Tuesday, October 16, 2012

செலவுக்குக் கொடுத்திருப்பேன்... ஓட்டுக்குக் கொடுக்கல இளைஞர் காங்கிரஸ் தேர்தல் வெளிவந்தது முதல் சி.டி.


ழை விட்டும் தூவானம் விடாத கதையாக, இளைஞர் காங்கிரஸ் தேர்தல் முடிந்த பிறகும் சர்ச்சைகள் தொடர்கின்றன. 
தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் பணம் விளையாடியதைக் கேள்விப்பட்டு ராகுல் காந்தி கொந்தளித்தார் என்று முன்பே கூறி இருந்தோம். இந்த நிலையில் நம் அலுவலகத்துக்கு ஒரு சி.டி. வந்தது. அந்த சி.டி-யில், யுவராஜா அணியில் போட்டியிட்டு பொதுச்செயலாளர்களில் ஒருவராக தேர்ந்து எடுக்கப் பட்டுள்ள பி.எஸ்.பழனி இருக்கிறார். தனது ஆதரவாளர் கூட்டத்துடன் சாலையில் நிற்கும் பழனி, வாக்களிக்கச் செல்லும் கட்சியினருக்கு 1,000 ரூபாய் நோட்டு கொடுக் கும் காட்சி மிகத்தெளிவாகப் பதிவாகி இருக்கிறது.
இந்த சி.டி-யை டெல்லி மேலிடத்துக்கும் அனுப்பி இருக்கும் யுவராஜாவுக்கு எதிர் குரூப், 'நடந்து முடிந்த தேர்தலில் பணம் விளையாடி இருக்கிறது என்பது உறுதி யாகத் தெரிகிறது. எனவே, தேர்தலை ரத்து செய்து விட்டு, மீண்டும் புதிதாக நடத்த வேண்டும்’ என்று புகார் அனுப்பி உள்ளது. இன்னும் இரண்டு சி.டி. ஆதாரங்கள் வெளிவர இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இந்தப்புகார் குறித்து, இளைஞர் காங்கிரஸில் கார்த்தி சிதம்பரம் அணியில் போட்டியிட்டு துணைத் தலைவராக ஜெயித்துள்ள விஜய் இளஞ்செழியனிடம் பேசினோம்.
''கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் மாநிலம் முழு வதும் சுற்றிச்சுழன்று சுமார் 10 ஆயிரம் ஆதரவாளர்களைத் திரட்டினோம். தொடக்கத் திலேயே தலைவர் கார்த்தி சிதம்பரம் என்னிடம் ஒன்றைத் தெளிவாகக் கூறிவிட்டார். 'நம்முடைய உழைப்பை மட்டும் நம்பி வேலை பார்ப்போம். எந்தக் காரணம்கொண்டும் பணம் கொடுத்து வாக்கு சேகரிக்க வேண்டாம். ராகுல் காந்தி நேர்மையாக தேர்தல் நடப்பதைத்தான் விரும்புகிறார்’ என்றும் சொன்னார்.
இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடத்தும் பொறுப்பை ராகுல் காந்தி, ஃபேம் என்ற எலெக்ஷன் மேனேஜ் மென்ட் அமைப்பிடம் ஒப்படைத்திருந்தார். அவர்கள் தேர்தல் நடத்திய விதம் மிகவும் துல்லியமாக இருந்தது. ஆனால், ஒரு சிலர் தங்கள் தலைமையின்(?) பேச்சைக் கேட்டுக்கொண்டு, பணத்தை வாரி இறைத்து வெற்றியைத் திசை திருப்பி விட்டனர். எனக்கு 7,000 ஓட்டுகள் கிடைக்கும் சூழல் இருந்தது. ஆனால், பணம் கொடுத்துப் பலரையும் திசை திருப்பியதால் எனக்கு 3,600 ஓட்டுக்கள்தான் கிடைத்தன. இதில் இருந்தே தேர்தல் எப்படி நடந்தது என்பதை யூகித்துவிட முடியும்.
அடித்தட்டு மட்டத்தில் உள்ள ஏழை உறுப்பினர் களை ஒரு கும்பல் மிரட்டியும், பணத்தால் அடித்தும் வெற்றியைத் தக்கவைத்துள்ளது. இதை நாங்கள் சும்மா விடமாட்டோம். தலைவர் கார்த்தி சிதம் பரத்தின் வழிகாட்டுதலுடன் மற்றவர்களுக்கு சரிக்குச் சமமாக நாங்களும் வென்றுள்ளோம். நடந்துமுடிந்த தேர்தலில் யாருக்கு உண்மையான வெற்றி? யாருக்கு சரிவு என்று முடிவுகளைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். முன்புபோல இனி யுவராஜா தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. எந்த ஒரு நடவடிக்கை என்றாலும், அனைவரிடமும் கலந்து ஆலோசித்து... அனைவரின் கருத்தையும் கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும். இல்லை என்றால், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தவே விட மாட்டோம்.
கடந்தமுறை, யுவராஜா சிறப்பாக செயல் பட்டார் என்று சொல்ல முடியாது. ஏதோ செயல்பட்டார், அவ்வளவுதான். நடந்து முடிந்த தேர்தலில் தவறு செய்தவர்கள் பற்றிய விவரங்களைத் திரட்டிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் கூறும் பி.எஸ்.பழனி குறித்த சி.டி. ஆதாரம் இன்னமும் எனக்குக் கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் டெல்லி தலைமையின் கவனத்துக்குக் கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுப்பேன். பணத்தால் பதவியைப் பிடிக்க நினைப்பவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவைஇல்லை. துடைத்துத் தூர எறிவோம்...'' என்றார் சூடாக.
சி.டி-யில் இருக்கும் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரான பி.எஸ்.பழனியிடம், '' நீங்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றீர்களா?'' என்று கேட்டோம். ''பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனது ஆதரவாளர்கள் 954 பேரை இளைஞர் காங்கிரஸில் மனுத்தாக்கல் செய்ய வைத்திருக்கிறேன். அவர்கள் எனக்குத்தான் வாக்களித்தனர். அவர்களின் சாப் பாட்டுச் செலவுக்கு அல்லது பயணச்செலவுக்கு நான் பணம் கொடுத்து இருக்கலாம். அதை யாராவது வீடியோ எடுத்திருக்கலாம். ஓட்டுக்காக நான் பணம் கொடுக்கவில்லை'' என்றார்.
இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக தேர்வாகி இருக்கும் யுவராஜாவிடம் இதுபற்றி கேட்டோம். ''பழனி பணம் கொடுத்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. என்னுடைய வெற்றிக்கும் அவர் கொடுத்த பணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரே மாநில அளவிலான பதவிக்கு நேரடியாகப் போட்டியிட்டவர் என்பதால், எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது'' என்றார்.
இளைஞர் காங்கிரஸிலேயே இந்த வேகம்னா,  நல்லா வருவீங்கப்பா..!

No comments:

Post a Comment