Saturday, June 30, 2012

மதுரையில இருக்கிற சாமியைவிட, வடக்கே இருக்கிற சாமி சக்தி வாய்ந்ததா? அழகிரியின் ஆதரவாளர்


ற்ற மாவட்டத்து தி.மு.க-வினர் அனைவரும் சிறை நிரப்பும் போராட்டத்துக்குத் தயார் ஆக... மதுரைக்காரர்கள் மட்டும் உள்கட்சி யுத்​தத்துக்கு ரெடி ஆகிறார்கள். சிறை நிரப்பும் போராட்டத்தை எப்படி நடத்துவது என்று அனைத்து மாவட்​டங்களிலும் கலந்துரையாடல் கூட்டங்கள் நடந்துவருகின்றன. அப்படி ஒரு கூட்டத்துக்கு கடந்த 27-ம் தேதி மதுரையிலும் ஏற்பாடு ஆனது. மதுரை மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை தாங்க வேண்டிய மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, 'உள்ளே’ இருப்பதால், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் அந்தக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்னதாகவே, இளைஞர் அணிக்கு என்று தனியாக ஓர் ஆலோசனைக் கூட்டம் போட்டார், தளபதியோடு இருக்கும் ஜெயராம். இந்தக் கூட்டத்தை அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தார்கள். வழக்கம்போல, தலைமை செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சிம்மக்கல் போஸ் போன்ற ஸ்டாலின் ஆதரவாளர்கள் மட்டுமே வந்தார்கள். புதிதாக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், வி.கே.குருசாமி ஆகியோர் வந்து, அழகிரி ஆட்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்கள். 
அடக்கியே வாசிக்கப்பட்ட அந்தக் கூட்டத்தில், ஜெயராம் பேச்சில் மட்டும்​தான் காரம் தூக்கல். 'தளபதி ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர். மத்தவங்க மாதிரி இல்லாமல், ரொம்ப ஈஸியா சந்திக்கக்கூடிய எளிய தலைவராக இருக்கிறார். அவர் முதல்வரான பிறகு, சிறைக்குச் சென்றதற்கான அத்தாட்சியோடு நேரடியா அவரைப் போய்ப் பாருங்க. 'அண்ணே நான் சிறைக்குச் சென்றேன். எனக்கு கட்சிப் பதவி கொடுங்க. நான் படிச்சிருக்கேன், எனக்கு வேலை போட்டுக் குடுங்க. என் புள்ளைக்கு சிபாரிசுக் கடிதம் கொடுங்க’ன்னு கேளுங்க. உடனே செஞ்சு குடுப்பார். அதனால, ஜெயிலுக்குப் போகத் தயாரா இருங்க!' என்றார் ஜெயராம்.
மறுநாள் இதே ஆலோசனைக் கூட்டத்தை அழகிரி ஆட்கள் நடத்தினார்கள். அழகிரிக்குச் சொந்தமான தயா மகாலில் நடந்த மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு அழகிரி வரவில்லை. துணைச் செயலாளர் உதயகுமார் முன்னிலை வகிக்க, கூட்டத்தை நெறிப்​படுத்தினார் மன்னன். முறையாக அழைக்கப்பட்டதால் வேலுச்சாமி, பொன்.முத்துராமலிங்கம், குழந்தைவேலு போன்ற ஸ்டாலின் ஆதரவாளர்களும் ஆஜர். ஆனால், ஏன்டா வந்தோம் என்ற அளவுக்கு அழகிரி ஆட்கள் படுத்தி எடுத்துவிட்டார்கள்.
முதலில் மைக் பிடித்த முதலாம் பகுதிச் செயலாளர் ரவீந்திரன், 'எனக்கு ஒரு பிரச்னை வந்தபோது, அண்ணன் பொன்.முத்துராமலிங்கம் என்னவென்றே கேட்கவில்லை. இதுதான் கட்சிக்காரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையா?' என்று ஆட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
பகுதிச் செயலாளர் கோபிநாதன் நேரடியாக தளபதியை அட்டாக் செய்தார். 'அஞ்சாநெஞ்சனை நம்பிக் கெட்டவர்கள் யாரும் கிடையாது. நம்பாமக் கெட்டவங்கதான் அதிகம். போன தடவை, உட்கட்சித் தேர்தல் நடந்தப்ப இந்தத் தளபதி, புறநகர் மாவட்டத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆகிட்டார். அதனால, மாநகர் மாவட்டச் செயலாளரா யாரைப் போடப்போறாங்கன்னு ஒரே பரபரப்பு. அந்த நேரத்துல, அதே தளபதியை டவுனுக்குக் கூட்டியாந்து, மாநகர் மாவட்டச் செயலாளர் ஆக்கி அழகு பார்த்தவருதான்
அஞ்சா நெஞ்சன். ஆனா இன்னைக்கு அவருக்கே துரோகம் செஞ்சிட்டார். அண்ணனுக்குத் துரோகம் செய்துவிட்டு யாரும் இங்கே வாழ்ந்ததாக (இந்த வார்த்தைக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்தார்) சரித்திரம் கிடையாது' என்று எச்சரித்தார்.
'மிசா’ பாண்டியன் இன்னும் ஒரு படி மேலே போனார். 'நாங்க எல்லாம் 'பாட்ஷா’ படத்துல வர்ற ரஜினி மாதிரி. அமைதியா இருப்போம். சீண்டிப் பார்த்தா, தாங்க மாட்டீங்க. கேரளாவுல பிரச்னை வந்ததும், நம்ம அய்யப்ப பக்தர்கள் எல்லாம் என்ன பண்ணுனாங்க? அந்தந்த ஊர்ல இருக்கிற அய்யப்பன் கோயிலுக்குத்தானே போனாங்க? அது மாதிரி நமக்கு மதுரைன்னு ஆகிப்போச்சு. மதுரையில கின்னஸ்ல இடம்பெறுகிற அளவுக்கு பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் இருக்கு. அங்க போய் சாமி கும்பிடாம, நான் காசிக்குப் போறேன், ரிஷிகேஷ் போறேன்னா... அசிங்கப்பட்டுப் போய் நிற்கிற. இங்க இருக்கிற சாமிக்கு சக்தி இல்லைன்னாதானடா, நீ அங்கிட்டுப் போகணும்?'' என்று சிலேடையாகப் பேசினார். அழகிரி ஆதரவாளராக இருந்த தளபதி, இப்போது ஸ்டாலின் ஆதரவாளராக மாறியதைத்தான் இப்படி மறைமுகமாகக் குறிப்பிட்டார். ஒப்புக்கு பொன்.முத்து பேசினாலும் யாரும் கண்டு​கொள்ளவில்லை..
மதுரையில் குறைந்தது 2,000 பேராவது சிறைக்குப் போக வேண்டும் என்பது சாமி... ஸாரி, அழகிரியின் உத்தரவாம்!

No comments:

Post a Comment