Monday, May 7, 2012

எந்த செல்போன் நிறுவனங்களின் சேவை சிறப்பாக இருக்கிறது ?


ன்றைய தேதியில் இந்தியாவில் 90 கோடிக்கும் மேலாக செல்போன் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.தமிழகத்தில் சேவை அளிப்பதில் ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., ஐடியா, ரிலையன்ஸ், டாடா டொகோமோ, ஏர்செல், வோடஃபோன், யூனிநார் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன.செல்போன் சேவை அளிக்கும் நிறுவனத்தைத் தேர்வு செய்யும்போது, கட்டணம் கணக்கிடுவது நிமிடக் கணக்கிலா அல்லது நொடி கணக்கிலா என்பதைக் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில், கூடவே ரோமிங் கட்டணம் எவ்வளவு என்பதை யும் கவனிக்க தவறக்கூடாது. ஒருவர் எவ்வளவு நேரம் போன் பேசுகிறாரோ அதற்கேற்ப பிளானை தேர்வு செய்வதுதான் லாபகரமாக இருக்கும்.


மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி வசதி 52.63% பேருக்கு தெரிந்திருந்தாலும், கடந்த ஓராண்டில் வெறும் 3.97% பேர் மட்டுமே நிறுவனத்தை மாற்றி இருக்கிறார்கள். இப்படி மாறியவர்கள் விண்ணப்பித்த அன்றே 14.33% பேருக்கும், அடுத்த நாளில் 33.43% பேருக்கும், 3 முதல் 5 நாட்களில் 31.61% பேருக்கும், 6 முதல் 9 நாட்களில் 12.62% பேருக்கும், 9 நாட்களுக்கு மேல் 8.02% பேருக்கும் இந்த சேவை தரப்பட்டு இருக்கிறது. செல்போன் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை அளிப்பதில் ஐடியா நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது.இந்த ஆய்வு போஸ்ட் பெய்ட் சந்தாதாரர்கள் இடையே நடத்தப்பட்டது. இதில், குறிப்பிட்ட கட்டணத்திற்கு மேல் வசூலிக்கப்படுவதாக 27.41% பேர் கருத்து சொன்னார்கள். தகவல் எதுவும் கொடுக்காமல் கட்டணத்தை மாற்றி விடுவதாக 21.87% பேர் கருத்து சொன்னார்கள். மதிப்பு கூட்டு சேவையை கேட்காமலே சேர்த்து கட்டணமும் கழிக்கப் படுவது நடப்பதாக 25.46% பேர் சொன்னார்கள். பயன்படுத்தாத போன் அழைப்பு மற்றும் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக 25.26% பேர் சொல்லியிருக்கிறார்கள்.  செல்போனை குறைவாகப் பயன்படுத்தும் ஒருவர் தினசரி பத்து முறை போன் செய்கிறார். அதேபோல், அவருக்கு 10 அழைப்பாவது வருகிறது. இது நடுத்தரமாக பேசுபவர்களிடம் 20-20 ஆகவும், அதிகமாக பயன்படுத்துபவர்களிடம் 30-30 ஆகவும் இருக்கிறது. பி.எஸ்.என்எல். தவிர அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களிலும் மாநிலத் துக்கு மாநிலம் கட்டணம் வேறுபாட்டுடன் காணப்படுகிறது.செல்போன் பேச 95 சதவிகிதமும், எஸ்.எம்.எஸ். அனுப்ப 5% மட்டுமே பயன் படுத்தப்படுவதாகச் சொன்னது ஆச்சரியமான தகவல்தான்!

விகடன்  

No comments:

Post a Comment