Wednesday, May 2, 2012

மாவோயிஸ்ட்டுகளை மிரட்டும் 'கோப்ரா'! விஜயகுமார் ஐ.பி.எஸ். அதிரடி!




த்தீஸ்கர் மாநிலத்தில் வெளிநாட்டினர் கடத்தல், ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கடத்தல், கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் என்று, மாவோயிஸ்ட்டுகள் தொடர்ந்து அதிரடிகளில் ஈடுபடுவதற்குக் காரணமாக சுட்டிக்காட்டப்படுவது, 
மத்திய அரசும் தன் பங்குக்கு, துணை நிலை ராணுவப் படைககோப்ரா (COBRA - Combat Battalian for Resolute Action) என்ற சிறப்பு அதிரடிப் படைப் பிரிவின் கண்மூடித்​தனமான தாக்குதல்கள்தான். இந்த கோப்ரா படைப் பிரிவின் தலைவர்... நம்ம ஊரு விஜயகுமார் ஐ.பி.எஸ்.! ள், ராணுவம், மாநில போலீஸ், மத்திய, மாநில உளவுப் பிரிவினர் ஆகியோரை ஒருங்​கிணைத்து 'ஆபரேஷன் கிரீன் ஹன்ட்' என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரம், மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் உள்ள கிராமங்களில் மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்களையும் பெருமளவில் செய்துவருகிறது மத்திய அரசு.
இனி, கோப்ரா விஷயத்துக்கு வருவோம்!  
எதற்கும் துணிந்த திறமையான வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அடர்ந்த காடுகளில் போர்த்தந்திரங்​களைக் கற்றுக்கொடுத்து வருகிறார் விஜயகுமார். கோப்ரா பிரிவின் முதல்பிரிவை, சத்தீஸ்கர் மாநிலத்தில்தான் அறிமுகப்படுத்தினார்கள். அதை அடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளில் ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார், மகாராஷ்டிரா, உ.பி, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலும் தொடங்கி விட்டார்கள். ஒரேநேரத்தில் வடமாநில எல்லைப் புறங்களில் உள்ள காடு, மலைகளில் கோப்ரா பிரிவினர் பல்வேறு ரகசிய முகாம்களை ஏற்படுத்தி தகவல் தொடர்பு, உளவுப் பிரிவு ஆகியவற்றைப் பலப்​படுத்திக் கொள்கிறார்கள். கோப்ராவின் வியூகத்துக்கு ஈடுகொடுத்து மாவோயிஸ்ட்டுகளும் எதிர் யுத்தம் நடத்துகிறார்கள். கோப்ரா - மாவோயிஸ்ட்டுகளுக்கு இடையே காடுகளுக்குள் நடந்துவரும் துப்பாக்கிச் சண்டைகளின் ஒரு கட்டம்தான், கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல்.
டெல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமையகத்தில் இருந்த விஜயகுமாரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
''சீனியர் டி.ஜி.பி. நீங்கள். தமிழகத்தில் இருந்திருந்தால், சுமார் ஒரு லட்சம் போலீஸாருக்குத் தலைவராக இருந்திருப்பீர்கள். அதைவிடுத்து இப்போது நீங்கள் துணை நிலை ராணுவத்துக்குத் தலைவராக இருக்கிறீர்கள்? இது, நீங்கள் விரும்பி ஏற்றுக்​கொண்டதா?''
'' நிச்சயமாக! விரும்பித்தான் ஏற்றுக்கொண்டேன். இருந்​தாலும், நான் தமிழ்நாடு கேடர் ஆபீஸர். எனது சர்வீஸின் பெரும்பகுதி அங்கேதான் இருந்தேன். அது எனக்குப் பிடித்தமான, விருப்பமான மாநிலம். ஆனால், எல்லைப் பாதுகாப்பு படையில் ஏற்கெனவே நான் பணிபுரிந்த அனுபவம் உண்டு. பொதுவாகவே, சவால்களைச் சந்திப்பது எனக்குப் பிடிக்கும். இந்தியாவை உலுக்கிவரும் மாவோயிஸ்ட்டுகளை அடக்கி ஒடுக்கும் சவாலை இப்போது ஏற்று இருக்கிறேன். நூற்றுக்கணக்கான போலீஸாரை அநியாயமாகக் கொன்று இருக்கிறார்கள். ரயில் கவிழ்ப்பு மாதிரியான சதிவேலைகள்நிறையவே அரங்கேற்றி இருக்கிறார்கள். அதை எல்லாம் மறந்துவிட முடியுமா? அவர்களை எதிர்த்து இப்போது எங்களது கோப்ரா பிரிவினர் கடுமையாகச் சண்டை போடுகிறார்கள். 2009-ல் சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் நடந்த சண்டையில் ஏராளமான மாவோயிஸ்ட்டுகள் இறந்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளின் முகாம் ஒன்றை அழித்தனர். இதையெல்லாம் நான் சொல்வதை விட, சி.ஆர்.பி.எஃப். இணையதளத்தைப் பாருங்கள்... செயல்பாடுகளை நீங்களே புரிந்து​கொள்வீர்கள்.''  
''சத்தீஸ்கர் மாநிலத்தில் என்னதான் நடக்கிறது?''
''மாவோயிஸ்ட்டுகள் முன்பெல்லாம் போலீஸா​ருடன் துப்பாக்கிச் சண்டை போட்டார்கள். இப்போது கண்ணி வெடி வைப்பது, வெடிகுண்டு வீசுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். நேரிடையாகப் போரிடுவதைத் தவிர்க்கிறார்கள். இங்குள்ள மாவோயிஸ்ட்டுகள் கெரில்லா பாணியைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், உண்மையான கெரில்லா கோட்பாடுகளில் 'ஆட்களைக் கடத்தி பிளாக்மெயில் செய்வது' கிடையாது. இவர்கள் மாவட்டக் கலெக்டரைக் கடத்துவது, எம்.எல்.ஏ-வைப் பணயக் கைதியாக வைத்துக்கொண்டு கோரிக்கை​களை நிறைவேற்றிக்கொள்வது போன்ற அட்டூழியம் செய்கிறார்கள். எல்லைப்புறக் காடுகளில் நாங்கள் கொடுத்துவரும் கடுமையான பிரஷர் காரணமாக, இதுபோன்று நாட்டுக்குள் அசம்பாவிதம் செய்கிறார்கள். இது, நாங்கள் எதிர்பார்த்ததுதான்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தி, எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது​போலத்தான், வி.ஐ.பி-களைக் கடத்துவதை மாவோயிஸ்ட்​டுகள் கையில் எடுத்து இருக்கிறார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் கலெக்டர் விவகாரம் தொடர்பாக மாவோயிஸ்ட்டுகளுடன் பேச்சு​வார்த்தை நடந்து வருவதால், எங்களது நடவடிக்​கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி ​வைத்துள்ளோம்.''  
''ஒரே நேரத்தில் பல மாநில எல்லைகளில் கோப்ரா பிரிவைக் களத்தில் இறக்கி, மாவோயிஸ்ட்டுகளுக்கு நெருக்கடியைக் கொடுப்பது ஏன்?''
''இந்த மாநிலத்தில் விரட்டினால், அடுத்த மாநிலத்துக்​குள் ஓடுவார்கள். அங்கே விரட்டினால், இங்கே வருவார்கள். இப்படி எல்லை தாண்டும் பாணியைத் தடுத்து நிறுத்தும் வகையில்தான் எல்லையை சீல் வைக்கும் முயற்சியை கையில் எடுத்திருக்கிறோம். அந்தந்த மாநிலப் போலீஸாரையும் எங்களுடன் அழைத்துச் செல்கிறோம். அதேபோல், உளவுப் பிரிவினரும் நன்றாக தகவல் சேகரித்துக் கொடுக்கிறார்கள். இவர்கள் அனைவரின் ஒத்துழைப்​புடன் மாவோயிஸ்ட்டுகளின் எல்லை தாண்டும் பாணிக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறோம். ஜார்க்கண்ட் - மேற்கு வங்காள எல்லையை ஒட்டிய ஊரில்தான் அந்த இயக்கத்தின் தலைவர் கிஷன்ஜி சுட்டுக் கொல்லப்பட்டார். மாவோயிஸ்ட்டுகளின் பீகார், ஜார்க்கண்ட் மாநிலப் பொறுப்பாளரும் இரண்டாம் நிலைத் தலைவர் என்று அழைக்கப்படும் பிரசாந்த் போஸ் என்பவர் சரண்டா காடுகளில் செயல்பட்டு வந்தார். சுமார் 1,000 சதுர கிலோ மீட்டரைக் கொண்ட காட்டுப் பகுதியில் போலீஸார் யாரும் உள்ளே போக முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக போலீஸ் அந்தக் காடுகளுக்குள் போனது இல்லை.
அதேபோல், டிரில்போஸி என்ற கிராமத்தில் நுழைந்தாலே, போலீஸார் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

அங்கே மட்டும் 50 போலீஸா​ரைக் கொன்று இருக்கிறார்கள். ஒரேசமயத்தில் 30 போலீ​ஸாரைக் கொன்ற சம்பவம்கூட நடந்திருக்கிறது. இப்போது, தொடர் சண்டை போட்டு அந்தப் பகுதியை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டோம். பிரசாந்த் போஸ் எங்கே போனார் என்றே தெரிய​வில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 'ஆபரேஷன் அனகோன்டா’ என்ற பெயரில் இன்னொரு தாக்குதலை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒரு ஏரியாவில் வெற்றிகரமாக நடத்தினோம். அதேபோல், லேட்ஹார் மாவட்டத்தில் உள்ள சர்ஜு கிராமத்திலும் தாக்குதல் நடத்தினோம். மாவோயிஸ்ட்டுகள் அங்கேதான் பயிற்சி முகாம்களையும் ஆயுதங்களைத் தயார் செய்யும் தொழிற்சாலையையும் நடத்தி வந்தார்கள். அவர்களை விரட்டி அடித்து, எங்களது படையின் முகாம்களை அமைத்து விட்டோம்.''
''இது, இன்னும் எத்தனை காலம் நீடிக்கும்?''
''சத்தீஸ்கர் மாநிலத்தில்தான் எங்களது நடவடிக்கையை நிறுத்தி​வைத்து இருக்கிறோம். ஜார்க்கண்ட் மாநில எல்லையில் உள்ள செமோசான்யா காட்டுப் பகுதியில் இந்த நேரம்கூட மிகப்பெரிய அளவில் போர் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சங்கிலித் தொடர்​போல இனி இப்படி ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கும். சொன்னால் நம்ப மாட்டீர்கள்! அபுஜ்மட் என்ற பகுதியில் இதுவரை வருவாய்த்​துறையின் சர்வேகூட நடந்தது இல்லையாம். அரசாங்க ஊழியர் யாரும் அந்தப் பகுதிக்கே போனது இல்லை. கடந்த மார்ச்  மாதத்தில் இரண்டு வாரங்கள் தாக்குதல் நடத்தி, அந்தப் பகுதியை 'க்ளியர்' செய்தோம். மாவோ​யிஸ்ட்டுகளின் பிரமாண்ட பயிற்சி முகாம், ஆயுதங்கள் தயாரிப்பு எல்லாம் அந்தப் பகுதியில்தான் நடந்து வந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள  சரண்டா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளின் பிடியில் இருந்த 56 கிராமங்களை போலீஸ் படையினர் விடுவித்து உள்ளனர். இப்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் மாவோயிஸ்ட்டுகளின் பிடி தளர்ந்து வருகிறது. இதற்கு இன்னொரு காரணம் - மத்திய அரசு காட்டிவரும் அக்கறை. மாநில அரசு​களும்கூட மாவோயிஸ்ட்டுகள் விஷயத்தில் நல்ல முறையில் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்.''
''அடுத்த நான்கு மாதத்தில் ஓய்வு பெறப்போகிறீர்கள். அதற்குள் உங்களின் சவால் நிறைவேறுமா?''
இந்தக் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் சிரிப்பு ஒன்றை மட்டுமே பதிலாகக் கொடுத்தார்.
மாவோயிஸ்ட் வேட்டையும் தொடர்கிறது. மாவோயிஸ்ட்டுகளின் வேட்டையும் தொடர்கிறது!

No comments:

Post a Comment