Thursday, December 8, 2011

பில் கேட்ஸ்


மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை உருவாக்கியவரும், உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ், செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அப்பா வில்லியம் ஹென்றி ஜூனியர் பிரபலமான வக்கீல். அம்மா மேரி மேக்ஸ் வெல் பள்ளி ஆசிரியர். கேட்ஸுக்கு கிறிஸ்டி என்ற அக்காவும் லிப்பி என்ற தங்கையும் உண்டு. பில்கேட்ஸ் சிறு வயது முதலே படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தார். கணக்கும் அறிவியலும் அவனுக்கு மிகவும் பிடித்த பாடங்களாக இருந்தன. கேட்ஸின் முழுப்பெயர் வில்லியம் ஹென்றி கேட்ஸ்.சியாட்டில் நகரத்தில் இருந்த படிப்புக்கு பெயர் போன லேக்சைடு பள்ளியில் படித்தான் கேட்ஸ். அங்கே நிலவிய சூழ்நிலை, பாடத் திட்டம், கற்பிக்கும் முறை, ஆசிரியர்களின் அரவணைப்பு போன்ற பல அம்சங்களும், கேட்ஸின் அறிவு வளர்ச்சிக்கு உரமிட்டன. கேட்ஸுக்கு முதன் முதலாக கம்ப்யூட்டர் அறிமுகமானது அங்கேதான்! ஞாயிற்றுக் கிழமைகளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து டின்னர் சாப்பிடுவது வழக்கம். அது கேட்ஸுக்கு மிகவும் பிடிக்கும். சீட்டுக் கட்டு, டேபிள் டென்னிஸ் போன்றவை கேட்ஸ் விரும்பிய விளையாட்டுகள். ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்துமஸ் சமயத்தில் தானே வாழ்த்து அட்டைகள் தயாரித்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வைப்பார் கேட்ஸ்.


கேட்ஸின் பெற்றோர் தங்கள் மகனை ஒரு வக்கீலாக்க விரும்பினார்கள். ஆனால் கேட்ஸையும் பால் ஆலன் உள்ளிட்ட அவனுடைய நண்பர்களையும், அந்தப் பள்ளியின் கம்ப்யூட்டர் கவர்ந்து இழுத்தது. அந்த மாணவர்கள் நாள் முழுக்க கம்ப்யூட்டர் அறையிலேயே தவமாகக் கிடந்தார்கள். பல நாள்கள் இரவு வெகு நேரம் வரை கண் விழித்து கம்ப்யூட்டர் பற்றிய புத்தகங்களைப் படிப்பது, புரோகிராம்கள் எழுதுவது என்று நேரத்தைச் செலவிட்டார்கள். கேட்ஸுக்கும் நண்பர்களுக்கும் மற்ற பாடங்களில் ஆர்வம் குறைந்தது. கேட்ஸ் குழுவினரின் ஆர்வத்தால், பள்ளி கம்ப்யூட்டரே அடிக்கடி ரிப்பேர் ஆனது. கம்ப்யூட்டர் அறைக்குள்ளேயே நுழையக் கூடாது என்று தடை வந்தது. இவர்களின் திறமையை அறிந்த கம்ப்யூட்டர் சென்டர் கார்பரேஷன் நிறுவனம், கேட்ஸ் குழுவினரை அழைத்து, வேலை கொடுத்தது. அப்போது கேட்ஸுக்கு வயது 15. கேட்ஸ் குழுவினர் தங்களை ‘லேக்சைடு புரோக்ராமர்கள் குழு’ என்று அழைத்துக் கொண்டார்கள். ஒரு வருடத்தில் அவர்களுக்கு இன்ஃபர்மேஷன் சயின்ஸஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் கணக்கிடும் பணியைச் செய்ய ஒரு கம்ப்யூட்டரை உருவாக்கினார்கள். இதற்குள், கேட்ஸ் ஒரு திறமையான கம்ப்யூட்டர் புரோகிராமராகத் தன்னை நிரூபித்துக்கொண்டார். கேட்ஸ் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1975-ம் ஆண்டு ஜனவரி மாதம் ‘பாபுலர் மெக்கனிக்’ பத்திரிகையில் 350 டாலரில் ‘ஆல்டர்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மைக்ரோ கம்ப்யூட்டர் பற்றிய விரிவான கட்டுரை வெளியாகி இருந்தது. நியூ மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்த அந்தப் புதிய கம்ப்யூட்டர் பற்றி மேலும் பல தகவல்களைத் தேடிப் படித்தார்கள் கேட்ஸும் ஆலனும். ‘இனி கம்ப்யூட்டர்கள் இந்த உலகில் புதிய சரித்திரம் படைக்கப் போகின்றன’ என்பதையும், இந்த கம்ப்யூட்டர்களுக்கான புரோகிராம்களை எழுதும் பணிக்கு எதிர்காலத்தில் பெரும் வாய்ப்புகள் இருப்பதையும் தெரிந்துகொண்டார்கள்.

அதே ஆண்டில், ஹார்வர்ட் பல்கலைக் கழக படிப்புக்கு குட் பை சொல்லி விட்டு, கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில் நுழைய முடிவு செய்தார்கள். இருவரும் சேர்ந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். கம்ப்யூட்டர்களைக் கொண்டு பல்வேறு வேலைகளைச் செய்வதற்குத் தேவையான சாஃப்ட்வேர் புரோகிராம்களை எழுதித் தர ஆரம்பித்தார்கள். ஓராண்டுக்குள்ளாகவே, உலகப் புகழ்பெற்ற ஐ.பி.எம். நிறுவனத்துக்கு எம்.எஸ்.டாஸ் (MS&DOS) என அழைக்கப்படும் கம்ப்யூட்டர் ஆபரேடிங் சிஸ்டத்தை உருவாக்கிக் கொடுக்க பெரும் வாய்ப்பு வந்தது.

No comments:

Post a Comment