பாவம், அருணகிரி நாதர்! அடுத்த ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்துவிட்டு, இப்போது அவரை நீக்கவும் முடி யாமல், முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் மனம் இல்லாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்து வருகிறார்.
திடீரென மனம்மாறி நித் தியின் சீடர்களைத் திட்டி வெளியே அனுப்புவதும், பின்னர் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வதுமாக மதுரை ஆதீனம் குழம்பிக் கிடக்கிறார். இந்த பிரச்னை காரணமாக உடல்நலம் குன்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். நித்தியின் சீடர்கள் எல்லை மீறிவிடாமல் வைஷ்ணவி உள்ளிட்ட சுவா மியின் ஆதரவாளர்கள் கணப் பொழுது கூட அவரைப் பிரி யாமல் அருகில் இருந்தே பார்த் துக் கொண்டனர்.
சிகிச்சை முடிந்து மதுரை திரும்பிய அருணகிரிநாதர், நித்தி யானந்தாவின் படங்களையும், அவர் படம் போட்ட பெயர்ப் பலகையையும் ஆதீனத்தில் இருந்து அகற்ற உத்தரவு போட்டார். இந்தநிலையில், கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு வந்தார் நித்தி. மதுரை ஆதீனத்திடம் இதுபற்றி பேசியவர், குரலை உயர்த்தி தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்ததாகச் சொல்கிறார்கள். பதில் பேச முடியாமலும், கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாமலும் தவித்த அருணகிரி, தன் ஆதரவாளர்கள் சிலரிடம் இதைச்சொல்லி வேதனைப்பட்டாராம். மறுநாளே, திருவண்ணா மலை போய்விட்டார் நித்தி.
இந்தநிலையில், சைவ மடத்தின் இளைய மடாதிபதியான நித்தி, எதிரிகளை வீழ்த்துவதற்காக கருப்பணசாமிக்கு ஏழு ஆடுகளைப் பலி கொடுத் ததாக செய்தி பரவவே, கிடுகிடுத்துப் போயிருக்கிறார் மதுரை ஆதீனம். இதுபற்றி நம்மிடம் பேசிய மதுரை ஆதீன ஊழியர் ஒருவர், ''சைவ மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டாலும் கூட, தனது இஷ்டதெய்வம் கருப்பணசாமி, பைரவர், காளி ஆகியோர்தான் என்று வெளிப்படையாகவே சொன்னவர் நித்தியானந்தா. போலீஸுக்குப் பயந்து பெங்களூருவில் இருந்து தப்பி வந்தபோதும், அமெரிக்க நீதி மன்றத்தில் வழக்கு நடந்தபோதும் அவர் அழகர்கோயில் சென்று கருப்பணசாமியைத் தரிசனம் செய்தார். இதேபோல, கடந்த 10-ம் தேதி இரவு திடீரென மதுரைக்கு வந்த நித்தி, மறு நாள் காலையில் அழகர் கோயில் சென்று அங்குள்ள கருப்பணசாமியைத் தரிசனம் செய்தார். அப்போதுதான் அவர் சார்பில் ஏழு கிடாக்கள் பலியிடப்பட்டுள்ளன'' என்றார்.
''முதல் ஆடு பலி கொடுக்கும் வரை, கருப்பணசாமி சந்நிதி யிலேயே இருந்த நித்தியானந்தா, பின்னர் தன்னுடைய காரில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அத்தனை கிடாக்களும் பலி கொடுக்கப்பட்டு பூஜை செய்யப் பட்ட பிறகே அங்கிருந்து புறப் பட்டுச் சென்றார். அவர் கறி விருந்து சாப்பிடவில்லை. ஆனால், அன்று கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான்'' என்றார் விருந்துண்ட பக்தர்களில் ஒருவர்.
கருப்பணசாமி கோயில் பூசாரி மனோகரனிடம் கேட்டபோது, ''எதிரிகளால் தங்களுக்கு ஆபத்து என்றால், 'கருப்பா என்னையக் காப்பாத்து’ என்று வேண்டி, ஆடு பலி கொடுப்பது இங்கே வழக்கம். நித்தியானந்தா இங்கே சாமி தரிசனம் செய்ததும், அப்போது ஆடுகள் பலி கொடுக்கப்பட்டதும் உண்மைதான். ஆனால், அந்த ஆடுகளை நித்தியானந்தா பலி கொடுக் கவில்லை. வேறு சிலர்தான் ஆடுகளைக் கொண்டு வந்தனர். நித்தியானந்தா சார்பில் வேறு யாரேனும் ஆடுகளைப் பலி கொடுப்பது தப்பு இல்லை'' என்றார்.
இதுபற்றி கருத்துக் கேட்க மதுரை ஆதீனத் தைத் தொடர்பு கொண்டோம். அவர் போனை எடுக்கவே இல்லை. நேரில் சென்றால், ''சுவாமியைப் பார்க்க நான் அனுமதி வாங்கித் தர மாட்டேன். வேறு யார் மூலமாவது முயற்சி செய்யுங்கள்' என்றார் அவருடைய செயலாள ரான வைஷ்ணவி.
நித்தியின் சீடர்களிடம் கேட்டபோது, ''எங்கள் சாமி சுத்த சைவம். உயிர்க் கொலையைக் கடுமையாக எதிர்ப்பவர். இப்படி ஒரு பூஜை செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் வந்தால், தன் தலையைப் பலி கொடுப்பாரே தவிர, பிற உயிர்களைக் கொல்ல மாட்டார்'' என்றார்கள்.
இந்தப் பிரச்னைக்குப் பிறகு, ஆதீனத்தைச் சந்தித்து விட்டு வெளியே வந்த மீனாட்சிப் பிள்ளைகள் அமைப்பின் நிர்வாகி ஜெகதல பிரதாபனிடம் பேசினோம்.''எதிரிகளை நிர்மூலமாக்குவதற்குத்தான் ஆடுகளைப் பலி கொடுத்திருக்கிறார் நித்தி. எதிரிக்கு ஒன்றாக மொத்தம் ஏழு எதிரிகளைக் குறி வைத்துதான் அவர் ஏழு ஆடுகளைப் பலி கொடுத்திருக்கிறார். அதில் ஒரு எதிரி நான். இன்னொரு எதிரி மதுரை ஆதீனம். இந்தத் தகவலை நான் ஆதீனத்திடமே சொல்லி விட்டேன். அதிர்ச்சி அடைந்தவர், 'வரவர நித்தியோட போக்கே சரியில்லை. இப்படியே விட்டால், இங்கே போடுகிற அன்ன தானத்தையும் அசைவமாக்கிடுவார். அவரோட செயலால் மற்ற ஆதீன கர்த்தர்கள் கிட்ட நான் தலைகுனிஞ்சி நிற்க வேண்டியது இருக்கு’ன்னு வேதனைப்பட்டார்'' என்றார்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..!
No comments:
Post a Comment