Friday, December 23, 2011

அ.தி.மு.க. புதிய ஹீரோ சோ

அ.தி.மு.க.-வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களால் பத்திரிகையாளர் சோவுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தமிழக உளவுத்துறை கருதுவதாகத் தெரிகின்றது. அதையடுத்து அவரது அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


சிறிது காலத்துக்கு வெளி நடமாட்டங்களைக் குறைத்துக் கொள்ளுமாறும் அவருக்கு காவல்துறை தலைமையில் இருந்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.சினிமாவில் நடித்த காலத்தில் சோ பிரபலமடைந்தது ஹீரோவாக அல்ல. ஆனால், அ.தி.மு.க. வட்டாரங்களில் இன்றைய ஹீரோவாக இருப்பவர் சோ என்பதுதான் ஆச்சரியமான உண்மையாக உள்ளது. வேடிக்கை என்னவென்றால் இவர் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கூட அல்ல!சசிகலா அன்டு கோவின் வெளியேற்றத்தில் சோவுக்கு பெரிய பங்கு இருப்பது பரவலாக அறியப்பட்ட விஷயம்தான். சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து முதலில் தானாகவே வெளியேறிச் சென்றார். அதன்பின் அவருக்கு சில விஷயங்கள் தொடர்பாக ‘வார்னிங் கொடுத்து’ வெளியே அனுப்பப்பட வேண்டிய அவசியம் உணரப்பட்டதாக கூறப்படுகின்றது. இதற்காக அவர் போயஸ் கார்டனுக்கு மீண்டும் ஒருமுறை அழைக்கப் பட்டிருக்கிறார்.

அப்போது சசிகலாவிடம் சில விஷயங்கள் கறாராக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது.இப்படியான நேரத்தில் தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர் அருகில் இருப்பது நல்லது என முதல்வர் நினைத்தாராம். அதற்காக அவர் அழைத்த ஒரேயொரு நபர் பத்திரிகையாளர் சோ மட்டும்தான் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா-சசிகலா காம்பினேஷனில் பல கோர்ட் விவகாரங்களும் உள்ளன. பத்திரிகையாளர் சோ, அடிப்படையில் ஒரு வக்கீல் என்பதாலும், (சோ வக்கீலாக பிராக்டிஸ் பண்ணி வாதாடிய எந்த வழக்கும் தோற்றதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?) சசிகலாவுக்கு ‘சில விஷயங்கள்’ சொல்லப்பட்ட நேரத்தில் சோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த காரணம் அதுவாகக்கூட இருக்கலாம்.

எப்படியோ, சசிகலா தானாக வெளியேறியபோது அல்லாமல், ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டபோது வேதா இல்லத்தில் சோவும் இருந்தார் என்று கூறப்படுகிறது. திடீரென சோவுக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பும் அதைத்தான் பரூஃப் பண்ணுகிறது.சசிகலா அன்டு கோ வெளியேற்றப்பட்டது, அந்த மொத்தக் குடும்பத்துக்கே பல கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம் என்ற விதத்தில் பார்த்தால், அவர்களின் கடும் கோபத்துக்கு சோ ஆளாகியிருக்க வேண்டும். ஆனால், அதற்காக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள சோவின் அலுவலகத்துக்கு அருவா சகிதம் வந்து சேர்வார்கள் என்பது கொஞ்சம் டூமச்தான்.இதற்கிடையே மற்றொரு தமாஷ்வேறு நடந்து கொண்டிருக்கிறது.

இதுவரை அ.தி.மு.க. என்றாலே சசிகலாதான் நெம்பர் டூ என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதாவது, அ.தி.மு.க.-வின் முதல் இரு இடங்களிலும் யார் உள்ளார்கள் என்ற சந்தேகமே இருக்கவில்லை. இப்போது திடீரென இரண்டாவது இடம் காலியாகியதில், அ.தி.மு.க.-வில் சிலர் இரண்டாவது இடத்தில் சோவை கொண்டுபோய் உட்கார வைத்திருக்கிறார்கள்.

மிகப் பெரிய தமாஷாக, சோவிடம் சிபாரிசுக்கு போகவும் தயாராக ஒரு கியூவே நிற்கிறது!

No comments:

Post a Comment