பார்தி குழுமத்தின் அங்கமான ஏர்டெல் நிறுவனம் இந்திய தொலை தொடர்புத் துறையி்ல் முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது. முதலில் அந்நிறுவனம் வயர் கொண்ட தொலைபேசித் துறையில் அதிகம் கவனம் செலுத்தியது. தற்போது காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப வயர்லஸ் சந்தையிலும் காலூன்றியுள்ளது.
தனது துணை நிறுவனமான பீட்டெல் மூலம் புதிய டேப்லெட்டை விரைவில் களமிறக்குகிறது. அதன் பெயர் மேஜிக் க்ளைடு ஆகும். இதன் விலையும் மிகக் குறைவாக இருக்கும்.
இந்த பீட்டெல் க்ளைடின் சிறப்புகளைப் பார்த்தால் இது ஆன்ட்ராய்டு 2.2 ப்ரேயோ இயங்கு தளத்தைக் கொண்டிருக்கும். இதன் திரை கெப்பாசிட்டிவ் மற்றும் தொடுதல் வசதி கொண்டது. மேலும் இது 2200எம்ஏஎச் பேட்டரியுடன் 2 கேமராக்களைக் கொண்டுள்ளது.
இது 3ஜி வசதிகளை சப்போர்ட் செய்யும். அதுபோல் இணைப்பு வசதிகளுக்காக இது ப்ளூடூத் மற்றும் வைஃபை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் பரப்பு 209 மிமீ x 108 மிமீ x மிமீ ஆகும். இதன் எடை 500 கிராம் மட்டுமே.
இந்த பீட்டெல் க்ளைடு டேப்லெட் மலிவு விலையில் வரும். இந்த டேப்லெட் மோனோடோன் வண்ணத்தில் வருகிறது. மேலும் மடிக்கக்கூடிய ஸ்டேண்டு கொண்டு வருகிறது. அதனால் இந்த ஸ்டேண்டில் இந்த டேப்லெட்டை வைத்துக் கொள்ளலாம். இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு டேப்லெட் ஆகும். அதனால் இதில் வீடியோ மற்றும் ஆடியோ அனுபவமும் மிகப் பிரமாதமாக இருக்கும்.
ஏற்கனவே கூறியதுபோல் இது 7 இன்ச் அளவுள்ள கெப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டுள்ளது. இந்த திரையில் பிக்சல் ரிசலூசன் 800 x 480 ஆகும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் 2 கேமராக்களும் 2 மெகா பிக்சல்கள் திறன் கொண்டவை. இவை சிஎம்ஐஎஸ் பிக்ஸ்டு போக்கஸ் லென்ஸ் வகையைச் சார்ந்தது. மேலும் இந்த கேமரா 4எக்ஸ் சூமைத் தரும்.
பீட்டல் மேஜிக் களைடு 8ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் இதை 16ஜிபி வரை அதிகரிக்க முடியும். இதன் பிராசஸர் 1ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகத்தைக் கொண்டுள்ளது. இதன் 2200எம்ஏஎச் லித்தியம் ஐயன் பேட்டரி மிகவும் அபாரமான மின் திறனைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி இந்த டேப்லெட்டுக்கு 3 மணி நேர இயங்கு நேரத்தையும் அதே நேரத்தில் 60 மணி நேர ஸ்டான்ட் பை நேரத்தையும் வழங்குகிறது. இந்த பீட்டெல் மேஜி்க் க்ளைடின் விலை ரூ.12,000 ஆகும்.
No comments:
Post a Comment