"எங்களுக்கு வாழ்வளிக்கும் தமிழ்நாட்டிற்கு முல்லைப் பெரியாற்று தண்ணீர் கொடுங்கள்' என கோவை தமிழ்நாடு ஹோட்டலின் முன் கேரளா வைச் சேர்ந்த கோவை வாழ் மலையாளிகள் கேரளாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு இங்குள்ள மலையாளிகள் பலரும் ஆர்ப்பாட் டக்காரர்களை மிரட்டுவதாக செய்திகள் கசிய...
நாம் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்திய அனூப் ஆண் டனியிடம் பேசினோம்.…ரொம்பவும் கலங்கிப்போன விழிகளோடு மலை யாளமும் தமிழும் கலந்து பேசிய ஆண்டனி…""ஆமாம்... நங்களு செய்த ஜாத போறதுக்கு (ஆர்ப்பாட்டம்) இவுடே ஜீவிச்சு வளர காசுண் டாக்கிட்ட கேரள மலையாள ஓனர்ஸ் மெரட்டணுண்டு.
நங்களு எதுக்குவேண்டி ஜாதபோறத செஞ்சோம்? ஈ கோய முத்தூர்ல மட்டும் 3 இலக்ஷம் மலை யாளிக டீக்கடை, பேக்கரி, சொர்ண ஷாப்கள் வச்சும், கோலேஜ்ல படிக் கறதுன்னும் ஜீவிதம் செய்யுணுண்டு. இவடயுள்ள மலையாளிக யாவரையும் தமிழங்க ஒரு சகோதரனப் போலானு பாக்குணுண்டு. அப்படியிருக்கற பட்சத்தில் தேவையில்லாத்து...… இடியாத்த ஒரு முல்லைப் பெரியாறு டேம பொட்டிப் போகும்னு பொய்யாயிட்டு கேரள மலையாளிகளிடத்து பரைஞ்சு ஈ முல்லைப் பெரியாறு இஷ்யூவ கேரளா பொலிட்டீசியன்ஸ் விஸ்வரூபமாக்கி.
அதுகொண்டு அவுடேயுள்ள தமிழ்க் காரங்கள அடிச்சு மலையாளிக துரத்தறதும், உயிரக் கையில வச்சுட்டு ஆ மக்கள் செறிய குட்டிகளோடு கதறி இவுடே சாடி வர்றதும் கண்டு நங்களு பதை பதைச்சுப் போயி. இது டேஞ்சர். அதைப்போலவொரு பாவமான காரியம் பூலோகத்தில் ஏதுமுண்டோ?இதை கண்டிக்கலையெங்கில் நங்களு மனுச சென்மமில்லான்னு இவுடேயுள்ள 58 கேரள மலையாளிக அசோஷியேஷனிடத்தும் ’ஞானும் என் ப்ரண்ட்ஸ்களும் பரைஞ்சு. அசோஷியேஷனும் இது கரெக்ட்டான டெஸிசன்னு பரைஞ்சு கோ-ஆப்பரேஷன் தர்றோம்னு அசோசியேஷன்களும் ஒப்பு (வாக்கு) கொடுத்து.
30,000 ஆளுக்காரு ஒண்ணாயிட்டு ஜாத கூடாமுன்னு நங்களு தீர்மானிச்சு. அப்பத்தானு இவுடே காந்திபுரம் கிராஸ்கட் ரோட்ல சொர்ணக் கடை வச்சுருக்கும் லிஜோ, ஆயுர்வேத வைத்திய சாலையினுண்டே ஒரு டாக்டரு, அப்புறம் மலையாளம் கத்துண்டே ஒரு ரிப்போர்ட்டரும்… தேவையில்லாத்து நீங்க செய்யுணுண்டு. நம்ம கேரள மக்கள எதிர்த்தானு நீங்க ஜாத கூடறதுண்டு. ஈ தமிழ்க்காரங்களுக்கு சப்போர்ட் செய்யறேன்னு நம்ம மக்களுண்ட பகை சம்பாதிக்காம் நிங்களு போகுணுண்டு.
அப்புறம் ஏது ஆயிட்டாலும் நங்களு பொறுப்பல்லன்னு என்னையும் அசோசியேஷன்காரங்களையும் மெரட்டி, அதுனாலயே பேடிபிச்ச ஆளுக்காரு போக ஜாத கூடறதுக்கு 300 ஆளுக்காரே வந்து. இவுடேயுள்ள தமிழ்கார மூலம் ஜீவிதம் செய்யும் ஈ ஆளுக்காரு ஈ தமிழ் மக்களுக்கு செய்யும் பச்சைத் துரோகமானு...''… என வெடிக்கிறார்.
இதை வன்மையாய் கண்டிக்கும் பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கு.ராம கிருஷ்ணன், ""எங்களுக்கும் இந்தத் தகவல் வந்தது. இங்கே கடை வைத்து பிழைப்பு நடத்தும் பவிழம் ஜூவல் லர்ஸ் லியோ சுங்கத் தும், ஆயுர்வேத வைத்திய சாலையினுடைய டாக்டர் நம்பியாரும், மலையாள மனோரமாவினுடைய அந்த நிருபரும் சேர்ந்து… தமிழர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீர் கேட்டவர்களை மிரட்டியிருக்கிறார்கள்.. லிஜோ சுங்கத்தின் அண்ணன் கோவை கோட்டத்தை பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இணைக்க வேண்டி கேரளாவில் போராட்டம் நடத்தியவன். ஆனால் அவன் பிழைப்பது கோவை மண்ணில்தான்.
அதேபோல ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியன் நம்பியார் "டேம் 999' படம் எடுத்ததற்காக, எடுத்தவனுக்கு கேரளாவில் பாராட்டுவிழா நடத்தியிருக்கிறான். அவன் பிழைப்பும் இந்த கோவையில்தான்.
அதேபோல அமிர்தானந்தாவின் அமிர்தா டி.வி.யில் தடை செய்யப்பட்ட "டேம் 999' படத்தை ஒளிபரப்பியிருக்கிறார்கள். அந்த அமிர்தானந்தா அம்மையாரும் இதே கோவையில் தான் கல்லூரி கட்டி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்.
அந்தப் பத்திரிகையாளன் உட்பட நமக்கு எதிராகப் பேசிக்கொண்டிருப்பவர்களின் பிழைப்பு தமிழனின் வியர்வையில்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்ற கேரள மலையாளிகளின் கோஷத்தை இவர்கள் எல்லோரும் இங்குள்ள மலையாள மக்களிடையே ரகசியமாய் கோஷமிட்டு வருகிறார்கள்.
அதோடு தடை செய்யப்பட்ட "டேம் 999' படத்தின் சி.டி.யை இவர்கள் கோவை மலை யாளிகளிடையே விநியோகித்துக்கொண்டிருக்கிறார்கள். இது இங்குள்ள தமிழக-கேரள மக்களுக்கிடையே உள்ள ஒற்றுமையைக் குலைக்கிற செயல்.
தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்யும் போக்கை இந்த மலையாளிகள் இன்னமும் கடைப்பிடித்தால்… குட்ட குட்ட தமிழன் குனிந்துகொண்டே இருக்கமாட்டான் என்பதையும், உணவிடுபவனை உள்ளளவும் நினை என்பதையும் இந்த தமி ழினத் துரோகிகளுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்'' என்கிறார் கொதிப்பாய்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் கோவையையும் பற்றிக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment