பஸ் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் என பல்முனைத் தாக்குதலுக்கு ஆளாகி நொந்துகொண்டிருக்கும் தமிழக மக்களை, பாடாய்ப் படுத்தி விரக்திப் பள்ளத்தாக்குகளில் உருட்டிக்கொண்டி ருக்கிறது வரலாறு காணாத மின்வெட்டு.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டுமணி நேரம்வரை அங்கங்கே இருந்தது. இதற்கே ஆதங்கப்பட்ட மக்கள் மின்சாரம் போனாலேயே ‘ஆற்காட்டார் வந்துட்டாருய்யா’ என்றபடி தங்கள் வேதனைப் புலம்பலை வெளிப்படுத்தினர்.
ஆனால் ஜெ.’ஆட்சிக்கு வந்த பிறகோ, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழகம் முழுக்க இருக்கும் புறநகர் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் ஆறேழு மணி நேரத்துக்குக் குறையாமல் மின்சாரம் துண் டிக்கப்பட்டு விடுகிறது. இது தமிழக மக்களை ரொம்பவே நோகடிக்க, மின்சாரம் போனாலே ‘ஜெயா வந்தா...ô...ô...ச்சு’ என ஆதங்கம் கலந்த ஆவேசத்தோடு எரிச்சல் குரல் எழுப்புகிறார்கள். தமிழகம் முழுக்க மின்வெட்டின் பாதிப்பு எப்படி இருக் கிறது என களமிறங்கியபோது....
சென்னை மண்டலம் :
சென்னை மாநகருக்குள் மட்டும்தான் ஒரு மணி நேரம் மட்டும் மின் துண்டிப்பு இருக் கிறது. புறநகர் பகுதிகளிலும் சென்னையின் அருகாமை மாவட்டங்களிலும் இருக்கும் நிலைமையோ வேறு. திருவள்ளூர், காஞ்சி போன்ற மாவட்டங்களில் 5 மணி நேரம்வரை மின்வெட்டு பொதுமக்களை வதைக்கிறது. திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் சொல்கிறார், ""எங்க மாவட்டத்தைப் பொறுத்தவரை விவசாயம்தான் பிரதானத் தொழில். நீண்ட மின்வெட்டு கடைப்பிடிக்கப்படுவதால் பாசன மோட்டார்கள் பலமணி நேரம் ஓடமாட்டேங்குது. இதனால் 4 ஏக்கர் வைத் திருக்கும் விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான பாசன நீர்கூட கிடைக்கலை. இதனால் வெறுத்துப்போன விவசாயிகள் இப்பவே தங்கள் விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் நபர்களுக்கு விற்க ஆரம்பிச்சிட்டாங்க. வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இங்கே பாதிப்பில்லாமல் மின்சாரம் கிடைக்குது. ஆனால் லேத் பட்டறைகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனங்கள்வரை மின்சாரம் சரியா கிடைக்கறதில்லை. அதனால் பல தொழிற்சாலைகள் முடங்கிப் போச்சு. இதனால் இங்கு பணியாற்றிய தொழிலாளிகள் எல்லாம் பிழைப்பு தேடி சென் னை, பெங்களூர்னு போக ஆரம்பிச்சிட்டாங்க. போற போக்கைப் பார்த்தால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் அக்கம்பக்க மாநிலங் களுக்குப் போனாலும் போய்டு வாங்க''’என்கிறார் எரிச்சலாய்.
காஞ்சிபுரத்தில் விசைத் தறிக் கூடங்கள் பல மின் வெட்டால் இழுத்து மூடப் பட்டுள்ளன. இதனால் ஆயிரக் கணக்கான நெசவுத் தொழி லாளிகள் பசி பட்டினியோடு தவித்துக் கொண்டிருக்கிறார் கள். மீண்டும் கஞ்சித் தொட்டி திறக்கப்படும் அபாயத்தில் இருக்கிறது காஞ்சி.
தமிழகத்தின் இதயப் பகுதி போல் இருக்கும் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் பெரும்பாலும் தினசரி 7 மணி நேரத்துக்கு மேல் இருளிலும் புழுக்கத்திலும் தவிக்கிறார்கள் மக்கள். பெரம்பலூர் மாவட்ட அகரம் சிகூரில் எலக்ட்ரிக்கல் கடைவைத்திருக்கும் தங்கராசு நம்மிடம் ‘""எங்க பொழப்பே மின்சாரத்தை நம்பித்தான் இருக்கு. புயல் மழை வர்றதைக்கூட முன்னாடி யே கண்டுபிடிச்சி சொல்லிடறாங்க. ஆனா கரண்ட் கட்டானா எத்தனை மணி நேரம் கழித்து வரும்னு யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க. கரண்ட்டை நிறுத்தி அடிக்கடி எங்க வயித்தில் மண்ணை அள்ளிப்போடுது இந்த அரசு. வேற என்ன சொல்றது?'' என்கிறார் விரக்தியாய்.
தனக்குத் தெரிந்து இப்படி ஒரு மின்தடையை தான் கண்டதே இல்லை என்று கூறும் கடலூர் மாவட்ட காட்டுமன்னார்குடி விவசாயி இளங்கீரன் ""வராத கரண்டுக் குக்காக ஒரு ஹார்ஸ் பவர் உள்ள பம்பு செட்டு களுக்கு 750 ரூபா கட்டச் சொல்லப்போறாங்களாம். ஏற்கனவே உரத்தட்டுப்பாட்டாலும் அதன் விலையேற்றத்தாலும் விழிபிதுங்கி நிற்கும் எங்கள் குரல்வளையை, மின்வெட்டு மூலம் நெரிச்சிக்கிட்டிருக்கு இந்த அரசு''’என்கிறார் காட்டமாய். திண்டிவனம் முனியாண்டியோ ""கரண்ட் கட் தொடர்பா விழுப்புரம் கலெக்டர்ட்ட மனு கொடுக்கலாம்னு போனோம். புகார் மனுவையும் அதற்கான ஆவணங்களையும் ஜெராக்ஸ் எடுக்கலாம்னு போனா கரண்ட் 12 மணிக்குதான் வரும்னு சொல்லிட்டாங்க. 12 மணிக்குப் போனப்ப ஜெராக்ஸ் கடையில் நீளமான க்யூ. இப்படி ஒரு நிலைமையை நாங்க சந்திச்சதே இல்லை. ஓட்டுப்போட்ட பாவத்துக்கு இந்த மக்களுக்கு மின்வெட்டு மூலம் ஷாக் கொடுத்துக்கிட்டு இருக்கு இந்தம்மா''’என்றார் எரிச்சல் தாளாமல்.
கொடிக்களம் கிராம மக்கள் பம்பு செட்டுகளைத்தான் குடி தண்ணீருக்கு நம்பி இருக்கிறார்கள். பகல் முழுக்க மின்சாரம் இல்லாததால் இரவு எப்போது கரண்ட்வரும் என காலிக்குடங்களோடு காத்திருக்கிறார்கள் இந்தப் பகுதிப் பெண்கள். ""தூ என்ன எழவெடுத்த நாடோ இது''’என கொதிப்பைக் கொட்டுகிறார் அமரஜோதி.
தென்மண்டலம் :
மின் தடையினால் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர் தென் மாவட்ட மக்கள். மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்று புலம்பித் தீர்க்கின்ற னர். மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த கஸ்தூரி, ""அய்யா ஆட்சில சொல்லிட்டு ரெண்டு மணி நேரம்னா.. இந்தம்மா ஆட்சில ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம்னு சொல்லாம கரண்ட்ட கட் பண்ணுறாங்க.. அப்ப பகல்ல மட்டும்தான்.. இப்ப பகல், நைட்டு, நடுச்சாமம்னு நேரம் காலம் பார்க்காம கரண்ட புடுங்கிடறாங்க.. ராத்திரில பொம்பளங்க கழுத்துல கிடக்குற தாலிய அத்துட்டு ஓடுற திருடன்களுக்கு வசதியாத்தான் இங்க ஆட்சி நடக்கு. என்ன கொடுமையோ?''’என்று தலையில் அடித்துக் கொள்கிறார்.
""தங்களது அடிப்படை உரிமைகளைக்கூட இழந்து நிற்கிறார்கள் மக்கள்...''’எனச் சொல்லும் திண்டுக்கல் மாவட்ட மனித உரிமைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல் வன் "பவர் கட் பிரச்சினையை அரசாங்கம் சமாளிக்க ஒரு ஆலோசனை சொல்றேன். ரேஷன் மாதிரி சிக்கன நடவடிக்கையா ஒரு வீட்டுக்கு 100 யூனிட், கடைன்னா 200 யூனிட்டுன்னு கொண்டு வந்துட்டா.. தேவையில்லாம மின்சாரத்த பயன்படுத்துறத மக்களே தவிர்த்திடுவாங்க. இப்படி சீர்திருத்தங்களைக் கொண்டு வர்றதை விட்டுட்டு கரண்ட்டைக் கட் பண்ணினா என்ன அர்த்தம்?''’என்கிறார்.
ராமநாதபுரத்தில் மளிகைக் கடை நடத்தும் கார்த்திக் பாலா வோ ""இந்த மாவட்டத்துல மட்டுமில்ல.. பக்கத்துல சிவகங்கை மாவட்டத்துலயும் ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் ப்யூஸை புடுங் கிடறாங்க.. இங்க ராமேஸ்வரத்துல, மண்டபம் ஏரியாவுல கடல் உணவான மீன் கள் கெட்டுப் போகாம வச்சிக்கிறதுக்கு ஐஸ் உற்பத்தி செய்யற ஃபேக்டரிங்க நெறய இருக்கு. அதை நடத்துற வங்கள்லாம் நொந்து கிடக்கிறாங்க.. தமிழ்நாட்டுல அரிசி ஆலைகள் அதிகமா இருக்கிறதுல ரெண்டாவது இடத்துல இருக்கு காரைக்குடிக்கு பக்கத்துல இருக்கிற புதுவயல்.. கரண்ட் கட்டால அங்க டயத்துக்கு அரிசி பாலீஸ் பண்ண முடியல.. இது அரிசித் தட்டுப்பாட்டுலயும் கொண்டு போயி விட்ரும்...''’என்கிறார் கவலையாக.
""
இந்த கரண்ட் கட் குட்டி ஜப்பானை குட்டிச் சுவராக்கிருச்சு.. இது காலண்டர், டைரி சீசன்.. அச்சாபீஸ் அத்தனையும் அறிவிக்கப்படாத 6 மணி நேர பவர் கட்டால மூச்சு முட்டி திணறிக்கிட்டிருக்கு.. எப்ப கரண்ட் போகும்னு தெரியல.. வரும்னு தெரியல.. வேலைக்காரங் கள சும்மா உட்கார வச்சு சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கு.. ஜெனரேட்டர் யூஸ் பண்ணுனா ஒட்டிக்கு ரெட்டி செலவு.. இதுனால இந்த வருஷம் காலண்டர், டைரி விலையெல்லாம் ஏறிப்போச்சு...''’-இது சிவகாசி முருகேசனின் ஆதங்கம்.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில்காரரான அண்ணாதுரை “""இங்க மட்டும் பவர்லூம் தொழில நம்பி 25000 பேரு இருக்காங்க.. அஞ்சு மணி நேர பவர் கட்ட நாலு தடவை பிரிச்சு விடறாங்க.. இதுனால தொழில் போச்சு.. ஒரு நாளைக்கு 350 ரூபா கூலி கிடைச்சுக்கிட்டிருந்த எங்களுக்கு இப்ப பாதிதான் கிடைக்கு...'' என்கிறார் பரிதாபமாக.
""இந்த ஜெயலலிதா ஆட்சில தமிழகமே இருண்டு கிடக்கு..''’எனச் சொல்லும் குமரி மாவட்டம் - ஆசாரி பள்ளத்தைச் சேர்ந்த கபிலன் ’’""ஒரு நாளைக்கு ஏழரை மணி நேரம் கரண்ட் கட் ஆகுது. வெல்டிங் ஒர்க்ஷாப், கிராமங் கள்ல மீன் பதப்படுத்துறதுன்னு இங்கேயும் தொழில் பாதிப்பு ரொம்ப இருக்கு. இப்ப திருமண சீசன். கல்யாண மண்டபங் கள்ல ஜெனரேட்டர் பயன்படுத்துறதுனால மண்டப ரேட்டை எக்குத்தப்பா கூட்டிட்டாங்க.. ராத்திரி கரண்ட் கட்டால படிக்கிற பசங்க படிக்க முடியல.. பச்சைக் குழந்தைங்க கொசுக்கடில வீல் வீல்ன்னு கத்துது.. வேலை செஞ்சி களைச்சிப் போயி வீட்டுக்கு வர்ற ஜனங்க நிம்மதியா தூங்கக்கூட முடியல.. மொத்தத்துல மக்கள் வாயில் மண்ண அள்ளித் தட்டிருச்சு இந்த அரசாங்கம்..''’ என்று உலையாய் கொதிக்கிறார்.
கொங்கு மண்டலம் :
கோவையைத் தலைமையாகக் கொண்டிருக்கும் கொங்குமண்டலத்தின் பெரும்பாலான ஊர்களில் இப்போது கிட்டத்தட்ட ஐந்து, ஆறு மணி நேரம் என அறிவிக்கப்படாமலே மின்சாரம் துண்டிக்கப்படுவதால் சிறு, மற்றும் குறுந்தொழில் செய்வோரும் பொதுமக்களும் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். மோட்டார் உதிரிப்பாக தொழிற்சாலைகளின் தொழி லாளர்களும், கிரைண்டர் தயாரிக்கும் தொழிலாளர்களும், மில் தொழிலாளர்களும் மின்வெட்டால் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
""லேத் டர்னரான எனக்கு ஒரு ஷிப்டுக்கு 250 ரூபாய் கூலிங்க. அந்தக் கூலி வயசான அப்பா, அம்மா, தங்கச்சின்னு இருக்கற எங்க குடும்பத்துக்குப் பத்தாது. நாலு மணிநேரம் ஓவர்டைம் பார்த்தா 125 ரூபா கூடுதலாக் கிடைக்கும். இதைவச்சிதான் வீட்டு வாடகை, எங்க அம்மா, அப்பாவுக்கு மருந்து, மாத்திரை செலவுகள்னு பண் ணிட்டிருந் தேன். ஆனா இப்ப காலை 9 மணிக்கு வேலைக்கு வந்த துமே கரண்ட் போயிடுது. 12 மணிக்குதான் போன கரண்டு திரும்பி வருது. அதுக்கப்புறம் திரும்பவும் 3 மணிக்கு, 4 மணிக்குன்னு கட் ஆனா எப்ப வரும்னே தெரி யலைங்க. அதனால எதுக்கு வெட்டியா கூலி கொடுக்க ணும்னு எங்க முதலாளிக வேலையில்லைன்னு வீட்டுக்கு அனுப்பிர்றாங்க. இப்ப ஒரு வேளை சோத்துக்குக் கூட கஷ்டப்படறோம்ங்க'' என்று கண்கலங்கினார் லேத் தொழிலாளியான மோகன்ராஜ்.
வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த வெள்ளியங் கிரியும் ராமுவும் நம்மிடம் ""காண்ட்ராக்ட்ல தினசரி 300, 400-ன்னு மோட்டார் வைண்டிங் செய்து சம்பாதிச் சிட்டிருந்த எங்களோட நெலமை இப்ப ரொம்பவும் கொடுமைங்க. கரண்டு கட்டால சரியான நேரத்துக்கு எடுத்த ஆர்டரை முடிக்க முடியலை. அதனால் பெரிய கம்பெனிக்காரங்க கொடுத்த ஆர்டரை கேன்சல் பண் ணிடறாங்க. வேலை வர்றப்போ கூப்புடுறோம்னு கூலா சொல்லி அனுப்பிடறாங்க. இதனால் நாங்க டீ குடிக்கக் கூட காசில்லாம அலையற கொடுமைய எங்கபோய் சொல்ல. இதுல குழந்தைகளுக்கு பீஸ், நோட்புக் வேற? இப்படியே நிலைமை போனா எங்க சாவுக்குக் காரணம் இந்த அரசாங்கம்தான்னு எழுதி வெச்சுட்டு குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கறதத் தவிர எங்களுக்கு வேற வழியில்லை'' என்றனர் எங்கோ வெறித்தபடி.
கோவை கணபதி பகுதியில் பவுண்டரி நடத்தும் உரிமை யாளர் சக்திவேல், ""அனுபவசாலியான தொழிலாளிகளுக்கு தினசரி 450 ரூபாய்வரை ஷிஃப்டுக்கு கொடுக்கவேண்டியிருக்கு. இப்போதுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஓவர்டைம் செய்யவேண்டியிருப்பதால் காலம் விரயமாகி உற்பத்திச் செலவும் அதிகமாகுது. எங்களைப் போன்ற சிறு, குறுந் தொழில்கள் புரிவோருக்கு நஷ்டமான நஷ்டம். ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததற்குப் பின்னால் மின்சாரத் தடையை நீக்குவோம்னு அறிவிச்சாங்க. ஆனா எல்லாவகையிலும் கஷ்டம்தான் அதிகரிச்சிக்கிட்டிருக்கு'' என்கிறார் கனத்த மனதோடு..
"காட்மா' குறுந்தொழில் முனைவோர் சங்கத் தின் தலைவரான ரவிக்குமாரோ, ""கோவை மாவட்டத்தில் மட்டும் 30,000 குறுந் தொழிற்கூடங்கள் இருந்தன.
இப்போது எனக்குத் தெரிந்தே பவர்கட் பிரச்சினையால் வேலை செய்ய முடியாமல் கந்துவட்டிக்கு வாங்கி, பணத்தை திருப்பிக் கட்டமுடியாமல், மெஷின்களை விற்று பணத்தைக் கொடுத்துவிட்டு 1000 பேர் கூலி வேலைக்குப் போய்ட்டாங்க'' என கொதிக்கிறார்.
காவிரி மண்டலம் :
டெல்டா பகுதிகளை உள்ளடக்கிய காவிரி தீரத்தில் இருக்கும் மாவட்டங்களும் மின்வெட்டால் விவசாயப் பணிகளை சரிவர நடத்த முடி யாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன. திருகாட்டுப்பள்ளி சுந்தர மூர்த்தியை சந்தித்தபோது ""தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 6 மணி நேரம் மின் வெட்டுன்னு அரசு சொன்னது. ஆனா மொத்தமே 6 மணி நேரம் கூட மின்சாரம் வரலங்க. தஞ்சையின் அனைத்து பகுதியிலும் காவிரிப் பாசனத்தால் விவசாயம் செய்ய முடியாது. சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் மின் மோட்டார்களை நம்பித்தான் இருக்கு. ஆனா மோட்டார்கள் இயங்க மும்முனை மின்சாரம் சில மணி நேரம் கூட சரியா வராததால், எங்க விவசாயமே கேள்விக்குறியா ஆய்டிச்சி. நான் பா.ம.க.வில் இருந்தவன். கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்க கட்சி தி.மு.க. கூட்டணியில இருந்தும்கூட மின்தட்டுப் பாட்டை போக்குவேன்னு இந்தம்மா சொன்னதால, நானே இறங்கி இலைக்கு ஓட்டுக்கேட்டேன்.
எங்க அம்மாவையும் ஓட்டு போடச் சொன் னேன். இப்ப எங்கம்மா கேட்குறாங்க, "ஏண்டா சுந்தரம் இந்தம்மாவுக்கு ஓட்டு போட்டா கரண்ட் நல்லா வரும்ன்னு சொன்னியே இப்ப இருட்டுக் குள்ளதானடா இருகோம்'னு. எனக்கு நாக்கை புடுங்கிக்கிற மாதிரி இருக்கு.
அறிவிக்கப்படாத மின்வெட்டால தஞ்சை மாவட்டத்தில் நெல், கரும்பு, வெற்றிலையை இனி விவசாயம் செய்ய முடியாது. விவசாயிகள் இனி வேறு வேலை தேடிக்கவேண்டியது தான்''’என்கிறார் சோகமாய்..
புதுக்கோட்டை விவசாயி ஷாஜ கானோ ""கரண்ட் வந்ததும் யார் முதலில் தண்ணீர் பாய்ச்சறதுங்கிற பிரச்சினையில், ஆலங்குடி பக்கத்தில் தம்பியை அண்ணனே கொன்ற கொடுமையும் அரங்கேறியிருக்கு. மின்வெட்டைப் பத்தி இப்ப ஒரு எஸ்.எம்.எஸ் செய்தி எல்லா செல்போனுக்கும் வருதுங்க. அது காமெடியா இருந்தாலும் அதில் ஒரு ஷாக் இருக்கு. அந்த குறுஞ்செய்தி... 2007- ம் ஆண்டில் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் 86 பேர். 2008-ல் 75 பேர், 2009-ல் 50 பேர், 2010-ல் 15 பேர், 2011-ல் 0. கொய்யால கரண்ட் இருந்தாத்தானடா சாவீங்க என்பதுதான். நிலைமை எப்படி இருக்குப் பாருங்க''’என்றார் வேதனைச் சிரிப்போடு.
மக்களின் குமுறலை நாம் எழுதிக்கொண்டிருக்கும்போதே, அய்யோ! ஜெயா வந்தாச்சு! பவர்கட்!
இருட்டில் மூழ்கியிருக்கும் தமிழகம், தனது எதிர்காலத்தை கவலையோடு சிம்னி விளக்கை வைத்துத் தேடிக்கொண்டி ருக்கிறது.
No comments:
Post a Comment