Monday, May 7, 2012

நானும் நீயும் ஒண்ணு!


ஸ்ரீ இராமபிரானுடன், சீதையும் லட்சுமணனும், பிரவாக மெடுத்து ஓடும் கங்கை நதியைக் கடந்து செல்ல, குகனின் ஓடத்தில் ஏற முற்பட்டனர்.அப்போது, குகனானவன் இராம பிரானிடம், பிரபோ, நீங்கள் உங்கள் கால்களைப் புழுதி இல்லாமல் சுத்தமாகக் கழுவிக் கொண்டு ஏறுங்கள்" என்றான்.எதற்காக இப்படிக் கூறுகிறாய்?" என்று லட்சுமணன் கேட்க, எம்பெருமானின் பாதத்துளிகள் பட்டவுடன், கல் ஒன்று அகலிகையாக மாறியதே. அதைப் போல இந்த ஓடமும் ஒரு பெண்ணாகி விட்டால், நான் இரண்டு மனைவிகளை வைத்துக் கொண்டு எப்படி ஜீவனம் நடத்துவேன்?" என்றானாம் விசனத்துடன்.படகோட்டியின் பதிலைக் கேட்டு வியந்த இராமபிரான், அக்கரை போய்ச் சேர்ந்தவுடன் சீதாதேவியின் மோதிரம் ஒன்றைப் பரிசாகத் தர, குகன் அதை மறுத்து, ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளியிடம் கூலி வாங்கக் கூடாது" என்றானாம்.குகனின் பதில் யாருக்கும் புரியவில்லை.

நான் எப்படி கங்கைக் கரையில் காத்து நிற்கும் மக்களை ஓடத்தில் ஏற்றி அக்கரையில் சேர்க்கிறேனோ, அதுபோல, இராமபிரானும் சம்சாரபந்தம் என்ற சமுத்திரத்தில் அவரது பாத கமலங்களைக் கொண்டு, மக்களை மோட்சம் என்ற கரையில் சேர்த்திடும் ஓடக்காரன் தானே?" என்றான் குகன், சிரித்துக்கொண்டே.

No comments:

Post a Comment