Tuesday, September 25, 2012

காவிரி ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் உத்தரவு போடவில்லை. கர்நாடகத்திற்கு வேண்டுகோள்தான் விடுத்தார்.





திர்காலத்தில் தண்ணீருக் காகத்தான் உலகில் யுத்தம் மூளும் என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால், காவிரி விவ காரத்தில் இப்போதே தமிழகமும் கர்நாடகமும் உள்நாட்டுப் போரை சந்தித்து வருகின்றன.   
தாழ்வான நிலப்பரப்பில் உள்ள தமிழகப் பாசனத்துக்குத் தேவை யான நீரை, காவிரி நதிதான் கொடுத்து வந்தது. ஆனால், கர்நாடக மாநிலம் திடீரென புதிய புதிய அணைகளைக் கட்டி, தண்ணீ ரைத் தேக்கிக்கொண்டதால், தமிழகத்துக்குத் தண்ணீர் வரத்து சிக்கலானது. இரண்டு மாநிலத் துக்கும் இடையிலான மோதலைத் தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் நடுவர் மன்றம் 1991-ம் ஆண்டு 205 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத் துக்கு வழங்க உத்தரவிட்டது. பின்னர், 2007-ல் கொடுக்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் 419 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கச் சொன்னது. ஆனால், இடைக்கால தீர்ப்பின்படியோ அல்லது இறுதித் தீர்ப்பின்படியோ தமிழகத்துக்குப் பலன் கிடைக்கவே இல்லை. அதனால், ஆண்டு தோறும் சட்டப் போராட்டத்தை தமிழக அரசு நடத்தி வருகிறது. வருண பகவான் கண் திறந்தால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வரும் என்பதுதான் உண்மை நிலை.
கடந்த ஆண்டு, டெல்டா விவசாயி கள் குறைந்த அளவுக்கே குறுவை சாகுபடி செய்தனர். பருவமழை பொய்த்ததால், சம்பா சாகுபடியும் இந்த ஆண்டு கடுமையாகப் பாதிக்கும் நிலை. ஆனால், கோடை காலத்திலேயே கர்நாடகாவில் சுமார் 60 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. அவர்கள் அதைத் தமிழகத்துக்குக் கொடுக்காமல் பயன்படுத்துவார்கள் என்பதை உணர்ந்து, அதைத் தடுக்க ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது. பிரதமர் தலைமையில் இருக்கும் காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை நடத்தக்கோரி மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தது. இந்தப் போராட்டத்துக்குப் பின்னர்தான் மத்திய அரசைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், ஆணையத்தைக் கூட்டச் செய்தது. மேலும், செப்டம்பர் 12-ம் தேதி முதல் 10 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகா தினமும் தமிழகத்துக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தது.
தமிழக அரசு நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாகத்தான் பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் செப்டம்பர் 19-ம் தேதி கூடியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் முன்னிலையில் மத்திய நீர்பாசனத் துறை அமைச்சர், ''கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வரை தமிழகத்தில் 21 சதவிகிதம் வரையும் கர்நாட காவில் 18 சதவிகிதம் வரையும் பருவமழை பொய்த்துள்ளது'' என்று சர்ச்சையைத் தொடங்கி வைத்தார்.
நிலைமையைக் கவனித்த பிரதமர் மன்மோகன் சிங், ''செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15 வரை தினமும் 9,000 கன அடி தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாமல் கர்நாடகம் வெளிநடப்பு செய்யவே, தமிழகம் மீண்டும் தவிக்கிறது. தமிழக முதல்வரும் பிரதமரின் உத்தரவை ஏற்கவில்லை. இதுகுறித்து, தமிழக அரசு வட்டாரங்களில் பேசினோம். ''இரு மாநிலங்களின் பிரச்னைகளையும் கேட்ட பிரதமர், இதுதான் பொருத்தமானது என்று கூறி அவராகவே ஒரு முடிவு எடுத்தார். ஆனால், அவர் உத்தரவு போடவில்லை. ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் கட்டளையிட்டிருக்க முடியும். மிகக்குறைந்த அளவு சொன்னதைக்கூட ஏற்றுக் கொள்ளாமல் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் வெளிநடப்பு செய்து விட்டார்.
இப்போது நம்மிடம் இருப்பது 45 டி.எம்.சி. தண்ணீர். இதை முழுமையாகத் திறந்து விட்டால் ஒரு மாதத்தில் மேட்டூர் காலியாகி விடும். இதனால், நாள் ஒன்றுக்கு இரண்டு டி.எம்.சி. தண்ணீர் வீதம் 24 நாட்களுக்கு முதல்வர் கேட்டார். தினமும் ஒரு டி.எம்.சி. தண்ணீர் வந்தால் கூட, சம்பா பயிரைக் காப்பாற்றிவிட முடியும். ஆனால், இப்போது எதற்கும் வழியில்லை. பிரதமர் சொன்ன குறைவான அளவை ஏற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் சட்டப் பிரச்னையாகும். மேலும் இது ஒரு முன்மாதிரியாகி விடக்கூடாது என்பதற்குத் தான் தமிழக முதல்வரும் பிரதமர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் உண்மை என்னவென்றால், அடுத்த ஆண்டு கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில்தான் காங்கிரஸ் அரசு நடந்து இருக்கிறது. மத்திய அரசும் கர்நாடக அரசும் சேர்ந்து நடத்திய கூட்டுச்சதியை எதிர்த்து தமிழக முதல்வர் ஆவேசப் போராட்டம் நடத்தியதை மத்திய காங்கிரஸ் அமைச்சர்களே பாராட்டினார்கள்'' என்றார்கள்.
'கர்நாடகத்தில் இப்போது கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் நிரம்பியுள்ளன. நான்காவது அணையான கிருஷ்ண ராஜ சாகரும் நிரம்பும் சூழ்நிலை. ஆனாலும் தண்ணீரை அளிக்க மறுக்கிறது’ என்று ஒட்டுமொத்த தமிழகத்தின் சார்பில் உரிமைக் குரல் எழுப்பி இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இந்தக் குரலை ஒட்டுமொத்த தமிழகமும் வழிமொழிந்தால்தான் உச்ச நீதிமன்றம் உறுதியான நடவடிக்கை எடுக்கும். அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுக்கும் என்றே நம்புவோம்!

No comments:

Post a Comment