Friday, October 26, 2012

கனவில் வந்து நித்தியை, ஆதினமாக சேர்க்க சொன்ன சிவன்தான் நீக்கவும் சொன்னாரா? மதுரை ஆதினத்தின் பதில்?


மதுரை ஆதீனம் - நித்தியானந்தா’ களேபர மேளாவில் இது அடுத்த அத்தியாயமோ என்று சந்தேகம் கிளப்புகிறது நித்தி நீக்கம்!

இளைய ஆதீனமாக நித்தி நியமனத்துக்கு மாநிலம் முழுக்கக் கிளம்பிய எதிர்ப்புகள், நீதிமன்ற வழக்குகள், மடத்தை அரசே கையகப்படுத்தும் முயற்சிகள் எனக் கொதிக்கத் தொடங்கியதால், நித்தியை நீக்கி இருக்கிறார் ஆதீனம். ராஜினாமா செய்தால், மீண்டும் மேல்முறையீடு செய்து பதவியைப் பெறுவது கஷ்டம் என்பதால், 'ராஜினாமாவா... மாட்டவே மாட்டேன்!’ என்று மறுத்துவந்தார் நித்தி. நீதிமன்றத்தில் விவகாரம் சிக்கலாகிவிடக் கூடாதே என்று வேறு வழி இல்லாமல் நித்தி யைப் பதவி நீக்கம் செய்வதாக 'வருத்தத்தோடு’ சொன்னார் மதுரை ஆதீனம்.

ஆதீனத்தின் நடவடிக்கையால் துளி அதிர்ச்சி அடையாத நித்தியானந்தாவோ, ''சந்நிதானம் கையெழுத்துப் போட்டால் டிஸ்மிஸ். நான் கையெழுத்துப் போட்டால் ராஜினாமா. இது வெறும் சம்பிரதாய நடைமுறைதான்!'' என்று சிம்பிளாகச் சொல்லி முடித்துக்கொண்டார்.

இந்தக் களேபரங்களுக்கு நடுவில் ஆதீனத்தில் தனி ஆளாக அமர்ந்திருக்கிறார் அருணகிரி நாதர். 22 ஆண்டுகளாக ஆதீனத்துடன் இருக்கும் வயதான உதவியாளர் மட்டும் இப்போது அருகில் இருக்கிறார். நித்தியின் ஆட்கள் யாரும் இல்லை. முன் எப்போதும் பார்க்க முடியாத வகையில், ஆதீனத்தின் முகத்தில் முதன்முதலாகப் பய உணர்ச்சி தென்பட்டது. கேள்விகளை எதிர் கொள்ளத் தயங்குகிறார். முன்பெல்லாம் அவரி டம் எதைப் பற்றிக் கேட்டாலும் 'தெரியாது’, 'இருந்தாலும் இருக்கலாம்’ போன்ற நழுவல் பதில்களே இருக்காது. இப்போதோ எடுத்த எடுப்பிலேயே, ''நித்தியானந்தாவைப் பற்றி எதுவும் கேட்கக் கூடாது!'' என்ற நிபந்தனையோடு தான் பேசத் துவங்குகிறார்.

''யாம் சொல்வதற்குப் புதிதாக எதுவும் இல்லை. இதுவரை நீங்கள் எழுதியதை எல்லாம் தொகுத்துப் போட்டு, அதனால் யாம் அவரைப் பதவி நீக்கம் செய்தோம் என்று போட்டுக்கொள்ளுங்களேன். யாம் சொன்னதாக எதுவும் வேண்டாம்'' என்று புராணப் படங்களில் சிவபெருமான் பேசுவதுபோலச் செந்தமிழில் மொழிகிறார் ஆதீனம். ''சும்மா ஜோக் அடிக் காதீங்க. இது ஜாலி பேட்டி இல்லை... கொஞ்சம் சீரியஸாப் பதில் சொல்லுங்க!'' என்று போராடி எடுத்த பேட்டியில் இருந்து...

''நித்தியை இப்போது உடனடியாக நீக்க என்ன காரணம்?''

''அது இறைவனின் சித்தம். எல்லாம் வல்ல இறைவன் செயல். ஆங்... நெக்ஸ்ட் கொஸ்டீன்?''

''சிவன் கனவில் வந்து சொல்லியதால்தான் நித்தியை இளைய ஆதீனமாக நியமிப்பதாகச் சொன்னீர்கள். இப்போது அவரை நீக்கச் சொன்னதும் சிவன்தானா?''

''இல்லை... இல்லை... சிவன் கனவில் வர வில்லை. இறைவனால் ஒரு சூழ்நிலை உருவாக்கப் பட்டு, அதனால் யாம் அவரைப் பதவி நீக்கம் செய்தோம்!''

''அப்படியானால், நித்தியை நீக்கியதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா?''

(யோசிக்கிறார்) ''சூழ்நிலை காரணமாக அவரை நீக்கினோம். இது நான் விரும்பி எடுத்த முடிவு கிடையாது. ஆனால், யாருடைய தூண்டுதலோ, நிர்பந்தமோ இல்லாமல்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்!'

''இது செட்டப் பிரிவு... ரகசியமாக வேறு ஏதோ பின்னணி இருக்கிறது என்கிறார்களே?''

'இந்தக் கேள்வி வேண்டாம். நெக்ஸ்ட்!'

''உங்களையும் நீக்கிவிட்டு, ஆதீனத்தை அரசே கையகப்படுத்தப்போவதாகச் சொல்கிறார்களே?''

'முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அப்படிச் செய்ய மாட்டார். தவறான முன் உதாரணத்தை அவர் ஏற்படுத்த மாட்டார். இது தொடர்பாக அவரை நேரில் சந்திப்பேன்!'

''உங்கள் உயிருக்கு நித்தியால் ஆபத்து இருப்பதாகச் சொல்கிறார்களே?''

''அப்படி எந்த ஆபத்தும் இல்லை. இதுவரை அவர் என்னை மிரட்டவும் இல்லை. நாகரிகமாகத்தான் நடந்துகொள்கிறார்!''

'' 'மதுரை ஆதீனத்துக்காகக் கொடுத்த பொருட்கள் எதையும் திரும்பக் கேட்கப்போவது இல்லை. மீனாட்சிக்குக் கொடுத்த காணிக்கை யாக நினைத்துக்கொள்கிறேன்’ என்று நித்தி சொல்லியிருக்கிறார். நீங்களாகவே அவர் கொடுத்த கார், சிம்மாசனம் போன்ற பரிசுப் பொருட்களைத் திருப்பிக்கொடுப் பீர்களா?''

''அப்படியா சொன்னார்? எனக்குத் தெரியவில்லை!''

''கைது நடவடிக்கைக்கு இருந்த ஒரே தடையும் தகர்ந்துவிட்டதால், ஆர்த்தி ராவ் வழக்கில் விரைவில் நித்தி கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தட தடக்கின்றனவே?''

(வேண்டாம் என்று கைஅசைக்கிறார்) ''அவர் தன்மை யாக நடந்துகொள்கிறார். நீங்கள் எதையாவது எழுதி கான்ட்ரவர்சி ஏற்படுத்திவிடாதீர்கள்!'

''மல்லிகை மணமும் மங்கையர் சிரிப்புமாக இருந்த மடம் இப்படி வெறிச்சோடிப் போய்விட்டதே சாமி?''

''இப்போதும் பூஜைகள் நடக்கின்றன. பக்தர்கள் வருகி றார்களே!''

''கடைசியாக ஒரு கேள்வி... அடுத்த ஆதீனம் யார்?''

''நேரம் வரும்போது நானே சொல்கிறே
 ன் !''

No comments:

Post a Comment