Thursday, October 18, 2012

வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, வாட்டாள் நாகராஜ் போல் நடந்து கொள்கிறார். வைகோ ஆவேசம்



தமிழகத்துக்குத் தண்ணீர் தராத கர்நாட கத்துக்கு நெய்வேலியில் இருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும்’ என்று, தமிழகத்தில் இருந்து குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. கீழணைப் பாசன விவசாயிகள், திராவிடர் கழகத்தினர், காவிரி மீட்புக் குழுவினர் என்று, தமிழகத்தின் பெரும்பாலான இயக்கங்கள் கர் நாடகத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடாது என்று வற்புறுத்தி, நெய்வேலியை முற்றுகையிட்டு போராட் டங்கள் நடத்தி இருக்கின்றன. ம.தி.மு.க-வும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

12-ம் தேதி காலை நெய்வேலிக்கு வந்த வைகோ, பெரியார் சிலைக்கு மாலை போட்ட நிமிடத்தி லேயே குரலை உயர்த்தி, ''கர்நாடகத்துக்கு மின் சாரத்தை வழங்காதே...'' என்ற கோஷத்தை முழங்க... கூடி இருந்த தொண்டர்களும் உரக்க ஒலி எழுப்பினர். ''நதிநீர் ஆணையம், உச்ச நீதி மன்றம், பிரதமர் என்று எல்லோரும் சொல்லி யும் அதை ஏற்காத கர்நாடகத்தின் அராஜகத்தைக் கண்டித்தும் அவர்களிடம் இருந்து தண்ணீரைப் பெற்றுத்தராத மத்திய அரசைக் கண்டித்தும்தான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்காவிட்டால், லட்சம் பேரைத் திரட்டி நெய்வேலியை முற்றுகையிட்டு கர்நாடகத்துக்குச் செல்லும் மின்சாரத்தை நிறுத்துவோம் என்று எச்சரிக்கிறேன்'' என்று குரல் உயர்த்தினார்.



''தண்ணீர் தரக்கூடாது என்று, அமெரிக்காவில் இருந்தபடியே, பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. அவர், தன்னை மத்திய அமைச்சர் என்று நினைக்கிறாரா... இல்லை, வாட்டாள் நாகராஜ் என்று நினைக்கிறாரா? காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. எம்.எல்.ஏ-க்களுடன் சென்று பிரதமரைப் பார்த்து தமிழகத்துக்குத் தண்ணீர் தரச்சொன்ன முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கேட்கிறார் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே. இங்கே சூடு சொரணையுள்ள அமைச்சர்கள் யாராவது இருக்கிறார்களா..? இருந்தால், தண்ணீர் கேட்டு வற்புறுத்தி, பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதுதானே? இங்கே உள்ளவர்கள் காங் கிரஸோடு தோழமை பாராட்டும் தமிழினத் துரோகிகள். பிரணாப் முகர்ஜிக்கு ஓட்டுப் போட் டவர் யாராக இருந்தாலும், அவர் தமிழினத் துரோகிதான்.

கேரளாவில் புதிதாக ஒரு சட்டம் கொண்டு வரப்போகிறார்கள். ஒரு மாநிலத்தில் உள்ள அணைகளையும் ஆறுகளையும் அவர்களே பராமரித்துக்கொள்ள வேண்டும் என்பது அந்தச் சட்டத்தின் மையக்கருத்து. இந்தியா ஒருமைப் பாடாக இருக்க வேண்டுமானால், அந்தச் சட் டத்துக்கு அனுமதி தராதீர்கள். ஒவ்வொரு மாநி லமும் தனக்குள் இருக்கும் அணைகள், ஆலைகள் எல்லாம் தங்களுடையது என்று சொன்னால் நாளை என்ன நடக்கும்?

90-ல் திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் ரஷ்யா துண்டுத் துண்டாக உடையும் என்று சொன்னேன். உக்ரைன் ஆரம்பித்தது, 15 நாடு களாக ரஷ்யா உடைந்தது. அதைப்போல இந்தியா ஆகிவிடக்கூடாது என்றுதான் எச்சரிக்கிறேன். நாளை, தமிழ்நாடு தனிநாடாக ஆகிவிட்டால், என்ன ஆகும்? திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி பீரங்கித் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்று எல்லாமும் எங்களுக்கே சொந்தம் என்று தமிழர்கள் சொல்ல மாட்டார்களா? இந்திய ஒருமைப்பாட்டுடன் தமிழர்கள் இருக்க வேண்டுமா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

ஒட்டுமொத்தக் கன்னடர்களும் எங்களுக்கு எதிரிகள் இல்லை. தண்ணீர் தர மறுக்கும் சில இனவெறியர்கள்தான் எங்கள் எதிரிகள். நெய்வேலியில் உற்பத்தியாகும் 2,490 மெகா வாட் மின்சாரத்தில் 292 மெகா வாட் கர்நாடகத்துக்கும், 277 மெகா வாட் ஆந்திரத்துக்கும், 215 மெகா வாட் கேரளத்துக்கும், 95 மெகா வாட் புதுவைக் கும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இனி, எந்த மாநிலத்துக்காரன் ஒழுங்காக இருக்கிறானோ, மத்திய அரசை மதித்து நடக்கிறானோ அவனுக்கு மட்டுமே மின்சாரத்தைக் கொடுங்கள். கேரளாக் காரன் முல்லை பெரியாறில் பிரச்னை செய்கிறானா... அவனுக்குக் கொடுக்காதே. கர் நாடகத்துக்காரன் காவிரியில் பிரச்னை செய்கி றானா... அவனுக்குக் கொடுக்காதே. பாலாற்றில் ஆந்திராக்காரன் பிரச்னை செய்கிறானா... அவனுக்கு மின்சாரத்தைக் கொடுக்காதே'' என்றார் வைகோ ஆவேசமாக.

பின்னர், என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடக் கிளம்பியவரை, அதன்வாசல் வரை அனுமதித்த காவல் துறை, அனைவரையும் கைது செய்வதாக அறிவித்தனர்.

தமிழர்களின் உணர்வை கர்நாடகம் புரிந்து கொள்ளட்டும்!

No comments:

Post a Comment