Friday, June 29, 2012

1100 கோடி மைல் தொலைவில் உள்ள சூரிய மண்டலத்தின் எல்லையை அடைந்தது வாயேஜர் 1 விண்கலம்.



வியாழன் மற்றும் சனி கிரகங்களில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கடந்த 1977-ம் ஆண்டு வாயேஜர்-1 என்ற விண்கலத்தை உருவாக்கி அனுப்பினர். அதனுடன் வாயேஜர்-2 என்ற விண்கலமும் அனுப்பப்பட்டது.
 
அவை 5 ஆண்டுகளில் வியாழன், சனி ஆகிய 2 கிரகங்களையும் சென்றடையும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவை குறிப்பிட்ட காலத்தில் சென்றடையவில்லை.
 
எனவே அவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் வாயேஜர்-1 என்ற விண்கலம் தற்போது 35 ஆண்டுகளுக்கு பிறகு சூரிய மண்டலத்தின் எல்லையை கடந்துள்ளது.
 
விண்கலம் சூரிய மண்டலத்தை ஊடுருவி கடந்து செல்வது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. சூரிய மண்டலம் பூமியில் இருந்து 1100 கோடி மைல் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
வாயேஜர்-1 விண்கலம் நவீன தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டது. அதில் ஒரே நேரத்தில் 8 ஆயிரம் வார்த்தைகளை சேகரித்த வைக்கவும், வினாடிக்கு 160 தகவல்களை அனுப்பும் வசதியும் உள்ளது. 

No comments:

Post a Comment