Thursday, October 11, 2012

ஸ்ரீபெரும்புதூர் குமரன் கொலையில் மு.க.ஸ்டாலின் அன்புத்தம்பி. திமுகவினர் அதிர்ச்சி


ஸ்ரீபெரும்புதூர் குமரன் கொலையில் மு.க.ஸ்டாலின் அன்புத்தம்பி. திமுகவினர் அதிர்ச்சிப்பள ராஜா’ - ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலர் பி.பி.ஜி.குமரன், வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்ட வழக்கில் கடைசியாக சரண் அடைந்திருக்கும் கூலிப்படைத் தலைவர். இவர், மதுரை ஒன் பதாம் பகுதிக்கான தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் பதவிக்கு அண்மையில் மு.க. ஸ்டாலினால் நியமிக்கப்பட்ட அருமைத்தம்பி என்பதுதான் அதிர்ச்சி! 
அக்டோபர் 1- ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் குமரன், நாட்டு வெடிகுண்டுகளை வீசிக் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தின்போது குமரன் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதில் கூலிப்படையைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர், குண்டடிபட்டு போலீஸில் சிக்கினார். சிகிச் சையில் இருந்த ஐயப்பன் கடந்த 5-ம் தேதி இறந்தார். இதனிடையே, இந்த வழக்கில் தொடர் புடைய எட்டுப் பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். ஆறு பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கின்றனர். கடைசியாக 5-ம் தேதி, அப்பள ராஜா பொன்னேரி நீதிமன்றத்தில் சரண் அடையவே, மதுரை தி.மு.க-வினர் அதிர்ந்து நிற்கிறார்கள்.
யார் இந்த அப்பள ராஜா?
''மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஏரியாவைச் சேர்ந்த ராஜா, 13 வயதிலேயே வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர். மதுரை கூலிப்படைத் தாதாக்கள் எந்த பிரச்னைக்கும் நேரில் போக மாட்டார்கள். இருந்த இடத்தில் இருந்துகொண்டே, சுள்ளான்களை அனுப்பிக் காரியத்தைச் சுளுவா முடிச்சுருவாங்க. அந்தப் பையன்கள் போலீஸில் சிக்கி னாலும் 'மைனர்’ என்று சொல்லி எளிதில் வெளியில் எடுத்திருவாங்க. அப்படித்தான் இந்த ராஜாவும் மதுரையைச் சேர்ந்த 'டாக்’ ரவி கோஷ்டியில் லிங்க் ஆனார். ஜெய்ஹிந்த்புரம் ஏரியாவில் அப்பளக் கம்பெனிகள் நிறைய இருக்கு. அங்கே வேலை பார்த்ததால், இவரை 'அப்பள ராஜா’னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அதுவே இப்ப போலீஸ் ரெக்கார்டு வரைக்கும் வந்திருச்சு.
குமரன் கொலையையும் சேர்த்தா, அப்பள ராஜா மேல தமிழகம் முழுக்கக் கிட்டத்தட்ட 25 வழக்குகள் இருக்கு. அதுல ஆறு கொலை வழக்கு. மதுரையில் மட்டுமே 18 கேஸ் இருக்கு. ஆலடி அருணா கொலை, பூண்டி கலைச்செல்வன் கொலை, இப்ப நடந்திருக்கிற குமரன் கொலை இது மூன்றும் ஒரே ஸ்டைலில் நடந்திருக்கு. முதலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி எதிராளிகளை நிலை குலையவெச்சிட்டு அப்புறமாய் ஆளைப் போட்டுத்தள்ளுவதுதான் அப்பள ராஜா ஸ்டைல். ஆலடி அருணா கொலை வழக்கில் டாக் ரவி சிக்கினார். அவரோடு சிக்கிய ஆட்டோ பாஸ்கர், போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போதே தற்கொலை செஞ்சுக்கிட்டார். ஆலடி அருணா கொலை செய்யப்பட்ட அடுத்த 10-வது நாளே மதுரையில் கராத்தே பாண்டியராஜன் என்பவர் அதே பாணியில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை கும்பல் எப்பவுமே ரெண்டு பிளானைக் கைவசம் வெச்சிருப்பாங்க. ஒரு பிளான் ஃபெயிலியர் ஆகிட்டா, இன்னொரு டீம் அடுத்த பிளானை செயல்படுத்தி ஆளைப் போட்டுரும்
ஸ்ரீபெரும்புதூர் தாதா வைரவன்கிட்டத்தான் குமரன் அசைன்மென்ட் முதலில் வருது. வைர வனுக்கும் காக்குவீரனுக்கும் ஜெயில் சினேகம் உண்டு. இப்ப ரெண்டு பேருமே ஜெயிலில் இருக்காங்க. அதனால, காக்குவீரன் மூலமா டாக் ரவிக்கு அசைன்மென்ட் வருது. டாக் ரவிதான் குமரனைப் போட்டுத்தள்ள அப்பள ராஜா கோஷ்டிக்கு டீல் பேசி லிங்க் பண்ணிக் கொடுத்துருக்கான்னு விசாரணையில் தெரியுது. அசைன்மென்ட்டை முடிச்சுட்டு டி.என் 20 - 648 என்ற நம்பர் பிளேட் மாட்டி இருந்த கிரே கலர் ஸ்கார்பியோ காரில் மதுரைக்கு வந்துட்டான் அப்பள ராஜா. ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் மது ரைக்குள் வந்துருச்சுன்னதும் ஆள் எஸ்கேப். இப்பவும் அவன் தானா சரண் அடைஞ்சிருக்க மாட்டான். மதுரைக்கு வந்த போலீஸ் டீம், தி.மு.க. முக்கியப் புள்ளி ஒருத்தரை வளைச்சிருச்சு. போலீஸ் டார்ச்சர் தாங்க முடியாம அவரு 4-ம் தேதி ராத்திரி சிங்கப்பூர் போறதுக்கு டிக்கெட் போட்டு ஏர்போர்ட் வரை போயிட்டார். அங்கிருந்தபடியே அப்பள ராஜாவுக்குப் போனைப் போட்டு, 'நீ சரண்டர் ஆகலைன்னா, என்னைத் தூக்கிருவாங்க’னு புலம்பி இருக்கார். 'நாளைக்கு சரண்டர் ஆகி ருவேன்’னு அப்பள ராஜா சொன்ன பின்னாலதான், ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்குத் திரும்பி இருக்கார் தி.மு.க. புள்ளி. அப்பள ராஜாவை கஸ்டடியில் எடுத்து விசாரிச்சாங்கன்னா, தி.மு.க. புள்ளிக்கும் சிக்கல்தான். இப்படிப்பட்ட அப்பள ராஜாவைத்தான், தி.மு.க. இளைஞர் அணியின் பொறுப்பில் நியமித்து இருக்கிறார்கள்'' என்கிறார்கள் லோக்கல் தி.மு.க. பிரமுகர்கள்.
  'துடிப்புள்ள இளைஞர்களை விரட்டிவிட்டு குற்றப்பின்னணி உள்ளவர்களையும் கொலை வழக்குகளில் சிக்கியவர்களையும் இளைஞர் அணிப் பொறுப்புகளில் நியமித்திருக்கிறார்கள்’ என்று, கடந்த மாதம் 24-ம் தேதி அறிவாலயத்தில் நடந்த மதுரை தி.மு.க. பஞ்சாயத்தின்போது அழகிரி கோஷ்டி புகார் சொன்னது. அப்போது, 'ஆதாரத்துடன் கொண்டு வந்தால் நடவடிக்கை எடுப்போம்’ என்று, அழகிரி கோஷ்டியை மடக்கியது தலைமை. அழகிரி கோஷ்டி குற்றம் சாட்டியது அப்பள ராஜாவை மனதில் வைத்துத் தானாம்!
  போலீஸ், நடவடிக்கை எடுத்து விட்டது... தி.மு.க. தலைமை என்ன செய்யப்போகிறதோ?

No comments:

Post a Comment