ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் ரயில்களின் எண்ணிக்கையும் அதி கரித்துவரும் சூழலில், ரயில் நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்கிற குரல்கள் பொதுவாக ரயில் பயணிகளிடம் வலிமையாக எதி ரொலிக்கிறது. அந்த வகையில், சென்னை தாம்பரத்தை மூன்றாவது முனையமாக (டெர்மினல்) சர்வதேச தரத்திற்கு மாற்றி, தெற்கு நோக்கி செல்லும் ரயில்களை தாம்பரத்திலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது ரயில்வே நிர்வாகம். இதற்குதான் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. குறிப்பாக, வட சென்னைவாசிகளிடம் இந்த எதிர்ப்புகள் ஏகத்துக்கும் எதிரொலிக்கிறது. இதற்காகவே "தமிழ்நாடு ரயில் பயணிப்போர் உரிமை கள் தீர்வகம்' என்கிற அமைப்பையும் உருவாக்கி யுள்ளனர்.
இந்த அமைப்பின் அமைப்பாளர் ஜெயச்சந்தி ரன்,’""தமிழகத்தின் முதல் ரயில் நிலையம் ராயபுரம். இது, 72 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சென்னை சென்ட்ரல் மற்றும் எக்மோருக்கு அடுத்தபடியாக ராயபுரத்தைத்தான் மூன்றாவது முனையமாக மாற்றவேண்டுமென நாங்கள் பல வருடங்களாக போராடி வருகிறோம். இந்நிலையில் தாம்பரத்துக்கு மாற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி. சென்னையிலிருந்து 34 கிலோ மீட் டர் தூரமுள்ள தாம்பரத்தை மூன்றாவது முனைய மாக்க முயற்சிப்பது எந்த வகையிலும் ஆரோக்கிய மானதல்ல. எக்மோரிலிருந்து புறப்படும் ரயில்களை ராயபுரத்திலிருந்து இயக்கினால் போக்கு வரத்து நெரிசல் பெரிதும் குறையும். குறைக்கவும் முடியும்.
சென்ட்ரலில் 14 நடைமேடைகளும் (பிளாட் ஃபார்ம்), எழும்பூரில் 9 நடைமேடைகளும் உள்ளது. ஆனால், ராயபுரத்தில் 16 நடைமேடைகளை அமைக்க முடியும். அதற்கேற்ப அத்தனை வசதிகளும் இருக் கிறது. சென்னையின் வடபகுதிகளுக்கும் மத்திய பகுதிகளுக்கும் வந்து போகிற மக்கள், தாம்பரத் தோடு ரயில் நின்றுவிட்டால்... பெரும் அவதிக்குள் ளாவார்கள். மூன்றாவது முனையமாக ராயபுரத்தை உருவாக்காமல் தாம்பரத்தை மாற்றுவது எந்த வகையிலும் ஆரோக்கியமானதில்லை என்பதையும் தாம்பரத்தை விட ராயபுரமே எல்லா வகையிலும் வசதியானது என்பதையும் ஆதாரபூர்வமாக மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, தற்போதைய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரி வேதி மற்றும் ரயில்வே உயரதிகாரிகள் என பலரை யும் சந்தித்து முறையிட்டுள்ளோம். ஆனால் அதனை உருவாக்காமல் தடுக்க சதி நடக்கிறது''’என்கிறார்.
சி.பி.எம். தொழிற்சங்கமான டி.ஆர்.ஈ.யூ.வின் பொருளாளர் இளங்கோ,’""ராயபுரம் நிலையத் துக்கு 72 ஏக்கர் நிலம் இருப்பதாக சொல்வதே தவறானது. காரணம், இந்த 72 ஏக்கரில் ரயில்வே குடியிருப்பு, ரயில்வே மருத்துவமனை, ரயில்வே பிரஸ், லோகோ ஷெட் எல்லாம் இருக்கிறது. முனையமாக்கினால் இவைகளையெல்லாம் அகற்றியாவிடுவார்கள்? இவைகளை தவிர்த்துப் பார்த்தால், நடைமேடை அமைப்பதற்கான அல்லது விரிவுபடுத்துவதற்கான இடம் என்பது ராயபுரத்தில் ரொம்ப குறைவுதான். இந்த குறை வான இடம் மூன்றாவது முனையமாக அமைப் பதற்கு போதுமானதாக இருக்காது.
ராயபுரத்திலுள்ள சர்வீஸ் ஸ்டேஷனை அரக்கோணத்திற்கு மாற்றிவிடலாமே என்கிறார் கள். இது எப்படி சரியானதாக இருக்க முடியும்? காரணம், அரக்கோணம் நெருக்கடியான பகுதி. அதை விரிவு படுத்தவும் முடியாது. வடசென்னை என்பதே போக்குவரத்து நெரிசலான பகுதி. எந்த வகையிலும் அங்கு போக்கு வரத்து நெரிசலை குறைக்க மாற்று திட்டம் இல்லை. இந்தச் சூழலில் ராயபுரத்தை முனையமாக்கினால் ஏற்படும் கடும் போக்கு வரத்து நெரிசலை எப்படி சமாளிப்பீர்கள்? ஆனால் இந்த பிரச்சினையெல்லாம் தாம்பரத்தில் இல்லை.
இன்னொரு விஷயம்... செங்கல்பட்டி லிருந்து திண்டுக்கல் வரை சிங்கிள் லைன் உள்ளது. அடுத்த 5 வருடத்தில் இது டபுள் லைனாகப் போகிறது. அப்போது தென்னிந் திய மக்கள் அதிகம் சென்னைக்கு வந்து போக, ரயில்கள் அதி கம் தேவை. நிறைய ரயில் விடணும்னா டெர்மினல்களும் அதிகமாக தேவைப் படுகிறது. அதற்கு தாம்பரம்தான் வசதி. எக்மோரை நோக்கி வரும் ரயில்கள் சேத் துப்பட்டில் வெகு நேரம் நிற்பதை நாம் பார்க்கலாம். காரணம் ரூட் கிளியர் செய்து எக்மோருக்குள் ரயிலை உடனுக்குடன் அனுப்ப முடிவதில் லை. போதிய அளவுக்கு பிளாட்ஃபாம் இல்லாததால்தான் இந்த பிரச்சனை. அதனால் எந்த வகையில் பார்த்தாலும் மூன்றாவது முனையமாக தாம்பரத்தை உருவாக்குவதே ஆரோக்கிய மானது''’என்கிறார் ஆவேசமாக.
இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக் கும் நிலையில், தென்னக ரயில்வேயின் உயரதிகாரிகளிடம் இது குறித்து நாம் விவாதித்தபோது, ""மத்திய ரயில்வே போர்டு கடந்த வருடம் ஒரு முடிவினை எடுத்திருக்கிறது. அதாவது பயணிகளின் எண்ணிக்கைகேற்ப ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேணும். அதற்கேற்ப ரயில் முனையங்கள் உருவாக் கப்பட வேண்டும். அப்படி உருவாக்கப்படும்போது நகரத்தின் மையங்களிலோ நெருக்கடி மிகுந்த இடங்களிலோ இருக்கிற ரயில் நிலையங்களை அகலப்படுத்தி முனையமாக்கக் கூடாது. மாறாக இந்த இரண்டு பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கும் நிலையங்களைத்தான் மாற்றி அமைக்க வேண்டும் என்று முடி வெடுத்துள்ளனர். அந்த வகையில்தான் தாம்பரம் தேர்வானது. இதற்காக 45 கோடி ரூபாய் திட்டச் செலவாக மதிப்பிடப் பட்டு முதல் கட்டமாக 28 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஏதோ... எக்மோர் ரயில் நிலையத்தை மூடிவிட்டு, தாம்பரத்திற்கு கொண்டுபோகப் போகிறார்கள் என்று குரல் எழுப்புகின்றனர். உண்மை அதுவல்ல. எக்மோரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் அனைத் தையும் தாம்பரத்திற்கு மாற்றப்படும்ங்கிற திட்டம் எதுவும் கிடையாது. தமிழகம் முழுவதும் இரட்டை ரயில் பாதை திட்டம் முழுமையடைந்ததும் ரயில்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகரிக்கும். அப்போது புதிதாக அறிவிக்கப்படும் ரயில்கள் மட்டும்தான் தாம்பரத்திலிருந்து இயங்கும். மற்றபடி எக்மோரிலிருந்து புறப்படும் ரயில்கள் எக்மோரிலிருந்து தான் கிளம்பும். அத னால் எக்மோரை மூடிவிட்டு தாம்பரத்துக்கு மாற்றப்போகி றார்கள் என்றெல்லாம் குழம்ப வேண்டாம்''’என்கிறார்கள்.
No comments:
Post a Comment