Wednesday, July 11, 2012

''பச்சையாகவும் பதில் சொல்ல முடியும்! வேண்டாம்! நித்தியின் கற்பழிப்பு குறித்து ஆர்த்திராவ்


நித்தியின் விதியை, மாற்றி எழுதியவர் ஆர்த்தி ராவ். ரஞ்சிதா உடன் நித்தியானந்தா இருக்கும் வீடியோ வெளிவரக் காரணமானவர். '40 முறை கற்பழித்தார்’ என்று சி.ஐ.டி. போலீஸில் வாக்கு மூலம் கொடுத்திருக்கும் ஆர்த்தி ராவ் இன்னும் குமுறல் குறையாமல் இருக்கிறார்...  
 '' 'எம்.டெக் படித்த பெண் ஒருவரை கடவுளின் பெயரைச் சொல்லி ஐந்து ஆண்டுகளாகக் கற்பழிக்க முடியுமா?’ என்று நித்தியானந்தா கேட்கிறாரே?''
''எம்.டெக். மெரிட்டில் பாஸ் செய்த எனக்கு, இந்தக் கேள்வி இன்னும் புரியாத புதிராக இருக்கிறது. பதில் கண்டுபிடிக்க முடியாமல் அழுது அழுது, உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்ய முயற்சித்து இருக்கிறேன். கவுன்சிலிங் சென்றபோதுதான், நித்தியானந்தா ஒரு 'கல்ட்’ என்று தெரிந்தது. எத்தனையோ டாக்டர்கள், சைக் காலஜிஸ்ட்கள், நீதிபதிகளும் நித்தியின் கல்ட் புத்திக்கு பலியாகி இருக்கிறார்கள். அதை வைத்துதான் இன்று அனைவரையும் மயக்கி வைத்திருக்கிறார்!''
''ஏன் அவரை கல்ட் என்று சொல்கிறீர்கள்?''
''ஒருவரின் மனதை மாற்றி மூளைச் சலவை செய்து, தன்னுடைய வழிக்கு திருப்பிக் கொள்ளும் கும்பல்தான் கல்ட். நித்தியானந்தாவும் அந்த மாதிரியான ஆள்தான். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் ஒரு கல்ட், 'இந்த நேரத்தில் இறந்துபோனால் எல்லாரும் நேரடியாக சொர்க்கத்துக்குப் போகலாம்’ என்று சொல்ல... ஒரே நேரத்தில் 983 பேர் தங்களுடைய குழந்தைகளோடு தற்கொலை செய்துகொண்டார்கள். ஒரு 'கல்ட்’ அத்தனை பேரின் மனதை மாற்றிச் சாகடிக்கும்போது, கற்பழிப்பு எல்லாம் எம்மாத்திரம்? இன்னும் இந்து மதத் தலைவர்களிடம் 'இதெல்லாம் இந்து மதத்தை அழிக்கிற சதி’ என்று சொல்லி மனதை மாற்ற முடிகிறது; ஆதீனமாக ஆக முடிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவர் சிரித்துச் சிரித்து காரியம் சாதிக்கும் வில்லன் சார்!''
''உங்களுக்கு கொடூரமான பால்வினை நோய் இருப்பதாகவும், உங்களை தொட்டாலே அந்த நோய் ஒட்டிக்கொள்ளும் என்றும் நித்தியானந்தா சொல்கிறாரே?''
''அதெல்லாம் சுத்தப்பொய். முதலில் என்னை யாரென்றே தெரியாது என்றார். அப்புறம், லட்சோப லட்ச பக்தைகளில் ஒருத்தி என்றார். இப்போது நோய் இருக்கிறது என்கிறார். இப்படி பொய் பொய்யாக சொல்கிறவர் எப்படி கடவுளின் அவதாரமாக இருக்க முடியும்? இரண்டு வருடங்களுக்கு முன், அமெரிக்காவிலும் சென்னையிலும் என் மீது வழக்குப் போட்டு இருக்கிறார். யாரென்றே தெரியாதவர்கள் மீது யாராவது கேஸ் போடுவார்களா? அவர் என்ன லூஸா?''
''அமலா என்ற பெயரில் உங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள். நீங்கள்தான் அமலா என்று நித்தி எப்படிக் கண்டுபிடித்தார்?''
''நித்தி கையில் குற்றப் பத்திரிகை கிடைத்த உடன், நான் சொன்ன சம்பவங்களையும் இடங்களையும் படித்து இருப்பார். அந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்த ஆள் நானும் அவரும்தான். அதனால்தான் என் மீது ஏகப்பட்ட வழக்குகளைப் போட்டு இருக்கிறார்.''  
''நீங்கள் 40 முறை கற்பழிக்கப்பட்டதாகப் பேட்டி கொடுக்கிறீர்கள். ஆனால் நித்தி, 'ஆறு வயது சிறுவனுக்குரிய மனநிலையில்தான் இருக்கிறேன். நான் ஒரு பெண்ணைக் கற்பழிக்க முடியுமா? என்னிடம் அமெரிக்க லேப் ரிப்போர்ட் இருக்கிறது’ என்கிறாரே..?''
''முதலில் நான் ஆண்மை இல்லாதவன் என்றார். அப்புறம் நான் ஆறு வயதுச் சிறுவன்; எப்படிக் கற்பழிக்க முடியும் என்கிறார். கடந்த ஒன்றரை வருடத்தில் சி.ஐ.டி. போலீஸார் எட்டு முறை டெஸ்ட் பண்ண சம்மன் அனுப்பியும், இன்னும் ஆஜராகாமல் இருக்கிறார். அவர் காலம் தாழ்த்துவதைப் பார்க்கும்போது, ஏதோ ட்ரீட்மென்ட் எடுக்கிறார் என்றுதான் தெரிகிறது. ஏனென்றால், நித்தியானந்தா  என்ன வேண்டுமானாலும் செய்வார். இந்தக் கேள்விக்கு என்னால் வேறு மாதிரி பச்சையாகவும் பதில் சொல்ல முடியும். அது வேண்டாம்!''
'' 'நான் கற்பழித்ததாகச் சொல்கிற பெண், ஏன் இத்தனை ஆண்டுகள் மீடியாவிடம் பேசவில்லை? இதற்குப் பின்னால் பேரம்தான் இருக்கிறது’ என நித்தியானந்தா தரப்பில் சொல்கிறார்களே?''
''பேரம் பேசினார்கள்; பணம் கேட்டார்கள் என்று நித்தியானந்தா சொல்வதெல்லாம் பிரச்னையைத் திசை திருப்புகிற திருட்டு வேலை. பேரம் பேசுவதாக இருந்தால் ஏன் நித்தியானந்தாவிடம் பேசாமல், சி.ஐ.டி. போலீஸிடமும் மீடியாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன். 2010 ஆகஸ்ட்டிலேயே நான் சி.ஐ.டி. போலீஸில் வாக்குமூலம் கொடுத்து விட்டேன். ஒரு பெண்ணாக குடும்ப கௌரவத்தைக் கொ​லை செய்துவிட்டு, 'என்னை நித்தியானந்தா கெடுத்து​விட்டார்’ என்று என்னால் எப்படி வெளியே சொல்ல முடியும்? நித்தியானந்தா ஆசிரமத்தில் நான் சேருவதற்கு முன், ஆறு கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து வைத்து இருந்தேன். அவர் என் மீது அமெரிக்காவில் போட்ட பொய் வழக்கால், இன்று பணத்தை இழந்து, குடும்பத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன். (அழுகிறார்) கடவுள் பெயரைச் சொல்லி, யோகா, தியான முறைகளைச் சொல்லி மக்களிடம் கோடி கோடியாகப் பணத்தை ஏமாற்றினாரா இல்லையா? அதனால்தான் கலிஃபோர்னியா கோர்ட்டே, 'நித்தி ஒரு ஃப்ராடு’ என்று தீர்ப்பு கொடுத்து விட்டது.''
''உங்கள் தோழி மாநித்ய கோபிகா என்ன ஆனார்?''
''இந்தக் கேள்விக்கு நித்தியானந்தாதான் பதில் சொல்ல வேண்டும். மா நித்ய கோபிகா என்னுடைய உயிர்த்தோழி. இன்றைக்கு எங்கே இருக்கிறாள், எப்படி இருக்கிறாள் என்றே தெரியவில்லை. கேரளாவில் இருக்கும் அவளுடைய பெற்றோருக்கும் தெரியவில்லை. வீடியோ விவகாரம் வெளியே வந்தது 2010 மார்ச். அதன்பிறகும்கூட அவளை வெளியே அனுப்பாமல் ஆசிரமத்திலேயே வைத்திருக்கிறார்க‌ள். 2010 மே மாதம் வரை என்னைத் தொடர்புகொள்ள கோபிகா பலமுறை முயன்றார். நான் யாருடனும் பேசும் மனநிலையில் இல்லாததால், பேசவில்லை. அமெரிக்கக் குடியுரிமை பெற்ற கோபிகாவும் அவளுடைய கணவர் ராஜேஷ§ம் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. ஒன்றரை ஆண்டுகள் நித்திக்கு பெர்சனல் செகரட்டரியாக இருந்த எனக்கே இவ்வளவு தெரிந்து இருக்கிறது என்றால், நான்கு ஆண்டுகளாக பெர்சனல் செகரட்டரியாக இருந்த கோபிகாவுக்கு எவ்வளவு தெரிந்திருக்கும்? அவள் வெளியே வந்தால் பல எரிமலைகள் கண்டிப்பாக வெடிக்கும். அதனால் நானும் அவளைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் அவளை சைலன்ட் ஆக்கிவிட்டார். சைலன்ட் என்பது மிரட்டலாகவோ, கொலையாகவோகூட இருக்கலாம்.''
''நீங்கள் எடுத்த வீடியோவில் நடிகை ரஞ்சிதா தவிர இன்னும் இரண்டு பெண்கள் இருந்ததாக லெனின் கருப்பன் சொல்கிறாரே... அது உண்மையா? அந்தப் பெண்கள் யார் யார்?''
''22 மணி நேரம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் ரஞ்சிதா தவிர இன்னும் இரண்டு பெண்கள் இருந்தது உண்மைதான். அவர்களும் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள்தான். பெயரைச் சொல்லி அவர்களுடைய வாழ்க்கையையும் கெடுக்க விரும்பவில்லை. கோர்ட்​டில் விசாரணைக்கு வரும்போது சி.ஐ.டி. போலீஸே சொல்​வார்கள். அதுவரை நானும் சொல்ல மாட்டேன்.''
''அப்படியென்றால் நடிகை ரஞ்சிதாவின் வீடியோ​​வை மட்டும் வெளியிட்டதன் உள்நோக்கம் என்ன?''
''அந்த வீடியோவைப் பார்த்த அதிர்ச்சியில், எந்த அளவுக்கு புத்தி பேதலித்துப்போனேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீள முடியவில்லை. முதலில் அந்த வீடியோவை டி.வி-யில் போடுவார்கள் என்றே எனக்குத் தெரியாது. அதெல்லாம் லெனினுக்கு மட்டும்தான் தெரியும். பாவம் ரஞ்சிதா... நித்திக்கு விரித்த வலையில் சிக்கி விட்டார்!''
''நீங்களும் ஆசிரமத்தின் முக்கியப் பொறுப்பிலும் நித்தியின் பெர்சனல் செகரட்டரியாகவும் இருந்துள்​ளீர்கள். அப்போது ரஞ்சிதாவுடன் எதுவும் பிரச்னை வந்ததா?''
''இந்த வீடியோவால் அவர் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருப்பார் என்பதை ஒரு பெண்ணாக என்னால் உணர முடிகிறது. ரஞ்சிதாவுக்கும் எனக்கும் தனிப்பட்ட நட்போ, பகையோ எதுவும் இல்லை. ஆசிரமத்தில் ஒரு பக்தையாகவே தெரியும். ரொம்ப சிம்பிளாக இருப்பார்.
2009 ஜனவரியில் நித்திக்கு மிக நெருக்கமான ஆறு பேர் மட்டும் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கப் போய் இருந்தோம். அமெரிக்காவில் இருந்து நீர்வீழ்ச்சியைப் பார்த்தால் நன்றாக இருக்காது என்று, எங்களை கனடா அழைத்துச் சென்றார் நித்தி. அந்த ஒன்றரை மணி நேர கார் பயணத்தில் ரஞ்சிதாவுடன் மும்முரமாகப் பேசிக்கொண்டு வந்தார் நித்தி. அப்போதுதான் ரஞ்சிதா முதன்முதலாக நித்தியுடன் வெளியே வந்திருந்தார்.''
''நித்தியோடு வாரணாசி, கும்ப​மேளா, லாஸ் ஏஞ்சல்ஸ் என பல இடங்​களுக்குப் போனதாக வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறீர்கள். வேறு எங்கெல்லாம் போனீர்கள். அப்போது நித்தி எப்படி நடந்து கொண்டார்?''
''டூர் போகும்போது நித்தி எப்போதும் ஜாலி மூடில் இருப்பார். நன்றாகச் சிரித்துப் பேசுவார். சினிமா ஹீரோ மாதிரி விதவிதமாக உடை அணிவார். ஆனால், அவருடைய அனுமதி இல்லாமல் ஃபோட்டோ எடுக்க முடியாது. 2007-ல் நித்தியோடு லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்குப் போயிருந்தபோது தனக்கு நெருக்கமான சிலரை மட்டும் அழைத்து, 'உங்களை எல்லாம் நைட் கிளப்புக்கு கூட்டிட்டுப் போகப்போறேன். ஏனென்றால், காமத்தை இஷ்டப்படி அனுபவித்து முழுமையடைந்தால் மட்டுமே நம்மால் தியானத்தில் ஈடுபட முடியும்’ என்று கூறிவிட்டு, அவருடைய அறைக்கு போய் உடை மாற்றி வந்தார். 'ஜீன்ஸ், டி-ஷர்ட், ரேபான் கூலிங்கிளாஸ் அணிந்து வந்தவரைப் பார்த்து எங்களுக்கு எல்லாம் ஷாக். 'நான் காவி உடையில் வந்தால் உங்களுக்கு குரு என்ற பயம் இருக்கும். அதனால்தான் இந்த கெட்டப்’ என்று சிரித்தார். நித்தியால் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட விநய் பரத்வாஜும் உடன் வந்திருந்தார்.''
''நீங்களும் லெனின் கருப்பனும், நித்தியால் பல பெண்களும் ஆண்களும் பாதிக்கப்பட்டதாகச் சொல்கிறீர்கள். உண்மையிலே நித்தியால் எத்தனை பெண்கள், எத்தனை ஆண்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் யார் யார்?''
''என்னுடைய கணக்குப்படி 32 பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் பெரும்​பாலானவர்கள் நித்திக்கு பெர்சனல் செகரட்டரியாக இருந்தவர்களும், அவரிடம் 'மாயி’ (தாய்) பட்டம் வாங்கியவர்களும்தான். குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பயந்து மனதுக்குள் புழுங்கிக்கிடக்கிறார்கள். அவர் களுடைய பெயர்களை என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. 10-க்கும் மேற்பட்ட ஆண்கள் பாதிக்கப்பட்டதாக லெனினும் விநய் பரத்வாஜும் ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறார்கள். கூடிய விரைவில் நித்திக்கு எதிராக நான்கு பெண்கள் வெளியே வரப்போகிறார்கள். நித்திக்கு இன்னொரு அதி பயங்கர அதிர்ச்சி காத்திருக்கிறது. தொடக்கக் காலத்தில் இருந்து இப்போது வரைக்கும் நித்தியோடு மிக நெருக்கமாக‌ இருக்கும் ஒருவரும் விரைவில் வெளியே வரப்போகிறார். அப்போது நித்தி பற்றி இன்னும் பல ரகசியங்கள் வெளியே வரும்!''

 என்னை யார் ஓவர்டேக் பண்ணினாலும் பிடிக்காது!
 இதுவரை நித்தியுடன் மட்டுமே பிரஸ் மீட் நடத்திவந்த மதுரை ஆதீனம், கடந்த 7-ம் தேதி சிங்கிள் சிங்கமாக பத்திரிகை​யாளர்களை சந்தித்தார்.
வழக்கமாக 'எதற்கும் தயார்’ என்று பத்திரிகையாளர்களை எதிர்கொள்ளும் மதுரை ஆதீனம், முதன்முறையாக கண்டிஷன்களைப் போட்டார். 'சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் போர்ப் பயிற்சி அளிப்பது பற்றியும், முல்லை பெரியாறு பிரச்னை பற்றியும்தான் பேசப்போகிறேன். நித்தியானந்தாவைப் பற்றி எதுவும் கேட்கக் கூடாது’ என்று நிபந்தனை விதித்தார். ஆனாலும் நிருபர்கள் நித்தியைப் பற்றியே கேட்க, வேறுவழி இல்லாமல் பதில் சொல்லத் தொடங்கினார், ஆனால்... ஜாக்கிரதையாக.
'எனக்கும் நித்தியானந்தாவுக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. பேட்டிகளின்போது நித்தியானந்தா சொல்லும் கருத்துக்களும் என்னுடைய கருத்துக்களும் ஒன்றுதான். நான் இப்போதும் பழையபடியேதான் இருக்கிறேன். ஒரு நிறுவனத்தில் எப்படிச் சிப்பந்திகள் மாற்றப்படுகிறார்களோ, அப்படித்தான் இங்கும் சிப்பந்திகள் மாற்றப்பட்டனர். நான் சூழ்நிலைக் கைதியாக இல்லை. எப்போதும்போல அமைதியாக சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்' என்றார் ஆதீனம்.
''கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் நித்தியானந்தா குற்றவாளி என்று நிரூபணமானால், அவரை ஆதீனப்பொறுப்பில் இருந்து நீக்குவீர்களா?''
''முதலில் தீர்ப்பு வரட்டும். அப்புறம் சொல்கிறோம்.''
''நித்தியானந்தா உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையாமே?'' என்று ஒருவர் கேட்க, 'அவர் மட்டுமல்ல, மதுரை ஆதீனமும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. என்னை யார் ஓவர்டேக் செய்தாலும், ஓவர்லுக் செய்ய முயன்றாலும் எனக்குப் பிடிக்காது. எனக்குக் கீழ்ப்படியாவிட்டாலோ, என் உத்தரவை மதிக்காவிட்டாலோ எனக்குக் கோபம் வந்து விடும். 40 ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறேன். இனிமேலும் அப்படித்தான் இருப்பேன்'' என்று பிரகடனம் செய்தார்!
இது நித்திக்குச் சொன்னதோ?

No comments:

Post a Comment