Monday, December 5, 2011

ஏய்… நான் ஜெயிலுக்கு போறேன்… ஜெயிலுக்கு போறேன்…!!

மிழ்நாட்டில் நடந்து வரும் விசித்திரமான போக்கு, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இருக்கவே இருக்காது.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், அ.தி.மு.க.வினரை எப்படி பழி வாங்குவது?அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தி.மு.க.வினரை எப்படி பழி வாங்குவது?

இந்த இரண்டுக்கும் இடையில் தான் தமிழன் சிக்கிக் கொண்டு சாகின்றான். இரு கட்சிகளின் மோதல், சண்டை, கமிஷன், கொள்ளை ஆகியவற்றை மீறி, தமிழ்நாட்டின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது.
இந்த தலைவிதியை மாற்றவே முடியாது?
சரி. இது போகட்டும்?
அ.தி.மு.க. ஆட்சி எதற்கு வந்தது? மக்கள் யாரும் அ.தி.மு.க. ஆட்சி வந்து அதன் சார்பில் ஜெயலலிதா ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படவில்லை. தி.மு.க. ஆட்சியில் இருக்கவே கூடாது என்று மக்கள் ஆசைப்பட்டது தான் உண்மை. அந்த ஆசையின் விளைவாக வந்தது தான் அ.தி.மு.க. ஆட்சி.
KARUNA_2011-Aஅ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், நில அபகரிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. சரி, இச்சட்டம் யார் யாருக்கு பயன்படுத்த வேண்டும் என்பதும் சரி.
இதையே நாளுக்கு நாள் விரிவுப்படுத்திக் கொண்டிருந்தால், மக்களின் கதி?
விலைவாசியை கட்டுப்படுத்த ஆட்சி என்ன நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது? பால் விலை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பஸ் கட்டணம் மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியை மக்கள் இன்னும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதா என்றால் இல்லை என்றே அடித்து சொல்லி இருக்கலாம்.
இந்த நிலையில், முன்னாள் துணை முதல்வரும் தி.மு.க. பொருளாருமான மு.க.ஸ்டாலின் மீது வீடு அபகரிப்பு புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது வீடு, தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில்(செனாடப் சாலை) உள்ளது. இவரது வீட்டின் அடுத்த வீடு, சேஷாத்ரிகுமார் என்பவருக்குச் சொந்தமானது. அந்த வீட்டை மிரட்டி வாங்கிக் கொண்டதாக ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, ராஜா சங்கர், வேணுகோபால் ரெட்டி, சுப்பா ரெட்டி, சீனிவாசன் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில், சிக்கி இருக்கும் சுப்பா ரெட்டி யார் தெரியுமா? இவர் சீப்ராஸ்(cebros) நிறுவனத்தின் அதிபர். இவர் எப்படி சிக்கினார் என்பது தனிக்கதை.
ஆக, சேஷாத்ரிக்கு சொந்தமான 2.75 கிரவுண்ட் நிலத்தில் வீடு இருக்கிறது. அந்த வீட்டை மிரட்டி எழுதி வாங்கினார்கள். ஆனால், யார் பெயரில் என்பதுதான் சுவாரஸ்யம். வேணுகோபால் ரெட்டி என்ற பெயரில் வீடு வாங்கப்பட்டிருக்கிறது. வாங்கபட்ட இடத்தில் புதிய வீட்டையும் கட்டி, ஏற்கனவே(அதுவும் சேஷாத்ரிக்கு சொந்தமான 5.5 கிரவுண்ட்) ஸ்டாலின் வசிக்கும் வீட்டுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.
azhagiri1300புதிதாக கட்டப்பட்ட வீட்டில், ஸ்டாலின் மகள் செந்தாமரையும் அவரது கணவர் சபரீசனும் வசித்து வருகிறார்கள். அந்த வீட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வாடகை தரப்படுகிறது. அதற்கான ஒப்பந்தம், உதயநிதிக்கும் வேணுகோபால் ரெட்டிக்கும் போடப்பட்டிருக்கிறது.(பாவம், துணை முதல்வரின் மகள் வாடகை வீட்டில் தான் வசிக்க வேண்டுமா?)
இந்த வழக்கில் எப்.ஐ.ஆர். போடப்பட்டதும், ஸ்டாலின் கொதித்துவிட்டார். உடனே, இன்று பகல் 11 மணிக்கு டி.ஜி.பி. ஆபிஸ் போய் ‘முடிந்தால் என்னை கைது செய்து பார்’ என்று சவால் விடுகிறார்.
‘வழக்கே வா’ என்று அண்ணா பாணியில் முழக்கமிடுக்கிறார்.
ஆகா… 2001ம் ஆண்டு மேம்பால வழக்கில் அப்பாவை குண்டுக்கட்டாக தூக்கிய போது, பெங்களூருவை நோக்கி காரில் தப்பித்த தலைவருக்கு எப்படி இந்த வீரம்? சரி வரவேற்க வேண்டிய வீரம் தான்.
ஆனால், ஸ்டாலின் என்ன செய்திருக்க வேண்டும்.
‘வழக்கு போடப்பட்டிருக்கிறது. இதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்’ என்று பேட்டியுடன் நிறுத்திருந்தால் சரி. அதென்ன… ‘என் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. kanimozhi1_at_polce_vanநானே டி.ஜி.பி. ஆபிஸ் வருகிறேன். முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்’ என்று சவால் விடுவது வீரமும் அல்ல. விவேகமும் அல்ல.
இது கொஞ்சம் ஓவர் ரியாக்‌ஷன். அல்லது நாளை கனிமொழி வரும் போது, கனிமொழி வரும் போது கிடைக்கும் பப்ளிசிட்டியைவிட, ‘நான் ஜெயிலுக்கு போறேன். நான் ஜெயிலுக்கு போறேன்’ என்று வடிவேலு சொல்லிக் கொண்டிருப்பது போல ஸ்டாலின் செய்திருக்கலாமா?
அப்படி நடந்தால், அது தனக்கு பெரும் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று அவர் தப்பு கணக்கு போடுகிறார்.
கட்சி ஏன் தோற்றது? எதிர்கட்சி அந்தஸ்தை ஏன் இழந்தோம்? என்று இந்த ஆறு மாதங்களில் ஆய்வு செய்து, இன்னும் கட்சியையும் அதை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களையும் இனியும் ஏமாற்ற வேண்டாம் என்று முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது? கனிமொழியால் வரப்போகும் இன்னும் எத்தனை பிரச்னைகள்? அழகிரியால் வரப்போகும் தொல்லைகள்?
இதையெல்லாம் கடந்து, அப்பாவின் தப்பாட்டங்கள். இதற்கிடையில், அராஜகம் செய்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் உடன்பிறப்புகள் என்று இருக்கும் நிலையில், தி.மு.க.வை வழி நடத்த ஆளே இல்லாத வேளையில்……………………
“நான் ஜெயிலுக்கு போறேன்… நான் ஜெயிலுக்கு போறேன்’ என்று கூவுவது முன்னாள் துணை முதல்வருக்கு அழகல்ல !

No comments:

Post a Comment