Wednesday, May 30, 2012

அருள் மழை -- 59



செகந்தராபாதில் பெரியவா முகாம்அப்போது ரயில்வேயில் மூத்தஅதிகாரிகள் சிலபேர் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தனர்அவர்களுக்குஒரு பெரிய குறைஅது என்னவென்றால்..........     

"
பெரியவாளோட அனுக்ரகத்தால எங்களோட கர்மானுஷ்டானங்களைஎல்லாம் கூடியவரைக்கும் விடாமப் பண்ணிண்டு இருக்கோம்.ஆனா.........இந்த ஊர்லபூஜைஸ்ராத்தம்தர்ப்பணம் இதெல்லாத்தையும்சரியாப் பண்ணிவெக்கவேதம் படிச்ச சாஸ்த்ரிகள் இல்லேஒரேஒர்த்தர்தான் இருந்தார்.......அவருக்கும் பண்ணி வெக்கும்போது அவர்சொல்ற மந்த்ரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை........அர்த்தம்தெரியாம கர்மாக்களை பண்றதைஎங்காத்து பிள்ளைகள் ஏத்துக்கமாட்டேங்கறா........இந்தக் காலத்து பசங்களாச்சேஅதான்......பெரியவாதயவுபண்ணி மடத்துலேர்ந்து யாராவது வேதம் படிச்ச சாஸ்த்ரிகளா பாத்துஇந்த ஊருக்கு அனுப்பிச்சுக் குடுக்கணும்என்று ப்ரார்த்தனைபண்ணினார்கள்.

"
ஒங்காத்து பிள்ளைகள் சொல்றதுலேயும் ஞாயம் இருக்கு.........." என்றுஅவர் ஆரம்பித்தபோதுஸ்ரீமடத்துக்கான அன்றைய தபால்களை எடுத்துக்கொண்டு ஒரு postman வந்தார்பெரியவா மேலாக சில கடிதங்களைப்படித்துவிட்டுஒரு லெட்டரை எடுத்தார்அதில் PIN என்று இருந்த இடத்தைஅந்த அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி, "PIN ..ன்னு போட்டிருக்கே.....அதோடஅர்த்தம் தெரியுமா?"ரொம்ப சாதாரண கேள்விதான்ஆனால் அந்த அதிகாரிகளுக்குதெரியவில்லைகொண்டுவந்த தபால்காரருக்கும் தெரியவில்லை."POSTAL INDEX NUMBER " என்று தானே அதற்கு விளக்கமும் குடுத்தார்.சிரித்துக்கொண்டே அந்த அதிகாரிகளைப் பார்த்து " நீங்கள்ளாம் நெறையபடிச்சு பெரிய உத்தியோகம் பாக்கறவா.........ஆனாசாதாரண தபால்ல வரPIN க்கு ஒங்களுக்கு அர்த்தம் தெரியலே........அவ்வளவு ஏன்? PINCODE ன்னுஎதையோ எழுதின அந்த ஆஸாமிக்கே கூட அதோட அர்த்தம் தெரியாமஇருக்கலாம்ஆனா..........PINCODE ன்னு போட்டிருக்கற எடத்ல சரியானநம்பரை எழுதிட்டா........அது சரியா போய்சேர வேண்டிய எடத்துக்கு போறாமாதிரி.........பண்ணி வெக்கற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம்தெரியாட்டாலும்பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டாலும்,எந்த கர்மாவுக்கு எந்த மந்த்ரம் சொல்லணுமோ....அதை செரியா சொன்னா,அதுக்குண்டான பலனை அது குடுக்கும்அதுல ஒங்களுக்கு எந்த விதமானசந்தேஹமும் வேணாம்அதுனாலஇப்போ இருக்கற ப்ரோஹிதரைநிறுத்தாமநீங்க பண்ண வேண்டிய கர்மாக்களை ஸ்ரத்தையோடபண்ணிண்டு வாங்கோஒரு கொறைவும் வராது!" கையைத் தூக்கிஆசிர்வதித்தார்.
அதிகாரிகள் விக்கித்துப் போனார்கள்ஒரு சாதாரணஅன்றாடம் கவனத்தில்கூட வராத PIN னை வைத்தேஎப்பேர்பட்ட பெரிய சந்தேஹத்தைபோக்கிவிட்டார்

No comments:

Post a Comment