Friday, December 2, 2011

கனிமொழி ஜாமீனுக்கு காங்கிரசுக்கு நன்றிக்கடன் செய்யும் திமுக.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு விவகாரம் கடும் நெருக்குதலைத் தந்துள்ள சூழலில், திமுகவின் நிலைப்பாட்டால் மத்திய அரசு சற்றே நிம்மதி அடைந்துள்ளது.



இந்த விவகாரத்தையொட்டி, நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க வேண்டும் என பிஜேபி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.


இந்தக் கோரிக்கையை முன்வைத்து அக்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதால், தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன.


இந்த நிலையில், வேறு வழியின்றி இப்பிரச்னை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.


அதேவேளையில், அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


இதனால், இப்பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தும் சூழல் வந்தால், அரசுக்கு போதிய ஆதரவு கிடைக்காமல் போகும் சூழலும் ஏற்பட்டது.


இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணி கட்சியின் மூத்தத் தலைவர்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசியுள்ளார்.


அப்போது, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அரசுக்கு ஆதரவாகவே செயல்படுவோம் என திமுக சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசுக்கு சற்றே நிம்மதி ஏற்பட்டுள்ளது.

கனிமொழி ஜாமினில் விடுதலை அடைந்ததற்கு நன்றிக்கடனாக இந்த் உறுதி திமுக சார்பில் காங்கிரஸுக்கு அளிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment