உயிர் கொடுத்து எழுப்பி, தனி ஈழத்துக்கான மக்கள் வாக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்திருக்கிறீர்களே? ஏன் இந்தக் கோரிக்கையைக் கடந்த 29 வருடங்களில் சுமார் 11 வருடங்கள் ஆட்சியில் இருந்தபோதும் ஒரு முறை கூட முன்வைக்கவில்லை? பிரபாகரனையும் இலங்கை அரசையும் போரை நிறுத்திவிட்டு பொதுவாக்கெடுப்பு நடத்தும்படி அப்போதே சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை ? 

2.அப்துல் கலாமுக்கும் நாராயணசாமிக்கும்:

சுனாமி வந்தாலும் கூடங்குளம் அணு உலைக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று சொன்னீர்களே, அப்படியானால் ஏன், இப்போது இந்தோனேஷிய பூமி அதிர்ச்சியால் சுனாமி எச்சரிக்கை வந்த உடனே கூடங்குளம் அணு உலையில் வேலை செய்து கொண்டிருந்த அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்களை மட்டும் அவசர அவசரமாக பஸ்களில் ஏற்றி ‘பாதுகாப்பான’ இடத்துக்கு அனுப்பினார்கள்? ஏன் அங்கே சுற்றி வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தவில்லை? 

3.ஜெயலலிதாவுக்கு:

சித்திரைத் திருநாள் உழவர் விழாக்களுக்கு வந்தவர்களுக்கு போட்ட விருந்தின் மெனுவில் காட்டிய அக்கறையை என்றாவது பள்ளிக்கூட சத்துணவு மெனுவில் காட்டியிருக்கிறீர்களா? ஏராளமான ஊர்களில் சரி பாதி முட்டைகளை பொது மார்க்கெட்டுக்கு விற்றுவிட்டுக் குழந்தைகளை ஏமாற்றும் வேலையில் சில முட்டை காண்ட்ராக்டர்களும் உங்கள் கட்சிக்காரர்களும் ஈடுபட்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா?

No comments:

Post a Comment