அம்மாக்களுக்கு குழந்தைகள் ஒல்லியாக இருந்தாலும் கவலை; குண்டாக இருந்தாலும் கவலை. வளரும் பருவத்தில் குழந்தைகள் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தால் மட்டும் போதாது; சத்தானதாகவும் இருக்க வேண்டும்.
பொதுவாக, ஒரு வயதில் இருந்து ஆறு வயது வரை ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் ஒரே மாதிரியான ஊட்டச் சத்துக்கள்தான் தேவைப்படும். ஏழு வயது முதல் இருபாலருக்கும் தேவைப்படும் சத்துக்களில் சிறிது மாற்றம் ஏற்படும். இந்த வயதில் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு அதிக எடை கூடும். காரணம் - ஹார்மோன் மாற்றங்கள்.
ஒரு வயது முதல் 12 வயது வரையிலானவர்களுக்கான சரியான உடல் எடை, அவர்களுக்கு தினமும் தேவைப்படும் சத்து, அது கிடைக்கக் கூடிய உணவு ஆகியவற்றின் அளவுகளைத் துல்லியமாக அடுத்த இரண்டு பக்கங்களிலும் 'படையல்’ இடுகிறார் விஜயா மருத்துவமனையின் சீஃப் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி. இந்த அட்டவணையை உங்கள் வீட்டின் சாப்பாட்டு அறையில் கண்ணில் படும் இடத்தில் ஒட்டிக்கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகள் உணவை ருசித்து, ரசித்து, நன்றாக மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிட உற்சாகப்படுத்துங்கள்.
No comments:
Post a Comment