Friday, May 11, 2012

சினேகாவை கரம் பிடித்தார் பிரசன்னா! சென்னையில் திருமணம் கோலாகலம்!!


Sneha - Prasanna wedding bash சினிமா நட்சத்திரங்கள் சினேகா - பிரசன்னா திருமணம் சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் சினேகா. புன்னகையரசி என்று எல்லோரும் வர்ணிக்கப்படும் சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் சேர்ந்து நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஆரம்பமான நட்பு பின்னர் காதலாக மாறியது. ஆனால் இந்த காதலை இருவரும் வெளிகாட்டிக்கொள்ளாமல் ரகசியம் காத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த காதலை ‌போட்டு உடைத்தார் நடிகர் பிரசன்னா. இவர்களது திருமணத்திற்கும் இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததையடுத்து திருமணம் நிச்சயமானது. அதன்படி இவர்களது திருமணம் சென்னை, வாணகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் இன்று(11.05.12) காலை நடந்தது. 
ஸ்னேகா-பிரசன்னா திருமண படங்கள்
மணமகள் சினேகா கழுத்தில் பிரசன்‌னா இரண்டு முறை தாலி கட்டி தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார். இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன. முன்னதாக நேற்று(10ம் தேதி) மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சினேகாவை ஒரு இளவரசி போல அலங்கரித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் அமர வைத்து அழைத்து வந்தனர். பிரசன்னாவை தேரில் அழைத்து வந்தனர். இருவரும் மாலை மாற்றிக் கொண்டு மேடையில் நின்றனர். அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஸ்னேகா-பிரசன்னா திருமண படங்கள்

sneha prasanna wedding photos ,sneha prasanna marriage pics

sneha prasanna wedding photos ,sneha prasanna marriage pics







ஸ்னேகா திருமண படங்கள்







ஸ்னேகா-பிரசன்னா திருமண படங்கள்

sneha prasanna marriage pics


No comments:

Post a Comment