Thursday, May 31, 2012

உங்கள் கவனத்துக்கு... 90% விலை இறங்கிய பங்குகள்!




அதிரடி தள்ளுபடி என்பார்களே, அதை நம் பங்குச் சந்தையில் பட்டவர்த்தனமாகப் பார்க்க முடிகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பங்குகள் 52 வாரங்களுக்கும் குறைந்த விலையில் நமக்குக் கிடைக்கின்றன. சில நல்ல பங்குகள்கூட 50 சதவிகித தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
ஆனால், சில பங்குகள் 90 சதவிகித விலைக்கழிவில் கிடைக்கின்றன. இந்த பங்குகள் ஏன் 90 சதவிகிதம் வரை விலை இறங்கின? இந்த பங்குகள் மீண்டும் உயர வாய்ப்பு இருக்கிறதா? இவற்றை வாங்கலாமா? என பல கேள்விகளை டெக்னிக்கல் அனலிஸ்ட் ஸ்ரீராமிடம் கேட்டோம். நம் கேள்விகளுக்கு விளக்கமான பதிலைச் சொன்னார் அவர்.
''இருபது வருடங் களுக்கு மேல் சந்தையைப் பார்த்தவன் என்கிற முறையில் என்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். சரிவு, வீழ்ச்சி என்பது அனைவருக்கும் பொது வானது. அது தனிமனிதனாக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி, ஏன் நாடு களுக்கேகூட சரிவு என்பது சில காலகட்டத்தில் தவிர்க்க முடியாதது.
தத்துவார்த்த ரீதியில் எந்த ஒன்றும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்க வாய்ப்பில்லை. ஒரு காலத்தில் எகிப்து சாம்ராஜ்ஜியம் உச்சத்தில் இருந்தது. இப்போது நாம் அதைப் பற்றி பேசுகிறோமா? அவ்வளவு ஏன், சில வருடங்களுக்கு முன்புவரை ஜப்பான் உலகத்திற்கு மாடலாக இருந்தது. இன்றைக்கு ஜப்பானை யாரும் அப்படி பார்ப்பதில்லை. அதனால் சரிவு என்பது அனைவருக்கும் பொதுவானதே.
சரி, சரிவு ஏன் வருகிறது? இதற்கு பல காரணங் கள் இருக்க வாய்ப்புண்டு. ஒட்டு மொத்தமாக அந்த துறையே பிரச்னையில் சிக்கி இருக்கலாம். அந்நிறுவனத்தின் தலைவர்கள் ஏதாவது சில தவறான முடிவு களை எடுத்திருக் கலாம். அல்லது பணப் பிரச்னை போல ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கித் தவிக்கலாம். இதனால் அதன் பங்கு சரிந்திருக்கலாம்.
 இந்த சாத்தியம் அனைத்து பங்குகளுக்கும் இருக்கிறது. மிக சிறப்பான பங்குகள் என்றால் 80 முதல் 90 சதவிகிதம் வரை சரிய வாய்ப்பு இருக்கிறது. மீடியமான நிறுவனங்கள் 90 முதல் 95 சதவிகிதம் வரை சரிய வாய்ப்புண்டு. ஆனால், 98 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்த பங்குகளும் உண்டு. இந்த பங்குகளை நாம் வாங்கக் கூடாது.
தற்போதைய நிலையில் பல நிறுவனங்கள் தங்களது 52 வார குறைந்தபட்ச விலையில் வர்த்தகமாகிக் கொண்டி ருக்கிறது. சில பங்குகள் 90 சதவிகிதத்துக்கு மேல் சரிந்திருக்கிறது. இந்த பங்குகள் எல்லாம் மீண்டும் மேலே வருமா என்று கேட்டால் எனக்குத் தெரியாது. ஆனால், சில பங்குகள் மீண்டும் நன்றாக உயர வாய்ப்பு இருக்கிறது. கடந்த காலத்தில் தரை தட்டிய பங்குகள் மீண்டும் எப்படி உயர்ந்தது என்று சொல்கிறேன்.
முதலாவதாக, பாட்டா பங்கினை எடுத்துக் கொள் வோம். அந்த பங்கு மார்ச் 1999-ம் ஆண்டு 258 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. அதன்பிறகு மார்ச் 2009-ம் ஆண்டு 24 ரூபாய் என்ற விலைக்கு சரிந்தது. பங்கு விலை சரிந்தவுடன் பல நெகட்டிவ் செய்திகள் வந்தன. அதை எல்லாம் தாண்டி அந்த பங்கு மெள்ள மெள்ள தொடர்ந்து உயர்ந்தது. ஒரு கட்டத்தில் 100 ரூபாய் என்ற நிலையில் வர்த்தக மானது. அதன்பிறகு இந்த பங்கு தொடர்ந்து உயர்ந்து 900 ரூபாய்க்கு மேலே சென்றது.
இதேபோல ஐ.டி.சி., ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டி.டி.கே. பிரெஸ்டீஜ் மற்றும் டாரன்ட் பார்மா உள்ளிட்ட பல பங்குகளை உதாரணமாக காட்ட முடியும். இந்த பங்குகளின் சார்ட்டை எடுத்து பார்த்தால் அவற்றின் வரலாறு நமக்கு தெரியும். இந்த பங்குகளை நான் உதாரண மாக காட்டுவதை வைத்து, நான் இந்த பங்குகளை பரிந்துரை செய்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த பங்கு களின் விலை இன்னும் சில சதவிகிதம் உயரும் என்றாலும் பெரிய அளவில் வருமானம் கொடுக்கும் என்று சொல்ல முடியாது'' என்றவரிடம், ''தற்போது 90 சதவிகித சரிவில் இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யலாமா?'' என்று கேட்டோம்.
''தற்போது சரிந்திருக்கும் அத்தனை பங்குகளும் மீண்டும் இதே போல உயரும் என்று சொல்ல முடியாவிட்டாலும், சில பங்குகள் உயர வாய்ப்பிருக் கிறது'' என்றபடி நம் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.
''90 சதவிகிதம் சரிந்த பங்கு களில் முதலீடு செய்யும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். முதலில், அந்த பங்கின் பிஸினஸ் எப்படி இருக்கிறது, எதிர்காலத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, தற்போதைய நிலையில் இன்ஃப்ரா துறை கொஞ்சம் பிரச்னையில் இருந்தாலும் எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இரண்டாவது, அந்நிறுவனத்தின் கார்ப்பரேட் கவர்னன்ஸ் எப்படி இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும். இதைப் பார்த்து முதலீடு செய்து விட்டால் நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்.
இதுபோன்ற பங்குகளில் முதலீடு செய்வது ரிஸ்க் என்றாலும் அதற்கான ரிவார்ட் (வருமானம்) மிக அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இங்கு இரண்டு ரிஸ்கு கள் இருக்கின்றன.
முதலாவது, நாம் முதலீடு செய்யும் பங்கு எத்தனை நாளைக்கு பிறகு மேலே ஏறும் என்று தெரியாது. இரண்டாவது, புரமோட்டர்கள் டீலிஸ்ட் செய்யவும் வாய்ப்பிருக்கிறது'' என்றார்.
நீங்கள் சொல்வதுபோல நல்ல பிஸினஸ் எதிர்காலம், நல்ல கார்ப்பரேட் கவர்னன்ஸ் இருக்கும் பங்குகளை எதாவது பட்டியலிட முடியுமா?'' என்பது தவிர நம் அடுத்த கேள்வி வேறு என்னவாக இருக்க முடியும்.
நிச்சயமாகத் தருகிறேன். ஆனால் அந்த பட்டியலில் உள்ள பங்குகளை நீங்கள் கொஞ்சம் கவனமாக ஃபாலோ செய்ய வேண்டுமே தவிர, உடனடியாக அவற்றை வாங்குவதற்காகத் தரவில்லை. தவிர, அரச மரத்தைச் சுற்றி வந்த உடனே அடிவயிற்றைத் தொட்டுப்பார்க்கக் கூடாது. இவை நீண்ட காலத்துக்கு மட்டுமே'' என்று முடித்தார்.

No comments:

Post a Comment