பிரான்ஸ் நிறுவனம் தயாரித்த செயற்கை மார்பகங்களை பொருத்திய 30000 இங்கிலாந்து பெண்களுக்கு அவற்றை அகற்றுவதற்காக பணம் வழங்குவதாக பிரெஞ்ச் அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் மட்டும் இதுவரை 40000 பெண்கள் இந்த பிஐபி நிறுவனம் தயாரித்த குறைபாடான செயற்கை மார்பகங்களை பொருத்தியுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாலி இம்பிளான்ட் பிரோதீஸ் என்ற நிறுவனம் செயற்கை மார்பகங்களைத் தயாரித்து வந்தது. இந்த நிறுவனத்தின் செயற்கை மார்பங்களை அறுவைச் சிகிச்சை மூலம் கிட்டத்தட்ட 40,000 இங்கிலாந்துப் பெண்கள் பொருத்தியுள்ளனர். ஆனால் இந்த செயற்கை மார்பகத்தில் குறைபாடுகள் இருப்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. தரக்குறைவான சிலிகான் பில்லர் அந்த செயற்கை மார்பகத்தில்இருப்பதால் தவறான மார்பகங்களைப் பொருத்திக் கொண்டவர்களை, அதை அகற்றுமாறு பிரான்ஸ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
செலவை ஏற்றுக்கொள்ளும்
இந்த செயற்கை மார்பகத்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று இங்கிலாந்து மருத்துவ கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. செயற்கை புற்றுநோய் போன்ற பாதிப்பு ஏற்படாது என்றாலும் அதை அகற்றி விடுமாறு பிரெஞ்சு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த செயற்கை மார்பகத்தை அகற்றுவதற்கு ஆகும் செலவினையும் ஏற்றுக்கொள்வதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை ஏற்று 30000 இங்கிலாந்து பெண்கள் தாங்கள் பொருத்திய செயற்கை மார்பகத்தை அகற்றை முன்வந்துள்ளனர்.
3 லட்சம் செயற்கை மார்பகங்கள்
கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் உலக அளவில் 3 லட்சம் பேர் இந்த பிஐபி நிறுவனம் தயாரித்த சிலிக்கான் மார்பகங்களை பொருத்தியுள்ளனர். அதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்கள் 30000 பேர் இந்த சிலிக்கான் மார்பகத்தை பொருத்தியுள்ளனர். தவறான, குறைபாடுள்ள மார்பகத்தை பொருத்தியதற்காக கடந்த ஆண்டே பிஐபி நிறுவனம் தடை செய்யப்பட்டுவிட்டது குறைபாடுடைய சிலிக்கான் மார்பகங்களைப் பொருத்திய பெண்கள் ஏதாவது உடல் நல உபாதைகளை சந்தித்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகுமாறும் பிரான்ஸ் அரசு கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment