Thursday, October 11, 2012

சேலத்து வீட்டில் நித்தியானந்தாவுடன் தங்கியது யார்? அதிரடி நித்தி... பதிலடி ஆர்த்தி...


த்தியானந்தாவுக்கும் ஆர்த்தி ராவுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் உச்ச கட்டத்தை எட்டி இருக்கிறது. நித்தி மீது ஆர்த்தி பகிரங்கமாகவே புகார்களை வாசித்துக் கொண்டிருக்க.. பதிலுக்கு நித்தி தரப்பில் இருந்தும் ஆர்த்தி மீது புகார்கள் பாய்கின்றன.
 கடந்த ஒரு வாரமாக திருவண் ணாமலை ஆசிரமத்தில் தங்கி இருக் கிறார் நித்தியானந்தா. அப்போது, ஆர்த்தி ராவ் சம்பந்தமான சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். அதுபற்றி நித்தி யானந்தாவின் ஆசிரம வட் டாரத்தில் விசாரித்தோம்.
''ஆர்த்தி ராவ் செய்த பல தவறான காரியங்களுக்கு எங்களிடம் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2004-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் மிக்சிக்கன் மருத்துவமனையில் பால்வினை நோய் களுக்காக ஆர்த்தி ராவ் சிகிச்சை எடுத்திருக்கிறார். அந்த மருத்துவமனையின் கேஸ் ஹிஸ்டரி இப்போது எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதில் எய்ட்ஸை விடக் கொடிய Herpes Genetalia, Genital Herpes , Herpes Genetalia in Women என்ற மூன்று நோய்கள் ஆர்த்திக்கு இருப்பதை அந்த மருத்துவமனை உறுதி செய்திருக்கிறது.
சேலத்து வீட்டில் நித்தியானந்தாவுடன் தங்கியது யார்? அதிரடி நித்தி... பதிலடி ஆர்த்தி...
ஆர்த்தி சொல்வதைப் போல, நித்தியானந்தா பாதுகாப்பற்ற முறையில் உறவு கொண்டிருந்தால்,அவருக்கும் அந்த நோய்கள் தொற்றி இருக்க வேண்டும் அல்லவா? கடந்த செப்டம்பர் மாதம் நித்தியானந்தருக்கு எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு அப்படி எந்த நோயும் இல்லை என்று ரிப்போர்ட் சொல்கிறது.
ஆர்த்தி ராவ் தனது குற்றப்பத்திரிகையில், 2005-ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி சேலத்தில் உள்ள ஆசிரமத்தில் தன்னை ஓரல் செக்ஸுக்கு நித்தியானந்தா கட்டாயப்படுத்தினார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் தேதியில் சுவாமி, பிடதி ஆசிரமத்தில் தியான முகாம் நடத்தியதற்கு வீடியோ ஆதாரங்களே இருக்கின்றன. நித்தியானந்தா தன்னைக் கற்பழித்ததாக தேதி வாரியாக ஆர்த்தி குறிப்பிட்டிருப்பது அத் தனையும் இன்டர்நெட்டில் சுவாமியின் புரோகிராம் தேதிகளை வைத்துத்தான். ஆனால், நித்தியானந்தாவின் புரோகிராம் மாற்றப்பட்டது ஆர்த்திக்குத் தெரியாது.
2009-ம் ஆண்டு லெனின் கருப்பனுடன் ஆர்த்தி உடலுறவு கொண்டதைக் கண்ணால் பார்த்த சாட்சியங்கள் இருக்கின்றனர். 2010-ம் ஆண்டு ஆர்த்தி மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றபோது, 'எனக்கு ஒரு புதிய துணைவர் கிடைத்திருக்கிறார். அவரும் ஹெச்.ஐ.வி. நோயாளி. அவருடன் வாய் வழியாகவும், உடலுறவும் வைத்துக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த ஹெச்.ஐ.வி. நோயாளி லெனின் கருப்பனாக இருக்குமோ என்று எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது'' என்று சொல் கிறார்கள்.
நித்தியானந்தா தரப்பு கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆர்த்தி ராவ் என்ன பதில் சொல்கிறார்? ''குற்றப் பத்திரிகையில் நான் குறிப்பிட்டிருக்கும் தேதியில் நித்தியானந்தா எங்கே இருந்தார் என்று போலீஸ் விசாரிக்கட்டும். சேலத்துக்குப் போயிருந்தபோது யார் வீட்ல தங்கி இருந்தோம், அப்போது நித்தியானந்தாவுடன் ரூம்ல யார் தங்கினாங்கன்னு அந்த வீட்டுக்காரங்களே சாட்சி சொல்லி இருக்காங்க.
'தனக்கு எந்த நோயும் இல்லை. நான் யார்கூடவும் உறவு வைத்துக் கொள்ளவில்லை’ என்று அவரோட மெடிக்கல் ரிப்போர்ட்டை வெளியிட்டு இருக்கார். அந்த ரிப்போர்ட்ல அவரோட பேர் 'நித்யானந்த்ஜி’ன்னு இருக்கு. பிறந்த தேதியும் தப்பா இருக்கு. அப்பா பேரே கிடையாது. யாரோ ஒரு ஆளோட ரத்தத்தைக் கொடுத்து போலியாக ஒரு ரிப்போர்ட் வாங்கிட்டு வந்திருக்காங்க.
அதேபோல, என்னோட மெடிக்கல் ஹிஸ்டரினு ஒரு ரிப்போர்ட்டைக் காட்டுறார். அமெரிக்காவைப் பொறுத்தவரை என்னோட மெடிக்கல் ஹிஸ்டரியை வாங்கணும்னா, நானேதான் போயாகணும். என் கணவர் போனாலும் கொடுக்க மாட்டாங்க. பொய் யான ஒரு கோர்ட் ஆர்டரைத் தயாரிச்சு, பொய்யான ஒரு ரிப்போர்ட்டை ரெடி செய்து இருக்கார். அவருக்குத் தைரியம் இருந்தால், உண்மையான மெடிக்கல் டெஸ்ட் எடுக்கட்டும். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மெடிக்கல் டெஸ்டுக்கு நான் தயாரா இருக்கேன். அவர் வர்றாரானு கேளுங்க. கேஸைத் திசை திருப்ப, எனக்கும் லெனினுக்கும் தப்பான உறவு இருக்கு, எனக்கு அந்த நோய் இருக்கு... இந்த நோய் இருக்குன்னு கதை சொல்லிட்டு இருக்கார். என்னைப்போல ஏராளமான பொண்ணுங்களை வேட்டையாடிய மிருகம் அவர். கண்டிப்பாக அவரை நான் சும்மா விட மாட்டேன்'' என்றார் கோபத்தோடு.
இதுபற்றி, லெனினிடம் பேசினோம்.
''இத்தனை நாளா நான் நித்யானந்தாவுக்கு மரியாதை கொடுத்துட்டுத்தான் இருந்தேன். இனி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ...........க்கு மட்டும்தான் மத்தவங்க யாரையும் நல்லவங்களாப் பார்க்கத் தோணாது. அவர் காவி உடை அணிந்த காமக் கொடூரன். என் உடன்பிறவாத சகோதரியாகத்தான் ஆர்த்தியை நினைக்கிறேன். நித்தியானந்தா போல முறைதவறி நடக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது'' என்று காட்டமாகச் சொன்னார்.
நித்தி விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கிறது!

No comments:

Post a Comment