""சமூகத்தில் முன் மாதிரியாக இருக்க வேண் டிய இரண்டுபேரின் "நட்பு' தடம் மாறியதால், ஒரு குடும் பமே புயலில் சிக்கிய படகுபோல தத் தளித்துக்கொண்டிருக்கிறது'' என்று வருத்தமாகச் சொன்ன நண்பரிடம், ""யார் அந்த இருவர்? விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றதும்...
""ஒருவர், தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை யின் இயக்குனர் முனைவர் மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்., மற் றொருவர் பெண்ணியம் பேசும் பிரபல கவிஞர் அ.வெண்ணிலா'' என்று சொன்னதைக் கேட்டதும் நமக்குத் தூக்கிவாரிப் போட்டது.
""நம்பவே முடியலியே, சமூக அக்கறையை மத்த வங்களுக்கு போதிக்கிறவங் களாச்சே அந்த ரெண்டு பேரும்...? என்ன நடந்த துன்னு விபரமா சொல் லுங்க?'' என்றதும் ஐ.ஏ.எஸ். குடும்பத்தை நன்கறிந்த அந்த நண்பர் நடந்த சம்பவங்களை விவரிக்கத் தொடங்கினார்.
""ஐ.ஏ.எஸ்.ராஜேந்திரன், மதுரை திருமங்கலத்துல பிறந்தவர். படிச்சு, ஆர்.டி.ஓ.வாக பதவி வகித்து, பதவி உயர்வு மூலம் நியமன ஐ.ஏ.எஸ். ஆகி திருவண்ணா மலைக்கு கலெக்டரா வந்தாரு. அந்த சமயம் தி.மலை மாவட்டத்துக் குட்பட்ட வந்தவாசியில, இந்திய சுதந்திரப் போரின் ஒருகட்டமாக "வந்தவாசி போர் நடந்த 250-வது ஆண்டு விழா'வை அரசு விழாவா கொண்டாட முடிவு செஞ்சிருந் தாங்க. விழா மலர் தொகுக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்ப டைக்கலாம்னு கலெக்டர் யோசனை பண்ணிக்கிட்டி ருந்தார். அந்த நேரம் பார்த்து எக்ஸ்னோரா அமைப்பு ஒரு பரிசளிப்பு விழாவுக்கு தலைமை தாங்க கலெக்டரை அழைத்தது.
அந்த விழாவில், வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையா பணியாற்றுகிற பெண்ணியவாதி அ.வெண்ணிலாவும் பரிசு பெற வந்திருந் தாங்க. விழா முடிஞ்சதும் ராஜேந்திரன்கிட்ட வந்த வெண்ணிலா, "வந்தவாசி போர் 250-வது ஆண்டு விழா சம் பந்தமா உங்களை சந்திக்கும்படி அமைச்சர் வேலு சொல்லியிருந்தார்' என்று கூற மகிழ்ச்சியடைந்த ராஜேந்திரன், தன்னிடமும் அமைச்சர் கூறியிருப்பதாக ஆமோதித்து, வந்தவாசி வரலாறு சம்பந்தமான கூட்டத்தில் பங்குபெற வருமாறு வெண்ணிலாவுக்கு அழைப்பு விடுத்தார்.
கூட்டத்தில் பேசியபோது, வந்தவாசி வரலாறு சம்பந்தமான நிறைய தகவல்கள் வெண்ணிலா மூலம் வெளிப்பட்டது. எனவே, விழா மலர் பொறுப்பை வெண்ணிலாவிடம் ஒப்படைத்தார் ராஜேந்திரன். வெண்ணிலாவின் கணவர் கவிஞர் முருகேஷ் நடத்தும் "அகநி பதிப்பகம்' மூலமா மலரை வெளியிட முடிவானது.
"விழா மலருக்கு நன்கொடையாக முக்கிய பிரமுகர்கள் ரூ.25,000/- தரவும்'னு ராஜேந்திரனே கடிதம் எழுதிக் கேட்டதால, 4 லட்சத்துக்கும் மேல வசூலானது. விழா மலரின் முகப்பில் "நூல் தொகுப்பு ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்., கவிஞர் வெண்ணிலா' என இருவர் பெயரும் இடம் பெற்றது. நூலை, அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுதான் வெளியிட்டார். ஒரு நூலின் விலை ரூ.250/- என்று விற்கப்பட்டது.
அந்த நூல் வெளியீட்டுக்குப் பிறகு, ராஜேந்திரனுக் கும் வெண்ணிலாவுக்கும் நெருக்கம் அதிகமானது. ஒரு நாளைக்கு 15 தடவை மொபைல்ல பேசற அளவுக்கு நெருங்கிட்டாங்க. ரிவ்யூ மீட்டிங் நடக்கும்போது வெண் ணிலா போன் பண்ணுவாங்க. இவரு கட் பண்ணுவாரு. திரும்பவும் போன் பண்ணுவாங்க. உடனே இவரு மீட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு போன் பேச போயிடு வாரு. வீட்ல இருக்கும்போது வெண்ணிலாவோட போன் வந்தா இவரு முகம் பிரகாசமாகி, தனியா போய் ரகசியமா பேசறதும், வெண்ணிலாவோட மெசேஜ்களை "டக் டக்'னு டெலீட் பண்றதும் ராஜேந்திரனோட மனைவி சாந்திக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கு.
வந்தவாசி அருகே இருக்கிற வெண்குன்றம் மலை சிவன் கோயில் ஆய்வுக்காக ராஜேந்திரன் செல்லும்போது வெண்ணிலாவை தன்னோடு காரில் அருகே அமரச் செய்து அழைத்துச் சென்றதையும், மலைமேல் இருவரும் ஏகாந்தமாக இருந்ததையும் கண்டு அதிர்ந்த கீழ்மட்ட அதிகாரிகள், ராஜேந்திரன் மனைவி சாந்திக்கு தகவல் கொடுக்க... சாந்தி வெண்குன்றத்துக்கு விரைந்து வந்து "இருட்டும் வெளிச்சத்தில்' வெண்ணிலாவுடன் சண்டை போட... "அந்த கணம்' வெண்ணிலா, "உன் புருஷன வீட்ல கட்டிப்போடு, என்னை அதி காரம் பண்ணாதே'ன்னு எகிற, சாந்தி கண்ணீ ரோடு திரும்பிட்டாங்க. அன்று இரவு வந்த வாசி சர்க்யூட் ஹவுஸ்ல தங்கி வெண்ணிலாவை சமாதானம் பண்ணிட்டு மறுநாள்தான் திரு வண்ணாமலைக்கு வந்தாரு கலெக்டர்'' என்றார்.ராஜேந்திரன் மனைவி சாந்தி கண்ணில் நீர்க்கோலத்துடன் நம்மிடம் பேசியபோது, ""அவரு தவறான வழியில போறாருன்னு தெரிஞ்சு நான் கேட்டதுக்கு "அவ இல்லாம நான் இல்லை'னு உறுதியா சொல்லிட்டாரு. எங்க சொந்தக்காரங்க, அவரோட தம்பிங்க வந்து பேசியும் அவரு மனசு மாறல. அந்த வெண்ணிலா இவரோட பதவியை வச்சி பணம் பறிக்கறதுலயே குறியா இருக்கு. வேலையில நேர்மையா இருந்த வரு இப்ப வெண்ணிலாவுக்காக பலபேர்கிட்ட கையேந்துறாரு. "இந்திய சுதந்திரம்'னு 6000 பக்கம் கொண்ட புத்தகம் போடறதுக் காக, பன்னாரி சுகர் மில் ஓனர் கிட்ட பணம் கேட்டு கடிதம் எழுதனாரு. அவங்க மே 30-ந் தேதி 12 லட்ச ரூபாய் செக்கை வெண்ணிலா கணவருக்கு அனுப்பி வச்சாங்க. சிங்கப்பூர்ல இவர்மேல மதிப்பு வச்சிருக்கிற சிலர் இருக்காங்க. அவங்க கிட்ட நிதி வசூல் பண்றதுக்காக வெண்ணிலா கணவரை சிங்கப்பூருக்கே அனுப்பி வச்சாரு. ஒழுங்கு நடவடிக்கை கமிஷனரா சென்னைக்கு மாற்றலானதும், சென்னையில இருக்கிற மெகா வியாபாரிங்ககிட்டயெல்லாம் வெண்ணிலாவுக் காக நிதி கேட்டிருக்காரு. வீட்டுல சம்பளத்த குடுத்து ஒரு வருஷத்துக்கு மேலாகுது. பெரும் பாலும் வீட்டுக்கே வர்றதில்ல. சனி, ஞாயிறு கூட தலைமைச் செயலகத்துக்குப் போயி இவரே சாவி வாங்கித் திறக்கறாராம். இயக்குன ரும் அவரோட மனைவியும் ரூம்ல இருக்காங் கன்னு மத்தவங்க சொல்ற அளவுக்கு ரெண்டு பேரும் நடந்துக்கிறாங்களாம். சமீபத்துல அவ ரோட காரை பக்கத்து தெருவுல நிறுத்திட்டு வெண்ணிலா வீட்டுக்குப் போய் இரவு 9 மணி வரைக்கும் இருந்திருக்காரு. வெண்ணிலா வோட கணவர்கிட்ட இதையெல்லாம் சொன்னதுக்கு, "அவரு புத்தக விஷயமாத்தான் வர்றாரு, போறாரு'ன்னு சொல்றார்.
மகள் மேல் ராஜேந்திரன் வெச்சிருந்த பாசத்தைச் சொல்வதற்கு "ஆதியில் சொற்கள் இருந்தன...' இப்போ, மகன், மகள்கிட்ட கூட அவரு பேசறதில்ல. ஹாஸ்டல்ல படிக்கிற பொண் ணை போய் பார்க்கக்கூட அவருக்கு நேரமில்ல.
ஒருநாள், "உங்க மனைவி போன்பண்ணி திட்டுறாங்க'ன்னு வெண்ணிலா சொன்னதுக்காக, வீட்டுக்கு வந்து என்னை அடிச்சி உதைச்சார். தடுக்க வந்த என் மகனுக்கும் அவருக்கும் பெரிய சண்டையாயிருச்சு. இதனால மகனோட கல்யாணம் தடைபட்டு நிற்குது. ஐ.ஏ.எஸ். கோச்சிங் போகும் மகன் ரொம்ப நொந்துபோயிருக்கான். வீட்டுல இருந்த நகைகள், சேமிப்பு எல்லாத்தையும் அவ புத்தகம் போடறான்னு சொல்லி கொண்டு போய் குடுத்துட்டாரு. "கனவும் விடியும்'னு காத்துக்கிட்டிருக்கேன். கணவரில்லாத வீடு "கனவிருந்த கூடு' போல உள்ளது...'' என்று அழுது கொண்டே சொன்னார் சாந்தி ராஜேந்திரன்.
இதுபற்றி மேலும் சிலரிடம் விசாரித்த போது... ""உயர் பொறுப்புல இருக்கீங்க. ஊர்ல தப்பா பேசறாங்க... அந்தப் பொண்ணோட பழகாதீங்க''ன்னு சொன்னதுக்கு, ""வெண்ணிலாவப் பத்தி தப்பா பேசற யாரும் என்கிட்ட வரா தீங்க''ன்னு முகத்தில் அடிச்ச மாதிரி சொல்லிட் டார் ராஜேந்திரன். பாவம் அவரோட மனைவியும் பிள்ளைகளும் "நீரில் அலையும் முக'த்தோடு தினமும் அழுதுகிடடு இருக்காங்க'' என்றனர் வேதனையுடன்.
நாம் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.ஸிடம் இதுகுறித்து கேட்டபோது... ""அரசுக்கு சொல்லிட்டுத்தான் பணம் கேட்டேன். அதுலயும் நாலைந்து பேர்தான் பணம் தந்தாங்க. பன்னாரி சுகர் மில்லுல கேட்டது உண்மை. ஆனா, அவங்க பணம் தரலை. எனக்கும் வெண்ணிலாவுக்கும் இருக்கிறது எழுத்தாளர்கள் என்கிற பந்தம்தானே தவிர வேற எதுவுமில்லை. என் மனைவியும் மத்தவங்களும் அதை தவறா புரிஞ்சிக்கிட்டிருக்காங்க'' என்றார் மிகவும் சிம்பிளாக.
ஆசிரியை வெண்ணிலாவிடம் இது குறித்து கேட்டபோது... ""இப்ப "இந்திய சரித்திர களஞ்சியம்'ங்கிற புத்தகத்தை நான், என் கணவர் முருகேஷ், ராஜேந்திரன் சார் மூணு பேரும்தான் போடறோம். பலபேர்கிட்ட விளம்பரம் போடத்தான் பணம் கேட்டோம். இதுல என்ன தப்பு? எங்கள் இருவரையும் இணைத்து வைத்து தவறா பேசறாங்க. அவரு எனக்கு எதுவும் செய்யல. தினமும் அவருக்கு நான் 15 முறை போன் பண்றதா சொல்றாங்க. போன் வந்தாலே நான்தான் பேச றேன்னு மத்தவங்க நினைச்சுக்கிட்டா நான் என்ன செய்ய முடியும்? நல்லா கதை கட்டி விடறாங்க. எங்கள் நட்பை அவங்க மனைவி தவறா புரிஞ்சிக்கிட்டதால வெளியில உள்ளவங்களையும் இப்படி தவறா பேச வச்சி ருச்சு. இதுதான் "மீதமிருக்கும் சொற்கள்' வேறெதுவுமில்லை'' என்கிறார்.
"நேற்றின் மழையில்' முளைத்த இந்த நட்பு, இந் தளவு உறுதியானதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதையைச் சொல்கிறார்கள் வந்தவாசி வாசிகள். அதாவது, "தஞ்சையை ஆண்ட ராஜ ராஜசோழனும், அவன் மனைவி வீரமாதேவியும் காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு சண்டையில் இறந்து விட்டார்களாம். அந்த ராஜராஜசோழன்தான் இந்த ஜென்மத்தில் ராஜேந்திரனாகப் பிறந்து திரு வண்ணாமலையை (மாவட்ட ஆட்சித் தலைவரா) ஆட்சி செய்யறீங்க. போரில் இறந்த உங்க மனைவி வீரமாதேவி இந்த ஜென்மத்துல வெண்ணிலாவா வந்தவாசியில பிறந்திருக்கேன்''ன்னு வெண்ணிலா ஒருமுறை ராஜேந்திரனிடம் சொன்னதாகவும், அதைக்கேட்டு "பூமிக்குச் சற்று மேலே' மிதந்த ராஜேந்திரனிடம் மேலும் "உங்களை கவர்னராக ஆக்குகிறேன்' என்றும் வெண்ணிலா வாக்குறுதி கொடுத்துள்ளாராம். இதை நம்பித்தான் வெண்ணிலா வுடன் ராஜேந்திரன் தினம் உதிரும் கனவுகளாக இத்தனை நெருக்கம் கடைபிடித்து வருவதாக சிலர் காதுகளில் கிசுகிசுத்துக்கொண்டிருக் கிறார்கள்.
எது எப்படியிருந்த போதிலும், ஒரு பெண்ணிய எழுத்தாளரால் ஒரு குடும்பம் கண்ணீரில் மிதப்பது தான் கவலை தரும் விஷயம்.
No comments:
Post a Comment