ஜெயலலிதா முகத்துக்கு நேரே கருணா நிதியைப் புகழ்ந்து பேசி, பரபரப்பு அரசியலுக்கு விதை போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்!
மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு விழா மற்றும் ஜெயா டி.வி-யின் 14-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி கடந்த 29-ம் தேதி சென்னையில் நடந்தது. விழா அழைப்பிதழில் ஜெயலலிதா பெயரைத்தவிர வேறு பெயர்கள் இல்லை. ரஜினி, கமல் மேடையேறுவதைக்கூட கடைசிவரை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தனர். ஜெயலலிதா வருவதற்கு முன்பே ரஜினி, கமல், கே.பாலசந்தர், இளையராஜா, ஏவி.எம்.சரவணன் ஆகியோர் மேடையில் அமர வைக்கப்பட்டனர். ஜெயலலி தாவைச் சேர்த்து எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக் கைகள். எம்.எஸ்.வி-க்கும் ராமமூர்த்திக்கும் 'திரை இசை சக்கரவர்த்தி’ விருதை அளித்து பொற்கிழிகள் வழங்கி கார்களையும் பரிசளித்தார் ஜெயலலிதா.
இதில் ரஜினி பேச்சுதான் ஹைலைட்!
''ஜெயா டி.வி-யில் சோ எழுதிய 'எங்கே பிராமணன்’ நிகழ்ச்சியை ரொம்ப ரசித்துப் பார்த் தேன். திடீரென்று அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விட்டது. என்ன காரணம் என்று விசாரித்தபோது சோ அதை தொடராமல் இருப்பது தெரியவர... அவரிடமே கேட்டேன். 'முதல்வர் ஜெயலலிதாவும் இதையே என்னிடம் கேட்டார். தொடர முடியாத காரணத்தை அவரிடம் சொல்லிவிட்டேன்’ என்றார். இதில் இருந்து தெரிவது என்னவென்றால், முதல்வர் சொல்லியும் கேட்காத ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் சோ மட்டும்தான்'' என்று ரஜினி சொன்னபோது எதிரே உட்கார்ந்திருந்தார் சோ. ரஜினியைப் பார்த்து கையை நீட்டிவிட்டு, அப்படியே சீரியஸாக தலையில் வைத்துக் கொண்டார் சோ. இதை அங்கே இருந்த திரையில் காட்ட... கூட்டத்தினர் ரசித்துச் சிரித்தனர்.
தொடர்ந்து பேசிய ரஜினி, ''ஒவ்வொரு மனிதனும் இரண்டு முறை இறக்கிறான். பேரும் புகழும் பெற்றவர்கள் அதை இழக்கும்போது அவர்களுக்கு ஒரு முறை மரணம் நேரும். இரண்டாவது, உடலில் இருந்து உயிர் பிரியும்போது ஏற்படும். சாகாவரம் பெற்றவர்கள் இறந்தாலும் அவர்களின் புகழ் மறையாது. தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றவர்கள் மறைந்தாலும் அவர்கள் புகழ் மறையவில்லை. அந்த வகையில் இப்போது அரசியலில் இருக்கும்....'' என்று லேசாக நிறுத்திய ரஜினி...
''என் ஆருயிர் நண்பர் கலைஞர்'' என்று சொல்லி அதிர வைத்தார். மேடையில் இருந்த முதல்வரின் முகம் மாற ஆரம்பித்தது. தொடர்ந்து பேசிய ரஜினி, அடுத்ததாக,
''புரட்சித் தலைவி போன்றவர்களின் புகழ் என் றும் அழியாது'' என்றும் சொல்லி வைத்தார்.
எப்போதும் ரஜினியின் வாய்ஸ் சர்ச்சைக் குரியதாகவே ஆகும். முன்பு, ஜெயலலிதாவை எதிர்த்து வாய்ஸ் வந்தது. இப்போது, ஜெயலலிதா முன்பே கருணாநிதியை புகழ்ந்து!
No comments:
Post a Comment