அமெரிக்க கம்பெனியான வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்கு எதிராக வணிகர்களின் தொடர் போராட்டம் தொடங்கிவிட்டது. ‘வால்மார்ட்டே திரும்பிப் போ’ என்ற கோஷங்களும், மத்திய அரசுக்கு எதிரான கண்டனங்களும் நாடு முழுக்க எதிரொலித்து வருகிறது. எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க மத்திய அரசு
தீவிர முயற்சி எடுத்து வந்தாலும், ‘அடுத்து என்ன நடக்குமோ?’ என அச்சத்தில்தான் உறைந்திருக்கிறார்கள் வணிகர்கள். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு அந்நிய முதலீட்டுக்கு ரத்தினக் கம்ப ளம் விரித்து தீர்மானம் நிறைவேற்றியது. இதனையடுத்து, வால்மார்ட், டெஸ்கோ, மெட்ரோ, கரிபோர் உள்ளிட்ட கம்பெனிகள் இந்தியச் சந்தையில் கால் வைக்க நல்ல முகூர்த்தத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் ஆளும் கேரளமும், மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, ஜெய்ராம் ரமேஷ், வீரபத்திரசிங் உள்ளிட்ட காங்கிரஸ் அமைச்சர்களும் எதிர்ப்புக் கொடி காட்டியிருக்கிறார்கள்.
“தென்னாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகப்படியான வாக்கு வங்கி நாடார் சமூகத்தில் உள்ளது. அதேபோல், வடநாட்டில் சிறு கடைகள் நடத்தும் இஸ்லாமியர்களின் வாக்கும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் உள்ளது. இந்த உண்மை காங்கிரஸ் கட்சிக்குத் தெரிந்திருந்தும், இவர்களை நசுக்கும் இந்த முயற்சிக்கு வாய்ப்புக் கொடுத்தது மிகுந்த ஆச்சரிய த்தை அளிக்கிறது’’ என்கிறார் பொருளாதார நிபுணரும், ஆடிட்டருமான எம்.ஆர்.வெங்கடேஷ்.
மத்திய அரசின் முயற்சியால் என்னென்ன ஆபத்துகளை சந்திக்க நேரிடும்? என்பதைப் பற்றி விரிவாகவே பட் டியலிட்டார் வெங்கடேஷ். “மன்மோகன்சிங் இப்பவும் உலக வங்கியில் ஓய்வூதியம் வாங்குபவர். இவர் இதை எந்த இடத்திலும் மறுக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக அந்நிய முதலீடு இந்தியாவுக்குள் வர வேண்டும் என்று தொடர்ச்சியாக சர்ச்சைகளும், வாதங்களும் இருந்து வரும் நிலையில், திடீரென்று இப்படி அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் வருகைக்கு நாற்பது ஆண்டுகளாகப் பிரிந்து கிடக்கும் தி.மு.க., அ.தி.மு.க.வும் ஒருமித்த எதிர்ப்புக் குரல் காட்டியிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். இதைப் போலவே உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியும், முலாயம்சிங்கும், மேற்கு வங்கத்தில் மம்தாவும், இடதுசாரிகளும் போராட்டக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசின் வணிகத் துறை வெளியிட்ட விளம்பரத்தில் வால்மார்ட்டின் வருகையைப் பற்றி புகழ்ந்து எழுதியிருந்தது. அதாவது, வால்மார்ட் செய்ய வேண்டிய வேலையை மத்திய அரசு செய்கிறது.
இந்த நிறுவனம் இந்தியாவில் 53 பெருநகரங்களை ஆக்கிரமிக்கப் போகிறது. ஆனால், அதை என்னவோ பட்டிதொட்டியெல்லாம் ஏழை மக்களைக் காக்க வந்த தெய்வம்போல சித்திரிக்கின்றனர். ஆறு ஆண்டுகளில் முப்பதாயிரம் கோடி ரூபாயை செலவிடப் போவதாக வால்மார்ட் சொல்கிறது. அப்படியானால் ஆண்டுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய். இந்தத் தொகை டெல்லியில் கோலோச்சும் பவர்ஃபுல் வி.ஐ.பி.க்களுக்கு டிப்ஸ் போன்றது. எதையோ மறைக்கிறார்கள். ‘ஒரு கோடிப் பேருக்கு வேலை’ என்கிறார்கள். எத்தனை கோடி பேருக்கு வேலை போகும்? பாதிப்பு எவ்வளவு என்பதைப் பற்றி எந்த வரிகளும் இல்லை. ஒரு கோடிப் பேருக்கு வேலை கொடுத்தால் பல கோடி மக்கள் வேறு தொழில்களுக்குத் திரும்ப வேண்டிய அபாயம்தான் ஏற்படும்.
வால்மார்ட் வந்தால் காய், கனியில் ஏற்படும் 50 சதவிகித நஷ்டம் மற்றும் மற்ற உற்பத்திப் பொருட்களால் ஏற்படும் 40 சதவிகித நஷ்டமும் ஈடு செய்யப்படும் என்கிறார்கள். இதற்காக அவர்கள் குளிரூட்டப்பட்ட குடோன்களை வைப்பார்கள் என்கிறது மத்திய அரசு. குளிரூட்டப்பட்ட குடோன் என்பது கைக்கு எட்டாத சாதனமா என்ன? விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் நல்ல லாபத்தைப் பெறலாம் என்கிறார்கள். உள்ளூர் போட்டியாளர்கள் ஒழிந்துவிட்டால் வால்மார்ட் சொல்வதை நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும். வால்மார்ட்டின் ஸ்லோகம் என்ன தெரியுமா? ‘ஸ்டாம்ப் தி காம்ப்’. அதாவது, போட்டியாளர்களை நசுக்கு என்பதுதான்.
உதாரணமாக, பிளாஸ்மா டி.வி.யை 40 சதவிகித விலைக் குறைப்பில் வால்மார்ட் விற்கும். பிளாஸ்மா டி.வி. எந்த இடத்தில் உற்பத்தி செய்யப்படுகிறதோ அங்கிருந்தே நல்ல விலைக்கு வாங்கி நஷ்டத்தில் விற்பார்கள். இப்போது ஷோரூம் வைத்து டி.வி. விற்பவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது. இவர்கள் டி.வி. வாங்கி விற்க வேண்டுமென் றாலும் வால்மார்ட்டைத்தான் நாட வேண்டும். அப்போது அவர்கள் வைப்பதுதான் விலை என்றாகிவிடும்.
சிங்கப்பூரில் வால்மார்ட் இருக்கிறதே? என்கிறார்கள். அந்த நாட்டையும், நம் நாட்டையும் ஒப்பிடவே முடியாது. வால்மார்ட் கம்பெனியால் வீழ்ந்த நாடுகள் ஏராளம் உள்ளன. தாய்லாந்து, பிரேசில், அர்ஜெண்டினா, கொரியா, ஜெர்மன், ஜப்பான் நாடுகள் வால்மார்ட்டால் பெரும் நஷ்டத்தை சம்பாதித்துவிட்டன. அங்குள்ள வியாபாரிகள் அலறியடித்துக் கொண்டு வால்மார்ட்டை விரட்ட ஆரம்பித்துவிட்டனர்.
மத்திய அரசின் போலி பொருளாதாரக் கொள்கையால் கடந்த எட்டு ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகள் இறந்து போய்விட்டனர். இப்போது வால்மார்ட் மூலம் புதிய ரத்தத்தை ருசி பார்க்க சோனியா ஆசைப்படுகிறார். இதை ‘ஒய் திஸ் கொலைவெறி?’ என இணையதளங்களில் எழுதியிருக்கிறேன். வால்மார்ட் வந்தால் நகர்ப்புற மக்களுக்கு முதலில் உணவு, பிறகுதான் கிராமப்புறங்களுக்கு என்ற நிலைமை வந்துவிடும். அந்தளவுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்குமான ஒட்டுமொத்த கேந்திரமாக வால்மார்ட் மாறிவிடும்.
இதன்பின்னால் ஒரு மாபெரும் சதிவேலை இருப்பதாகவும் சந்தேகம் எழுகிறது. சமீபத்தில் ஒரு சி.டி. வெளியானது. அதில் ஜெர்மன் நாட்டு வங்கியான எல்.ஜி.டி.யிலும், பிரெஞ்ச் வங்கியான ஹெச்.எஸ்.பி.சி.யிலும் சுமார் 818 இந்திய அரசியல்வாதிகள் கறுப்புப் பணத்தை முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. பிரெஞ்ச் கம்பெனியான கரிபோரும், ஜெர்மன் கம்பெனியான மெட்ரோவும் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் கால் பதிக்க உள்ளன. இங்கு நிறுவப்படும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு நமது அரசியல்வாதிகளின் பணம் கறுப்பில் இருந்து வெள்ளையாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
ஏனென்றால், பன்னாட்டு கம்பெனிகளை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் யார் யார் என்ற பட்டியலைப் பாருங்கள். அவர்களது நோக்கம் என்ன என்பது எளிதில் விளங்கிவிடும். வால்மார்ட் வாழ்ந்தால் அமெரிக்கா வாழும். அமெரிக்கா வாழ வேண்டுமானால் வளர்ந்து வரும் நாடுகள் சாகத்தான் வேண்டும் என்ற கொள்கைக்கு சோனியா உரம் போடுகிறார். மீண்டும் இன்னொரு காலனி ஆதிக்கத்திற்குள் நம்மை இழுத்துச் செல்லும் முயற்சியாகவே வால்மார்ட்டின் வருகை அமையும்’’ என ஆதங்கத்தோடு சொல்லி முடித்தார் வெங்கடேஷ்.
இதையடுத்து, ‘இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்?’ என புதிய கோணத்தில் நம்மிடம் விளக்கினார் பிரபல பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா. “இந்தியா போன்ற விவசாய நாடுகளில் விவசாயிகளுக்கு ஏற்ற கூலியையும், உற்பத்திப் பொருட்களை அரசே கொள்முதல் செய்வதும்தான் ஆரோக்கியமாக இருக்கும். அதைவிடு த்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு விசிறி விடுவது ஆபத்தைத்தான் கொடுக்கும்’’ என்றவர்,
“வால்மார்ட் வந்தால் 2, 3 ஆண்டுக ளுக்கு அந்த கம்பெனி நஷ்டத்தை மட்டுமே காட்டும். விவசாயிகள் முகத்தில் மகிழ்ச்சியைக் காணலாம். நுகர்வோர்களுக்கு குறைவான விலை, உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலை என தொடக்கத்தில் வலை விரிக்கும். ஆனால், போகப் போக நம்மையே விழுங்கிவிடும் நீளமான வாய் அதற்கு உண்டு.
சுயவேலைவாய்ப்பு, சிறு உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள், உழைக்கும் மக்கள் கூட்டம் என அனைவருக்கும் உலை வைக்கும் மோசமான கொள்கை இது. வால்மார்ட் தலைமையிடமான அமெரிக்காவில்கூட இந்த கம்பெனிக்கு எதிராக பல இயக்கங்கள் நடந்து வருகிறது. இந்த கம்பெனியால் சுற்றுச்சூழல் பிரச்னை ஏற்படுகிறது என அமெரிக்கர்கள் கொந்தளித்துக் கிடக்கிறார்கள்.
உலகின் பல நாடுகள் எதிர்த்துக்கொண்டிருக்கும் நிலையில், அவசரமாகக் கூடி முடிவெடுத்ததில் ‘உள்பேரம்’ ஏதாவது நடந்திருக்குமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இப்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 52 ரூபாய் ஆகிவிட்டது. வால்மார்ட் வந் தால் இது மேலும் அதிகரிக்கவே செய்யும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. நூறு டன் பொருள் உற்பத் தியைக் கொடுக்கும் விவசாயியிடம் ஒருகட்டத்தில், ‘20 டன் தரம் சரியில்லை’ என வால்மார்ட் திருப்பி அனுப்பினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றி அரசு விளக்குமா? பருத்தியை அரசே கொள்முதல் செய்த வரையில் எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ‘பன்னாட்டு ஏகபோகம் நாட்டை சுபிட்சமாக்கும்’ என்று பொருளாதார மேதை மன்மோகன்சிங் எப்படி நம்புகிறார்? என்பதுதான் நம்முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி’’ என ஆழ்ந்த யோசனையோடு பேசி முடித்தார் வெங்கடேஷ் ஆத்ரேயா.

No comments:
Post a Comment