Saturday, June 23, 2012

அம்மா எங்களை ஆதிரிப்பார்! நித்தியின் நெத்தியடி பேட்டி.


ரம்பத்துலயே ஒரு விஷயத்தை நான் ரொம்பத் தெளிவா சொல்லிடுறேன்... பெரிய ஆதீனம் இப்பவும் எனக்கு ஆதரவாத்தான் இருக்கார். அவருக்கு எந்தக் குழப்பமும் இல்லை. அவர் ரொம்பத் தெளிவா இருக்கார். எப்பவும்போல சிரிச்ச முகமா  இருக்கார். இப்ப நடக்கிற எல்லா விஷயங்கள்லேயும் எனக்கு பிக் சப்போர்ட்டே அவர்தான். நான்தான் அடுத்த மதுரை ஆதீனம்கிறதுல அவர் ரொம்ப உறுதியா இருக்கார். இதைத் தாண்டி வீண் குழப்பம் செய்றவங்களைப் பத்தி ஐ டோன்ட் கேர்!'' - அழுத்தமாக ஆரம்பிக்கிறார் நித்தியானந்தா.
 கர்நாடக பிடதி ஆசிரமக் கலவரம், கைது, சிறைக்குள் உண்ணாவிரதம், ஜாமீனில் விடுதலை என்று ஏக களேபரங்களுக்குப் பிறகு அப்போதுதான் மதுரை ஆதீன மடத்தில் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தார் நித்தி!
''நீங்கள் ஆதீனமாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகளும் போராட்டங்களும் இன்னமும் தொடர்கின்றனவே?''
''இப்போ எல்லாம் அடங்கிடுச்சு. ஆரம் பத்தில் அறியாமை, புரியாமை, பொறாமை... இப்போ எல்லாருக்கும் உண்மை புரிய ஆரம்பிச்சுடுச்சு. அதனால, அமைதியாகி அடங்கிட்டாங்க.''
''அமைதியாக இருப்பதன் விளைவுதான் இந்தக் கைது நடவடிக்கைகளா?''
''என் விவகாரத்தை கன்னடர் - தமிழர் பிரச்னையா மாத்துறதுக்கு, கர்நாடகத்தில் உள்ள சிலர் முயற்சி செய்றாங்க. நான் எப்பவும் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் அல்ல. காவிரிப் பிரச்னை வந்தப்பக்கூட தமிழ்நாட்டு மக்களும் கர்நாடக மக்களும் ஒத்துமையா இருக்கணும்னு வலியுறுத்தினவன் நான். இரு மாநில ஒற்றுமைக்காகப் பல பணிகளைத் தொடர்ந்து செஞ்சுக்கிட்டு இருக்கேன். கர்நாடக மக்கள் என்னை எதிர்க்கலை. கர்நாடக அமைப்புகளைத் தூண்டிவிட்டுத்தான் இப்படியான போராட் டங்களைச் சிலர் செய்யவைக்கிறாங்க. தூண்டிவிடுறவங்க யார்னு சீக்கிரமே வெளிச்சத்துக்கு வரும். மக்களும் நிச்சயம் என்னைப் புரிஞ்சுப்பாங்க.''
''ஆனால், பிடதி ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு சீல் வைத்துவிட்டதே... இனி, மதுரையிலேயே தங்கிவிடுவீர்களா?''
''பிடதி ஆசிரமத்துக்கு முழுமையா சீல் வைக்கலை. ஆசிரமத்தோட ஒரு பகுதியை மட்டும்தான் சீல் வெச்சிருக்காங்க. அதுவும்கூட சட்ட விரோதமானது...சட்டத் துக்குப் புறம்பானது. இதைச் சட்டப்படி எதிர்கொள்ள எல்லா நடவடிக்கைகளை யும் எடுத்துக்கிட்டு இருக்கேன். மதுரை யிலேயே தங்குறதா எண்ணம் இல்லை. நிச்சயம் நான் பிடதிக்கும் போவேன். என்னோட ஆன்மிகப் பணிகள் பிடதி, மதுரை, திருவண்ணாமலை... மூணு இடங்கள்லேயும் தொடர்ந்து நடக்கும். வழக்கமாவே எங்கள் பிராஞ்ச் இருக்குற இடங்கள்ல எல்லாம் டிராவல் பண்ணிட்டே இருப்பேன். அதுபோலத்தான் என் வாழ்க்கை இனியும் தொடரும். என்னைப் பிடதிக்குப் போகக் கூடாதுனு யாரும் தடுக்கவோ தடை போடவோ முடியாது.''
''உங்களைக் கைதுசெய்தபோது என்னதான் நடந்தது?''
''என் ஆசிரமத்தில் நிருபர்கள் சந்திப்பு நடந்துச்சு. அப்போ ஒரு குறிப்பிட்ட சேனல் நிருபர், கோர்ட் சம்மன்னு சொல்லி ஒரு கவரை என்கிட்டே கொடுக்க முயற்சி பண்ணார். 'கோர்ட் சம்மனை நிருபர் ஏன் கொடுக்கணும்?’னு கேட்டேன். ஆனா, அவர் அதைப் பொருட்படுத்தாம அந்த கவரை என்கிட்ட கொடுக்குறதுலயே குறியா இருந்தார். நான் அந்த கவரை வாங்க மறுத்துட்டு, அவரை வெளியே போகச் சொல்லிட்டேன். இதற்கு என்கிட்ட வீடியோ ஆதாரமே இருக்கு. ஆனா, அந்த நிருபர் நான் அவரை ஏதோ தாக்கிட்டதா பொய்ப் புகார் கொடுத்தார். ஒரு நிருபருக்கு கோர்ட் சம்மனை அளிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? அதுவும் அந்த கவருக் குள் கோர்ட் சம்மன்தான் இருந்ததா என்று எனக்கு எப்படித் தெரியும்? அதை நான் எதற்கு வாங்கணும்? அந்த கவருக்குள் என்ன வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் இல்லையா?
அந்த நிருபர் கொடுத்த பொய்ப் புகாரின் அடிப்படையில்தான் என் மேல் வழக்கு பதிஞ்சு இருக்காங்க. என்னைத் தேடுறதா கர்நாடக போலீஸ் அறிவிச்சது. என்னைக் கைதுசெய்யணும்னு கர்நாடக முதல்வர் பேட்டி கொடுத்தார். சட்டத்தை மதிச்சு நானாவே நீதிமன்றத்தில் சரண் அடைஞ்சேன். நீதிபதி மறுநாள் என்னோட மனுவை எடுத்துக்குறதா சொன்னார். பொதுவா, நீதிமன்றத்தில் சரண் அடையறவங்களைக் கைதுசெய்ய மாட்டாங்க. ஆனா, கர்நாடக போலீஸார் என்னைக் கைது செஞ்சாங்க. மறுநாள் நீதிபதி ஜாமீன் கொடுத்த பிறகும்கூட, 'உங்க உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கு’னு சொல்லி என்னை மீண்டும் கைது செஞ்சாங்க. 'உயிருக்கு ஆபத்துன்னா பாதுகாப்பு கொடுங்க; ஏன் கைதுசெய்றீங்க?’னு கேட்டேன். பதில் இல்லை. என் எதிர்ப்பைப் பதிவுசெய்யணும்கிறதுக்காகவே சிறையில் உண்ணாவிரதம் இருந்தேன்.''
''ஆர்த்தி ராவை நீங்கள் சந்திக்கவே இல்லை என்கிறீர்கள்... ஆனால், அவர் உங்களோடு குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட ஆதாரங்களை எல்லாம் காட்டுகிறாரே?''
''என்கூட இதுவரைக்கும் குரூப் போட்டோ எடுத்துக்கிட்டவங்க பத்து லட்சம் பேருக்கும் மேல இருப்பாங்க. அதுல ஆர்த்தி ராவும் ஒருத்தரா இருக்கலாம். அந்தப் பெண் என்கூட ஐம்பது முறை உறவு வெச்சுக்கிட்டதா சொல்றாங்க. அந்தச் சமயத்தில் மட்டும் இல்லை... இப்போதும்கூட அந்தப் பெண் ணுக்குத் தீர்க்கவே முடியாத வியாதி இருக்கு. அந்த வியாதி எய்ட்ஸைவிட மோசமானது. எய்ட்ஸ் நோயாவது உடலுறவு வெச்சுக்கிட்டாதான் பரவும். ஆனால், ஆர்த்திக்கு வந்த நோய் உடலும் உடலும் உரசிக்கிட்டாலே பரவும். அவரோடு ஐம்பது முறை நான் செக்ஸ் வெச்சிருந்தா, எனக்கு அந்த நோய் இந்நேரம் வராமல் இருக்குமா? எனக்கு அப்படி ஒரு நோய் இல்லை. நான் தயார்... யார் வேணும்னாலும் என் ரத்தத்தை எடுத்து டெஸ்ட் பண்ணிக்கட்டும். அப்படி ஒரு வியாதி எனக்கு இருந்தா, அதுக்கு அப்புறம் என்னைக் கேள்வி கேளுங்க.''
''தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க நீங்கள் முயற்சித்துவருகிறீர்களாமே?''
''உண்மைதான். தமிழக முதல்வரைச் சந்திக்க நான் நேரம் கேட்டுக் கடிதம் கொடுத்திருக்கேன். இதுவரைக்கும் அழைப்பு இல்லை. தமிழக அரசு எங்களுக்கு எதிர்ப்பா செயல்படுதுன்னோ, ஆதரவா செயல்படு துன்னோ என்னால் சொல்ல முடியாது. நடக்குற நல்ல விஷயங்கள் எல்லாத்தையுமே தமிழக அரசும் முதல்வர் அம்மாவும் நிச்சயம் ஆதரிப்பாங்க. அதனால, எங்களையும் அவர் ஆதரிப்பார்னு நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கையோடு அம்மாவின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கேன்!''

No comments:

Post a Comment