Saturday, June 23, 2012

அருள் மழை --60



நாம் செய்யும் தர்மத்தை ‘இதனால் எனக்குப் பொருள் வேண்டாம்ஈசுவரன்நினைத்ததைக் கொடுக்கட்டும்’ என்று பலனை எதிர்பாராமல் அர்ப்பணம்பண்ணிவிட்டால்அப்போது நம்மிடத்தில் உள்ள அழுக்கு போய் பேரின்பம்கிடைக்கும்பொருளைத் தரும் தர்மமே அப்பொழுது பரம்பொருளைத் தரும்வீட்டுக்கு ஸாதன மாகிவிடும்இப்படி தர்மமானது பொருளுக்குஸாதனமாகவும்அதன் மூலம் இன்பத்துக்கு ஸாதனமாகவும்பற்றின்றிநிஷ்காம்யமாகச் செய்யப்பட்டால் வீட்டுக்கு ஸாதனமாகவும் ஆகிறதுதர்மம்செய்தால் பிரதியாகப் பொருள் கிடைக்கிறதுஅந்தப் பொருளைக் கொண்டேமறுபடி தர்மம் செய்யலாம்இப்போது அர்த்தமே தர்மம் செய்ய ஸாதனமாகஇருக்கிறதுஇன்பம் ஒன்றுதான் தன்னாலும் நிறைவு படுவதில்லை;பிறவற்றுக்கும் ஸாதனமாக இருப்பதில்லைகொதிக்கிற மணலில் விட்டஜலம் உடனே சுவறிப் போவதுபோல் ‘இன்பம்’ என்பதுதன்னாலும்நிறைவின்றிவேறெதற்கும் ஸாதனமாகவும் இன்றிதர்ம சிந்தனைபொருள்,மோக்ஷம் எல்லாவற்றையும் நாசம் பண்ணிவிட்டுத் தானும் நசித்துப்போகிறதுஆனாலும்இந்த இன்பத்தை இப்போதே விட்டு விடுவோம்என்றால் முடியமாட்டேன் என்கிறதுஅதை அடியோடுவிடாமல் கொஞ்சம்கொஞ்சமாகக் கட்டுப்படுத்தித் தரவும்பிறகு படிப்படியாக இந்தச்சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்துக்கு அழைத்துச் செல்லவுமே மதம் என்பதுஏற்பட்டிருக்கிறதுமுதலில் இதுதான் அறம் என்று சொல்லிஅதைச்செய்வதற்காகவே எப்படிப் பொருள் ஈட்ட வேண்டுமோ அந்த நியாயமானமுறையைச் சொல்லிஅதனால் இன்னின்ன இன்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ளலாம் என்று பக்குவம் வருகிற வரையில் கிரமப்படுத்திக் கொடுத்துஅப்புறம் இந்தச் சின்ன இன்பங்களை எல்லாம் தொலைத்து நிரந்தரஇன்பமான வீடு என்கிற மோக்ஷத்தைக் காட்டுவதே மதம்.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதிசங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment