Friday, December 23, 2011

போயஸ் கார்டன் நிர்வாகியாக சோ மகன் நியமனம்

அதிரடி அரசியலுக்கு பெயர் பெற்றவர், ஜெயலலிதா. நேற்று சசிகலா உட்பட 14 பேரை கட்சியில் இருந்தும், வீட்டில் இருந்தும் வெளியேற்றி தமிழக மக்களுக்கு ஒரு பரபரப்பு செய்தியை தந்தார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்களை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார், ஜெயலலிதா.




இதுவரை போயஸ் கார்டனின் இன்சார்ஜ் சசிகலா கையில் இருந்தது. அவர்தான் ஜெயலலிதாவின் போய்ஸ் கார்டன் வீட்டை நிர்வகித்து வந்தார். இந்த பொறுப்பு மற்றும் வேறு பல பொறுப்புகளின் சசிகலா அன் கோவே இருந்து வந்தது. அனைவரையும் ஜெயல்லைதா தூக்கி வெளியேற்றிவிட்டார்.

இப்பொழுது போயஸ் கார்டனின் தலைமை நிர்வாகியாக சோ (சோ ராமசாமி)வின் மகன் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் இனி எக்ஸிகுட்டீவ் அட்மினிஸ்ட்ரேட்டர். போய்ஸ் கார்டனில் முன்பு வேலை பார்த்த நான்கைந்து பேரை சசிகலா தூக்கிவிட்டார். இப்பொழுது அவர்கள் நான்கு பேரையும் மீண்டும் போய்ஸ் கார்டனுக்கு அழைத்து பழையபடி வேலையை பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். இப்படி சசிகலா களையெடுப்பு அதிரடியாக நடந்துகொண்டு இருக்கிறது.

No comments:

Post a Comment