Saturday, May 19, 2012

தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்களை மிரட்டிய நித்தியானந்தா.


துரையை முற்றுகை இட்டு ஆதீன மீட்புக் குழுவினர் போராடி வரும் நேரத்தில், எதிர்ப்பாளர்களின் கூடாரமாக விளங்கும் சோழ மண்டலத்துக்குள் நுழைந்து, ஆதீனமும் நித்தியானந்தாவும் சவால் விட்டு இருக்கிறார்கள். 
கடந்த 16-ம் தேதி. மதுரை ஆதீனமும் நித்தியானந்தாவும் 7.15 மணிக்கு திடீர்ப் பயணமாக சுக்கிரன் தலமான கஞ்சனூருக்குக் கிளம்பினார்கள். தகவல் அறிந்து கஞ்சனூர், கோட்டூர், மணலூர், துகிலி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள், நித்தியானந்தருக்கு கறுப்புக்கொடி காட்டப்​போவதாக அறிவிக்கவே, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மதுரை ஆதீனமும் நித்தியானந்​தரும் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பே, அவர்களுக்கான குடைகள் ஆலவட்டம் வந்து இறங்கின. அரை மணி நேரத்துக்கு முன்பாக நித்தியானந்தரின் பக்தைகள் 20 பேர் வேனில் வந்து இறங்கினார்கள். அதன்பிறகு வந்து சேர்ந்த இருவரும், வாச லில் இருந்த பிள்ளையாரைத் தரிசித்து​ விட்டு, ஆதீனத்துக்குச் சொந்தமான பங்களாவுக்குள் நுழைந்தார்கள். அதன்பிறகு அக்னீஸ்வரனையும் அடுத்து சுக்கிரனையும் வழிபட்டு, வந்த கடமையை முடித்தார்கள்.  
இந்த திடீர் வருகைக்கு காரணம் என்னவாம்?
''எதிர்ப்பாளர்களின் மண்ணில் நின்றுதான், அவர்களின் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லவேண்டும் என்று நினைக்கிறார் நித்தியானந்தர். அதற்காகத்தான் இந்த வருகை. இதுவரை 151 நித்தியானந்த பீடங்கள் இருக்கின்றன. அடுத்து மயிலாடுதுறையில் எங்களது 152-வது பீடத்தை அமைக்கப்போகிறோம். 153-வது பீடம் திருப்பனந்தாளிலும், 154-வது பீடம் கும்ப​கோணத்திலும், 155-வது பீடம் தஞ்சையிலும் அமைக்கப்​பட இருக்கிறது. இந்த பீடங்களின் மூலம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் தொடங்கி சேவை செய்து நித்தியானந்தர் யார் என்பதைப் புரிய வைப்போம்'' என்று நித்தியானந்தரின் ஆதரவாளர்கள் புல்லரிப்​புடன் பேசினார்கள்.
''தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்களுக்குப் போகும் எண்ணம் இருக்​கிறதா?'' என்று கேட்ட போது, ''என்னை நிற்க வைத்து பேசத் தயாராக இருந்தால், நான் அங்கே சென்று அவர்​களுக்குப் பதில் சொல்லத் தயாராக இருக்​கிறேன். அவர்கள் என் மீது  சொல்வது பாலியல் புகார். ஒரு பெண்ணின் பெயர் சொல்கிறார்கள். ஆனால் நான் 40 பெயர்களைச் சொல்வேன்'' என்று சீறினார் நித்தியானந்தா.
இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இங்கே புதிய பீடம் அமைய இருக்கிறதாம். இனி மதுரையைப் போல் சோழ மண்டலமும் ஹாட்​டாக இருக்கும்!

No comments:

Post a Comment