அரசியல் ஆக்கப்படும் என்பதால், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டுக்கு ரெய்டு போகாமல் இருக்கிறோம். இனியும், துரை தயாநிதி எங்களுக்கு டிமிக்கி கொடுத்தால், அழகிரி வீட்டுக்கும் போவோம் கோபாலபுரத்துக்கும் சம்மன் அனுப்புவோம்’ - கிரானைட் வழக்கில் துரை தயாநிதியைத் தேடும் மதுரை போலீஸார், இப்படித்தான் குரலை உயர்த்துகிறார்கள்!
பொட்டு வீட்டைத் தட்டிய போலீஸ்!
மதுரையில் கேபிள் தொழில் நடத்தும் தி.மு.க. பிரமுகர் ஒருவரின் பாதுகாப்பில் துரை தயாநிதி மறைந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து, அவரைத் தூக்கியது போலீஸ். பொட்டு சுரேஷ§ம் துரைதயாநிதியும் செல்போனில் பேசியதாக அவர் கக்கிய தகவலை வைத்து, கடந்த 27-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு பொட்டு வீட்டைத் தட்டியது போலீஸ். அவரது செல்போனை வாங்கிப் பார்த்ததில் சந்தேகப்படும்படியான எந்த நம்பரும் இன்கமிங், அவுட் கோயிங் லிஸ்ட்டில் இல்லையாம். சுமார் ஒரு மணி நேரம் பொட்டு வீட்டை சல்லடையாகத் துளைத்துவிட்டு போலீஸ் கிளம்பியதும், 'போற இடத்துல நல்லா செக் பண்ணுங்க சார்... பார்ட்டிகள் யாரும் நேரடியாப் பேசிக்கிறது இல்லை. கான்ஃபெரன்ஸ் கால்ல பேசிக்கிறாங்க’ என்று இன்ஃபார்மர்கள் துப்புக் கொடுத் தார்களாம்.
அழகிரியை முடக்க டார்கெட் தயாநிதி!
துரை தயாநிதியை போலீஸ் தேட ஆரம்பித்ததில் இருந்தே, நிம்மதியைத் தொலைத்து விட்டு நிற்கிறார் அழகிரி. மகனைச் சிக்கல் இன்றிக் காப்பாற் றுவதிலேயே அவரது சிந்தனையும் செயலும் ஓடிக்கொண்டு இருப்பதால், கட்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால், தென்மாவட்டங்களில் அழகிரி அணியும் முடங்கிக் கிடக்கிறது. இந்தநிலை தொடர வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க-வின் எதிர்பார்ப்பு. அழகிரியை இப்படியே சுத்திவிட்டு வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தால், நாடாளு மன்றத் தேர்தல் முஸ்தீபுகளில் அவர் அக்கறை காட்ட மாட்டார் என்பது கணக்கு. இதற்காகவே, துரை தயாநிதியை டார்க்கெட் வைத்திருக்கிறார்களாம்.
போலீஸ் பிடியில் அஞ்சுகச் செல்வியின் கொழுந்தன்!
அழகிரியின் மகள் அஞ்சுகச் செல்வி யின் மாமனார் டாக்டர் ரத்தினவேலின் வீடு அழகிரி வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறது. கடந்த 28-ம் தேதி இங்கு வந்த தனிப்படை போலீஸார், அங்கே இருந்த ரத்தினவேலிடம் கிடுக்கிப்பிடி போட்டனர். இவரது மகன் தீபக்கும் துரை தயாநிதியும் நெருங்கிய நண்பர்கள். அப்பாவுக்கு போலீஸ் டார்ச்சர் கொடுக்கிறது என்றதுமே, சென்னையில் இருந்த தீபக் அவசரமாய் விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு வந்தார். அப்போது அவரைத் தொடர்புகொண்ட காந்தி அழகிரி, 'கிரானைட் விஷயங்கள் எதிலும் நீ இருக்கியாப்பா?’ என்று கேட்டாராம். 'இல்லை ஆன்ட்டி’ என்று தீபக் சொன்னதும், 'பயப்படாமப் போ... நம்ம வக்கீல்கள் வருவாங்க’ என்று தைரியம் கொடுத்தாராம். அதன்படியே தீபக் வருவதற்கு முன்பே, எஸ்.பி. ஆபீஸில் 15-க்கும் மேற்பட்ட தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி இருந்தனர். ஆனாலும், தங்களது கஸ்டடிக்கு வந்த தீபக்கை இரண்டு நாட்கள் வைத்து விசாரித்து விட்டுத்தான் அனுப்பியது போலீஸ். தீபக்கிடம் இருந்த மூன்று செல்போன்களில் இருந்த முக்கியமான நம்பர்கள், போலீஸ் விசாரணைக்கு உபயோகமாக இருந்ததாம். துரையின் இன்னொரு நெருங்கிய கூட்டாளியான அல்வாக் கடை மனோஜுக்கு வலைவீசிய போலீஸார், மனோஜ் சிக்காததால் அவரது சகோதரர்கள் மூன்று பேரை கஸ்டடிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
கோபாலபுரத்துக்கும் சம்மன்!
தீபக்கின் அண்ணனும் அஞ்சுகச் செல்வியின் கணவருமான விவேக், அமெரிக்காவில் இருப்பதால், அவரைக் கணக்கில் எடுக்கவில்லை போலீஸ். துரை தயாநிதியின் மாமனார் வக்கீல் சீதாராமனையும் அழகிரியின் இன்னொரு மகளான கயல் விழியின் கணவர் வெங்கடேஷையும் அக்டோபர் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மன் கொடுத்திருக்கிறது போலீஸ். இதுகுறித்து, நம்மிடம் பேசிய தனிப்படை போலீஸார், ''பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அழகிரி வீட்டுக்கு தயாநிதியைத் தேடிப்போனால் அரசியலாக்கி விடுவார்கள் என்பதால்தான் அடக்கி வாசிக்கிறோம். ஆனால், இதற்கு மேலும் துரை வெளியில் வராமல் இருந்தால், அழகிரி வீட்டுக்கும் போவோம்; தேவைப்பட்டால் கோபாலபுரத்துக்கும் சம்மன் அனுப்புவோம்'' என்று பொங்குகிறார்கள்.
நண்பர்களைத் துரத்தும் போலீஸ்!
துரை தயாநிதியைப் பிடிப்பதற்காக இறக்கப்பட்டுள்ள 15 தனிப்படைகள், துரையுடன் யார் யாரெல்லாம் நட்பு பாராட்டினார்களோ அத்தனை பேரையும் அலற விடுகிறார்கள். திருவாரூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலரான (ஏ.பி.ஆர்.ஓ) மகேஷ் என்பவர், துரையின் கூட்டாளி. 30-ம் தேதி அதிகாலை இவரை மதுரைக்கு அலேக்காகத் தூக்கி வந்து விட்டது போலீஸ். மகேஷ் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், இவர் மூலமாக துரையின் நெருங்கிய கூட்டாளியான ராமகிருஷ்ணன் என்பவரை வளைக்க ஸ்கெட்ச் போடுகிறது போலீஸ்!
இந்த வாரத்துக்குள் துரை சரண்டர்?
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், துரையின் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானால், உடனே உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம் என்ற முடிவில்தான் அழகிரி இருந்தாராம். ஆனால், சுரங்க ஒதுக்கீட்டு விவகாரங்களில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் உலுக்கிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வழக்கைக் கொண்டுபோனால் ஏடாகூடமாக ஆர்டர் போட்டுவிட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டதால், அந்த முயற்சியை ஒத்திவைத்து விட்டாராம். அதேசமயம், தனது சம்பந் திகளை எல்லாம் விசாரணை என்ற பெயரில் போலீஸார் அசிங்கப்படுத்துவதை விரும்பாத அழகிரி, 'பேசாமல், துரையை சரணடைய வைத்து விடலாமா?’ என்று ஆலோசனை நடத்தியதாகவும் சொல் கிறார்கள். அநேகமாக, இந்த வாரத்துக்குள் துரை சரண்டர் ஆகலாம் என்கிறது போலீஸ் வட்டாரம்.
துரை எப்போது சிக்குவார் என்பதைவிட, அவர் என்னென்ன கக்குவார் என்பதுதான் மர்மமாக
இருக்கிறது!
No comments:
Post a Comment