Tuesday, May 22, 2012

அன்பை உட்கொள்ளுதல்! - அருள்வாக்கு



ஆத்மாவைப் பற்றி இப்படி அப்படி என்று ஒன்றும் நீ ‘கன்ஸீவ்’ பண்ணாமல் அது வாஸ்தவத்தில் எப்படியிருக்கிறதோ அப்படித் தெரியட்டும். ஆட்கொள்ளட்டும் என்று வெறுமே பார்த்துக்கொண்டிரு. ஸத்-சித், அகண்டம் என்றெல்லாம் அடைமொழி எதுவுங் கூடக் கொடுக்காதே! ‘எப்படியோ அப்படி’ என்று விட்டுவிட்டு இரு" என்று சொல்வதுண்டு. அப்படிப் பண்ணுவது கஷ்டந்தான் என்றாலும் அட்வான்ஸ்ட் நிலையில் முடியாத தில்லை. அடைமொழி கொடுத்து பாவித்துக் கொண்டே போகும்போது, தானாகவேகூட ஒரு ஸ்டேஜில் ‘இதெல்லாம் என்ன ஜோடிப்பு?’ என்று விட்டு விட்டு, ‘உள்ளபடி பார்ப்போமே!" என்று தோன்றும். அப்படி எந்த பாவனையுமில்லாமல் வெறுமே பார்க்கிறபோது (ஆத்ம) தத்வம் ஒரு வெறுமையாக, பாழாக, சூன்யமாகத் தோன்றக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஆகையினாலே (ஆத்மாவைக் குறித்து) வேறே ஒரு கன்ஸெப்ஷனும் இல்லாவிட்டாலும் கூட, அது வெறும் பாழில்லை, உயிர் என்ற அடிப்படையை மட்டும் விட்டுவிடக் கூடாது. 

உயிர் என்றவுடனேயே நாமும் அடிப்படையில் உயிரேயாகையால், தானாக உறவு ஏற்பட்டுவிடும். உறவு ஏற்படுகிறதென்றால் அன்பு வந்துவிட்டதென்று அர்த்தம். நிஜ அன்பாக அதை ஆக்கிக் கொள்ள வேண்டும் - சிற்றுயிருக்கு அந்தப் பேருயிரிலிருந்து எதையும் பெற்றுச் சேர்த்துக் கொள்கிற தப்பான அன்பாக இல்லாமல், இதை அதில் சேர்த்து, அது இதை அப்படியே உட்கொள்ள வேண்டும் என்று தவிக்கும் உண்மை அன்பாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment