Tuesday, May 22, 2012

பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க இந்து கோயில் சூறை. இந்துக்கள் குவிந்ததால் பதட்டம் அதிகரிப்பு.



பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க இந்து கோயிலை மர்ம நபர்கள் நேற்று சூறையாடினர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் உள்ளது பெஷாவர். 160 ஆண்டுகள் பழமையானது. இந்நகரில் வரலாற்று சிறப்புமிக்க கோரக்நாத் கோயில் உள்ளது. இந்த கோயில் இந்தியா & பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு மூடப்பட்டிருந்தது. கோயிலை திறக்க அனுமதி கோரி இந்து அமைப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கோயிலை திறக்க கடந்த ஆண்டு பெஷாவர் ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதன்பின், கோரக்நாத் கோயில் திறக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடந்து வந்தன. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் தினமும் கோயிலில் வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில், மர்ம நபர்கள் நேற்று மாலை 6.30 மணிக்கு திடீரென கோயிலுக்குள் புகுந்து அங்கிருந்து விக்கிரகங்களை அடித்து நொறுக்கினர். கடவுள் படங்களை தீ வைத்து கொளுத்தினர். பின்னர் சில சாமி சிலைகளை கொள்ளை அடித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில், ÔÔகடந்த 2 மாதங்களில் நடந்த 3வது தாக்குதல் இது. இனிமேல் இதுபோல் தாக்குதல்கள் நடக்காதபடி போலீசார் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்ÕÕ என்று கூறினர்.

கோயில் தாக்கப்பட்டதை அறிந்து ஏராளமான இந்துக்கள் அங்கு குவிந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment