கிழக்கு சீன கடல்பகுதியில் உள்ள 3 சிறிய தீவுகளை விலை கொடுத்து வாங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.
கிழக்கு சீன கடல்பகுதியில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவை யாருக்கு சொந்தம் என்பதில் சீனா, தைவான், ஜப்பான் ஆகிய நாடுகளிடையே பிரச்னை உள்ளது. ஜப்பானால் சென்காகு என்று அழைக்கப்படும் இத்தீவுப் பகுதி, சீனாவால் தியாயூ என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தீவுகள் தொடர்பாக ஜப்பான் பிரதமர் யோஷிகிகோ நோடா கூறியுள்ளது: சென்காகு தீவுகள் ஜப்பானுக்கு சொந்தமானதுதான். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள 3 தீவுகளை விலை கொடுத்து வாங்கி, அங்கு தங்கள் ராணுவத்தை நிறுத்தி, தீவு மீதான உரிமையை நிலை நாட்ட ஜப்பான் முடிவு செய்துள்ளது. அந்த தீவுகளுக்கு ஜப்பானைச் சேர்ந்த சிலரே உரிமையாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு சீன கடல் பகுதியில் உள்ள தீவுகள் தாது வளம் மிக்கவை. எனவேதான் சீனாவும், தைவானும் அப்பகுதி தீவுகளுக்கு உரிமை கொண்டாடி வருகின்றன. கடந்த வாரத்தில் இப்பகுதியில் ரோந்து சென்ற ஜப்பான் கடற்படையினருக்கும், தைவான் படையினருக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டது.

No comments:
Post a Comment