Monday, December 5, 2011

அதிமுகவில் வடிவேலு. திசை மாறும் வைகைப்புயல்.


தொலைத்ததை தொலைத்த இடத்திலேயே தேடுவதுதான் சரியாக இருக்கும்’ என்பது வடிவேலுவுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது. அதனால்தான் அரசியலால் தொலைத்துவிட்ட சினிமா வாய்ப்பை மீட்டெடுக்க மீண்டும் அரசியலையே பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார் போலும்.


கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் பிரசார பீரங்கியாக வலம் வந்தவர் வடிவேலு. தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் அ.தி.மு.க. கூட்டணியை மேடைகளில் வறுத்தெடுத்தார். அதிலும் விஜயகாந்தை தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் வடிவேலு செய்த விமர்சனங்கள் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சிகள் கருணாநிதி, ஸ்டாலினை விட அதிகமாகக் காட்டியது வடிவேலுவைத்தான்.

ஆனால், தேர்தலுக்குப் பிறகு எல்லாமே தலைகீழாகிப் போனது. அ.தி.மு.க. அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க, பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனார் வடிவேலு. அதுமட்டுமின்றி, ‘விஜயகாந்துதான் எனக்கு எதிரி. எனவேதான் அவரை எதிர்த்து நான் பிரசாரம் செய்தேன். நான் அ.தி.மு.க.வையோ, அம்மாவையோ விமர்சித்து எ துவும் பேசவில்லை’ என்பதாகக் கூறி ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பித்துக் கொண்டார்.

ஆனாலும் அ.தி.மு.க.வின் வெற்றி சினிமா வட்டாரத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. சினிமா துறையில் அ.தி.மு.க. ஆதரவாளர்களின் கை ஓங்கத் தொடங்கியதும் வடிவேலுவுக்கான சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டன. தே.மு.தி.க.வினரால் ஆபத்து வந்துவிடுமோ என பயந்து, வடிவேலு சென்னையை விட்டு விலகி வசித்ததும் நடந்தது.

இந்த சூழ்நிலையில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாகவோ, விஜயகாந்துக்கு எதிராகவோ வடிவேலு எந்த மேடையிலும் ஏறவில்லை. காரணம், விஜயகாந்தை எதிர்க்கப் போய் அ.தி.மு.க.வின் எதிரியாக தன்னை முத்திரை குத்திவிட்டார்களே என்று நொந்து போயிருக்கிறார் வடிவேலு.

சினிமாவில் பிஸியாக இருந்த அவர், தி.மு.க.காரராக தன்னைக் காட்டிக் கொண்டதிலிருந்து இப்போது சினிமா வாய்ப்புகளும் இல்லாமல் அரசியல்வாதியாகவும் இருக்க முடியாமல் இரண்டுக்கும் இடையில் சிக்கிக் கொண்டுள்ளார். இந்த நிலையில்தான் வடிவேலு அ.தி.மு.க.வில் சேரப் போகிறார் என்ற செய்தி நமக்கு எட்டியது. நாம் விசாரணையில் இறங்கினோம்.

இதற்கிடையே, விஜயகாந்தின் பால்ய நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் குறித்தும் ஒரு செய்தி காற்றுவாக்கில் நம்மிடம் வந்து சேர்ந்தது. விஜயகாந்திடமிருந்து ராவுத்தர் பிரிந்து விட்டார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனாலும், அவர்கள் எதிரும் புதிருமாக இருக்கிறார்கள் என்பதோ, ராவுத்தர் மிகவும் கஷ்டமான சூழலில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பதோ பலருக்குத் தெரியாது. இப்போது விஜயகாந்தின் நேரடி எதிரியாகி விட்ட ராவுத்தர் அ.தி.மு.க.வில் சேரத் திட்டமிட்டிருக்கிறாராம். இதுகுறித்து அவர் அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளி ஒருவரை சந்தித்துப் பேசியிருக்கிறார் என்ற ஆதாரபூர்வமான செய்தி நமக்குக் கிடைத்தது. இதுகுறித்து ராவுத்தரின் தரப்பில் நாம் பேசினோம்.

‘‘ராவுத்தரும் விஜயகாந்தும் எந்த அளவுக்கு நெருக்கம் என்பதை இந்த சினிமா உலகமே அறியும். சாதாரணமாக இருந்த விஜயகாந்தை ஒரு சக்ஸஸ்ஃபுல் ஹீரோவாக்கிய பெருமை ராவுத்தரையே சேரும். விஜயகாந்தின் வள ர்ச்சிக்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விட்டார் ராவுத்தர். ஆனால், விஜயகாந்தோ தனது திருமண த்திற்குப் பின் ராவுத்தரை சேர்க்கவில்லை. சினிமாவில் மிகப் பெரிய தயாரிப்பாளராக இருந்த அவர் இப்போது ஒன் றுமில்லாமல் இருக்கிறார்.
விஜயகாந்ந் ஆளுங்கட்சிக் கூட்டணியில் இடம் பெற்று விட்டதால் அமைதியாக இருந்தார் ராவுத்தர். இந்த உள்ள £ட்சித் தேர்தலில் விஜயகாந்த் - அ.தி.மு.க. கூட்டணி உடைந்து விட்டது. தே.மு.தி.க. படுதோல்வியடைந்தது. அதுமட் டுமின்றி விஜயகாந்தும் அ.தி.மு.க.வை நேரடியாகவே விமர்சிக்கத் தொடங்கி விட்டார். இந்த சூழ்நிலையில் விஜயகா ந்தைப் பற்றி அதிகளவில் தெரிந்தவரும், அவரால் அதிக அளவில் பாதிக்கப்பட்டவருமான ராவுத்தர் அ.தி.மு.க.வில் சேர முடிவெடுத்துள்ளார். அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். கூடிய விரைவில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அவர் அ.தி.மு.க.வில் இணைய இருக்கிறார்’’ என்றனர்.

இது ஒருபுறமிருக்க, விஜயகாந்தின் நேரடி எதிரியாக மோதிக் கொண்டிருப்பவர் வடிவேலு. எதிரிக்கு எதிரி நண்பன் என்பது மட்டுமின்றி வடிவேலுவும் ராவுத்தரும் சினிமாக்காரர்கள் என்ற வழியிலும் இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வது வழக்கம். இந்த நிலையில் வடிவேலுவுக்கு ராவுத்தரின் அ.தி.மு.க. முயற்சி பற்றிய விவரங்கள் தெரியவர, அவரும் ராவுத்தரிடம் அது பற்றி கேட்டிருக்கிறார்.

அ.தி.மு.க.வில் இணைவது பற்றிய விவரங்களையும், அதற்கான காய்கள் நகர்த்தப்பட்டு வருவது குறித்தும் கூறிய ராவுத்தர், வடிவேலுவையும் அ.தி.மு.க.வில் சேரும்படி கூறியிருக்கிறார். அப்படிச் சேர்ந்துவிட்டால் மீண்டும் பழையபடி சினிமா வாய்ப்புகள் தாராளமாகக் கிடைக்கும் என்று அறிவுரை சொல்லியிருக்கிறார். அதற்கு வடிவேலு தன்னையும் கார்டனுக்கு அழைத்துச் செல்லுமாறு ராவுத்தரிடம் கேட்டிருக்கிறாராம்.

ராவுத்தருடன் இணைந்து தானும் .அ.தி.மு.க.வில் இணைந்து விடலாம் என்பதுதான் வடிவேலுவின் இப்போதைய தி ட்டமாம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் தனக்கு சினிமா வாய்ப்புகளே இல்லாமல் போனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியான நடிகராக உருவாவது என்பது இயலாத காரியம். அ துவும் ஒரு மாதம் மட்டுமே ஒரு அரசியல் கட்சிக்காக மேடையேறிய காரணத்திற்காக தனது சினிமா வாழ்க்கையை முடக்கிக்கொள்ள வடிவேலு விரும்பவில்லையாம். எனவே, அவரும் அ.தி.மு.க.வில் சேர முடிவெடுத்துள்ளாராம்.

இது ஒருபுறமிருக்க, இந்த இருவரையும் அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டிருப்பது ஆர்.கே.நகர். சட் டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வும் வடசென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான வெற்றிவேல்தான் எ ன்கிறார்கள். இரண்டுமுறை வெற்றிவேலை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் ராவுத்தர். வடிவேலு தரப்பிலிருந்தும் வெற்றிவேலிடம் பேசப்பட்டு விட்டது. வடிவேலுவும் வெற்றிவேலை ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வெற்றிவேலிடம் நாம் கேட்டதற்கு, ‘‘தி.மு.க. கூடாரமே காலியாகிக் கொண்டிருக்கிறது. பல்வேறு கட் சிக்காரர்களும் அம்மாவைச் சந்தித்து அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். அதன்படி யார் வேண் டுமானாலும் அ.தி.மு.க.வில் சேரலாம். ஆனால் வடிவேலும், ராவுத்தரும் என்னை சந்தித்துப் பேசினார்களா? அவர்கள் அ.தி.மு.க.வில் சேரப் போகிறார்களா? என்ற விவரத்தை எல்லாம் நான் அம்மாவிடம்தான் தெரிவிக்க வேண்டுமே தவிர, உங்களிடம் பேச முடியாது. ஆனாலும் யார் யார் கட்சியில் சேருகின்றார்கள் என்பதை கூடிய சீக்கிரத்தில் நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்வீர்கள். அதில் வடிவேலு, ராவுத்தர் என யாராக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’’ என்று கூறினார்.

அ.தி.மு.க. தரப்பிலோ, ‘‘விஜயகாந்த் சமீப காலமாக அ.தி.மு.க.வை விமர்சித்துப் பேசி வருகிறார். அவருக் கெல்லாம் பதிலளிக்க வடிவேலு போன்ற வர்களே போதும். எனவே, அவர் அ.தி.மு.க. வருவதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைப்பது மகிழ்ச்சி யான விஷயமாக இருந்தாலும் விஜயகாந்தை விமர்சிக்க அவர் எங்களுக்கும் பய ன்படுவார்’’ என்கின்றனர்.

எப்படியோ, கூடிய விரைவில் அ.தி.மு.க. மேடைகளில் வடி வேலுவைப் பார்க்க லாம் என்பது மட்டும் புரிகிறது.
அ.தி.மு.க.வில் சேர்வது குறித்து வடிவேலு தரப்பில் கேட்டதற்கு, ‘‘அண்ணனுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்பதோ, அதற்காக கட்சி மாறுகிறார் என்பதோ வெறும் வதந்திதான். அடிப்படையில் அண்ணன் ஒரு நடிகர் அவ்வளவுதானே தவிர, அரசியல்வாதி எல்லாம் கிடையாது. அவர் பல பேட்டிகளில் தனது அரசியல் ஈடுபாடுகள் குறித்து தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார். அவரது கவனமெல்லாம் கலைத்துறையில்தான் இருக்கிறதே தவிர, வேறு எங்கும் திரும்புவதில்லை. இப்போதைக்கு அவர் சற்று ஓய்வுக்காக ஒதுங்கி இருக்கிறார். அதை வைத்து இப்படிச் சொல்வது சரியல்ல’’ என்றனர்.

No comments:

Post a Comment