Monday, December 12, 2011

மகாகவி பாரதி பிறந்த நாள் டிசம்பர் - 11

பாரதியின் பொன் மொழிகள்!

* அறிவுதான் அரசன்; மனமும் இந்திரியங்களும் உடம்பும் அறிவுக்கு அடங்கி வாழ வேண்டும். இல்லாவிட்டால் அவற்றுக்குக் கெடுதி உண்டாகும்.

* உழைப்பிலேதான் சுகமே உள்ளது.

* சமாதானமும் சகிப்புத் தன்மையுமே நமது இலட்சியங்கள்.

* பாரத தேசத்தில் ஒவ்வொருவருக்கும் தியானம் இன்று உணவைக் காட்டிலும் இன்றியமையாதது. ஒரு தனி இடத்தே போய் இருந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி கொடுக்கக்கூடிய சிந்தனைகளால் அறிவை நிரப்பிக் கொண்டு தியானம் செய்வதை ஒரு நாளேனும் தவற விடக் கூடாது!

* மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது.

* சென்றது இனி மீளாது மூடரே, எப்போதும் சென்றதை சிந்தனை செய்து மாளாதீர்.

* மனிதர்களின் எண்ணத்தை மீறியும் காலத்தின் சக்தி வேலை செய்வதுண்டு.

* சத்தியம் ஒன்று, அதனை ஆராதனை செய்யும் வழிகள் பல.

* தேவர்களே, கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதுக்காரனுக்குள்ள மன உறுதியும், இளைஞனின் உற்சாகமும், குழந்தையின் இதயமும் எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்வீர்களாக.


No comments:

Post a Comment