Wednesday, July 11, 2012

எங்களை தற்காத்துக்கொள்ள திருப்பி அடிப்போம் என்பதில் தவறில்லை. வேல்முருகன்


சும்மாவே பா.ம.க. வட்டாரம் அதிகப்படியான துள்ளலில் இருக்கும். இப்போது அதில் இருந்து வேல்முருகன் பிரிந்த வெறுப்பும் சேர்ந்ததால் பதற்றம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. 
முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன், பா.ம.க-வில் இருந்து பிரிந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே, இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையில் மோதலுக்குப் பஞ்சம் இல்லை. இந்தச் சூழலில் குருவின் சொந்த ஊரான காடுவெட்டிக்கே வேல்முருகன் சென்றால்..?
கடந்த 5-ம் தேதி, காடுவெட்டியை அடுத்த பாப்பாகுடியில் நடைபெற்றது, அ.தி.மு.க-வைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்பவரின் மகன் திருமணம். அதில் கலந்துகொள்ள வேல்முருகன் தனது கட்சியினருடன் காரில் வந்தார். அந்தக் கார்கள் காடுவெட்டியைக் கடக்கும்போது 25 பேர் கொண்ட கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. வேல்முருகன் தரப்பும் திருப்பித் தாக்க, கலவர பூமியானது காடுவெட்டி. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த டி.ஐ.ஜி. அமல்ராஜ், எஸ்.பி. ஜெயகவுரி ஆகியோர், வேல்முருகனைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இதைஅடுத்து, 'சிங்கத்தின் குகையில் எலியாக நுழைந்து, சிங்கத்தின் குட்டிகளை இனங்கண்டு பயந்து ஓடிய எலி வேல்முருகனே... மீண்டும் வருவாயா சிங்கத்தின் குகைக்குள்? காத்திருக்கிறோம்!’ என்ற நோட் டீஸ்கள் பா.ம.க. தரப்பில் ஒட்டப் படவே... மீண்டும் பிரச்னை. சாலை மறியல், பேனர் கிழிப்பு என்று வேல்முருகன் தரப்பினர் இறங்கியதும் கலவரம் பற்றிக்கொண்டது.
வேல்முருகனிடம் பேசினோம்.
''இந்தத் தாக்குதலுக்கு மருத்துவர் ராமதாஸ்தான் காரணம் என்று சொல்வது சரியா?''
''நிச்சயமாக! எல்லா மேடை களிலும் 'வேல்முருகனை வெட்டு வேன், குத்துவேன்’ என்று காடு வெட்டி குரு பேசி வருகிறார். அதோடு வேல்முருகன் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு சன்மானம் என்றும் அறிவித்து இருக்கிறார். நான் ஊருக்குள் வருவது தெரிந்ததும், பொம்பளையைப் போல ஊரை விட்டு ஓடி ஒளிந்துகொண்டு, வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார். இதன் பின்னணியில் ராமதாஸும் குருவும் இல்லை என்றால் வேறு யார் இருக்கக்கூடும்?''
''இது மாதிரியான தாக்குதலுக்கு என்ன காரணம்?''
''பா.ம.க-வை எதிர்த்து அரசியல் செய்த வாழப்பாடி ராமமூர்த்தி, பண்ருட்டி ராமச்சந்திரன், ஏ.கே.நடராஜன், தீரன்,  பு.தா.இளங்கோவன், ஜெகத்ரட்சகன் ஆகியோரைத் தொடர்ந்து மிரட்டி னார்கள். என்னையும் மிரட்டி ஒடுக்கி விடலாம் என நினைத்து நான் செல்லும் இடங்களில் எல்லாம் தாக்குதல் நடத்துகிறார்கள். அதையும் மீறித்தான் என் பின்னே இளைஞர் கூட்டம் அணிவகுக்கிறார்கள். அதற்குக் கடலூரில் நடந்த மாநாடே உதாரணம்.''
''இதற்கு எதிராக நீங்கள் போலீஸ் பாதுகாப்பு கேட்பதில்லையா?''
''தாக்குதல் நடத்தப்படும்போதெல்லாம், போலீஸ் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன். அன்றைக்கும் காடுவெட்டிக்குப் போவதை உளவுத் துறைக்கும் போலீஸ்காரர்களுக்கும் சொல்லி விட்டுத்தான் சென்றேன். ஆனால், அங்கு காவலுக்கு இரண்டு போலீஸ்காரர்கள்தான் நின்றார்கள். அவர்களும் கல் வீசியவர்களைக் கட்டுப் படுத்தவில்லை. தற்காத்துக்கொள்ள திருப்பி அடித்த எங்கள் இளைஞர்களைத்தான் அடித்தார்கள். எங்கள் தொண்டர்கள் மீது அதிகமாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறை, நாங்கள் குருவின் மேல் புகார் செய்து இருப்பதைப் பதிவு செய்யவில்லை. இதற்குக் காவல்துறை பதில் சொல்லியே ஆகவேண்டும்.''
''இந்தப் பிரச்னைக்குத் தீர்வே இல்லையா?''
''அவர்கள்தான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். எங்களைத் தற்காத்துக்கொள்ள திருப்பி அடிக்கிற காலம் வெகு தூரத்தில் இல்லை.''
''அப்படியானால் நீங்களும் வன்முறையை விரும்புகிறீர் களா?''
''நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல; ஒருவன் தன்னைத் தாக்கும்போது தங்களைத் தற்காத்துக் கொள்வது என்பது அவனுக்கான உரிமை. இதை எந்தச் சட்டமும் தவறு என்று சொல்லவில்லை. அதனால் எங்களை தற்காத்துக்கொள்ள திருப்பி அடிப்போம் என்பதில் தவறில்லை!'' என்றார்.
இந்த விவகாரம் குறித்துப் பேச காடுவெட்டி குருவைத் தொடர்பு கொண்டோம். அவர் சார்பாக வழக்கறிஞர் கே.பாலு பேசினார். ''அண்ணன் குருவைப் பிடிக்காதவர்கள் வேல்முருகனை ஒரு திருமணத்துக்கு வரவழைத்து இருக்கிறார்கள். இதை அறிந்த பா.ம.க. நிர்வாகிகள்தான் போலீஸுக்குத் தகவல் கொடுத்து உள்ளனர். அவர் ஒன்றும் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கவில்லை. காரில் வந்தவர்கள் காடு வெட்டியில இறங்கி வெடி வெடித்து இருக்கிறார்கள். அதோடு, 'யாருடா இங்கே வெடி வெடிக்கக்கூடாதுன்னு சொன்னது?’ என்று அரிவாளு டன் சிலர் மிரட்டியும் இருக்கிறார்கள். அது அங்கிருந்த சிலருக்கு ஆத்திரமூட்டியதால் கல்வீச்சு நடந்ததே தவிர, திட்டமிட்ட தாக்குதல் நடக்கவில்லை. இதை அண்ணன் குரு தூண்டி விட்டார் என்று சொல்வது வடிகட்டிய பொய். வேல் முருகன் வருகிறார் என்று ஓடி ஒளிந்துகொள்ளும் கோழை இல்லை அவர். எங்களின் மாவீரன் குரு என்பது எங்கள் இனத்துக்கே தெரியும்.
வேல்முருகன் கட்சியை விட்டுப் போன பிறகு, அவரைப்பற்றி யோசிப்பதுகூட கிடையாது. ஏன்னா... மருத்துவர் ஐயா அவரை கொசு என்று சொல்லி இருக்கிறார். மேடைகளில் குரு இவரைப்பற்றி பேசினார் என்று சொல்லிக்கொண்டு திரிவது சுய விளம்பரம்தான். வேல்முருகனுக்கு அரசியல் அடையாளம் கொடுத்தது மருத்துவர் ஐயாதான். அவரை ஜெயிக்க வைத்தது எங்கள் வன்னியர் இனம்'' என்றார் காட்டமாக.
இவங்களுக்கு யாருப்பா பஞ்சாயத்து பண்றது?

No comments:

Post a Comment