Wednesday, June 27, 2012

ஜூனியர் விகடன் பத்திரிகை மீது முதல்வர் ஜெயலலிதா வழக்கு.



முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் இதழ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 24 ம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழில் முதல்வருக்கு எதிராக "யாக பூஜையில் போயஸ் கார்டன், அதிகார பயம், பரிகார நிஜம்" என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது. முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது. எனவே இந்த செய்தியை வெளியிட்ட ஜூனியர் விகடன் ஆசிரியர் கண்ணன், வெளியீட்டாளர் அசோகன், மாதவன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
ஏற்கனவே, முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி நக்கீரன் இதழ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது ஜூனியர் விகடன் இதழும் சேர்ந்துள்ளது.

No comments:

Post a Comment