Wednesday, July 18, 2012

டெசோ மாநாட்டை தடுப்பதற்காகவே கருணாநிதியை சந்தித்த ப.சிதம்பரம். வெளிவரும் திகில் ரகசியம்.



The secret meeting of Karunanidhi and P.Chidhambaram.
கருணாநிதி மிகப்பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டு இருக்கும் டெசோ மாநாட்டை எப்படியாவது தள்ளிப்போட நினைக்கிறதாம் மத்திய அரசு. அதற்கான தாக்கீதை சிதம்பரம் எடுத்துவந்ததாகச் சொல்கிறார்கள். 'இலங்கைத் தமிழர்களை ஆதரித்துப் பேசுவது என்பது வேறு... அதற்காக இலங்கையைப் பிரித்து தமிழ்ஈழம் அமைக்க வேண்டும் என்று பேசுவது வேறு. ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று, மத்தியில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு பிரதானக் கட்சியே பேசலாமா? அதற்காக மாநாடு நடத்தலாமா?’ என்று பிரதமர் மன்மோகன் நினைக்கிறாராம். அதுபற்றிப் பேசுவதற்குத்தான் சிதம்பரம் அனுப்பப்பட்டாராம். 'நான் இந்தியப் பிரச்னை குறித்து முரண்பாடான கருத்தைச் சொல்லவில்லை. இலங்கை விவகாரத்தில், தனி நாட்டைத் தவிர வேறு வழி இல்லை என்றுதானே சொல்கிறேன்’ என்ற அர்த்தத்தில் கருணாநிதி பதில் சொல்கிறாராம். 'இது தி.மு.க-வின் தனிப்பட்ட கருத்து.’ என்றாராம் கருணாநிதி. ஆனால் அதை சிதம்பரம் ஏற்கவில்லை. 'இப்படி ஒரு மாநாடு நடப்பதையே டெல்லி விரும்பவில்லை’ என்றாராம் சிதம்பரம். 'அனைத்து ஏற்பாடுகளும் செய்து ​விட்டேன்’ என்றாராம் கருணாநிதி. ஆனால், மத்திய அரசின் முடிவு இதுதான் என்று கறாராகச் சொல்லிச் சென்று விட்டாராம் சிதம்​பரம்.''
''தனித் தமிழ்ஈழம் என்று பேசுவதும், அதற்கு அனைத்து நாடுகளில் இருந்தும் தமிழர் பிரதிநிதிகளை வரவழைக்க இருப்பதும் தவறான முன்னுதாரணம் என்று நினைக்கிறது டெல்லி. அதைச் சொல்வதற்காகத்தான் ப.சிதம்பரத்தின் வருகை அமைந்​ததாகச் சொல்​கிறார்கள். இங்குள்ள மத்திய புலனாய்வுத் துறையினர் டெ​சோ மாநாடு குறித்த தகவல்​களை மத்திய அரசுக்கு தொ​டர்ந்து அனுப்பி​வந்தார்கள். இதைப் பார்த்து கொந்தளித்த மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த சனிக்கிழமை அன்று ஒரு அறிக்கையை டெல்லியில் இருந்து கொடுத்தது. 'தமிழர்களுக்காக தனிநாடு (தனிஈழம்) என்பதை நோக்கமாகக்கொண்ட எல்.டி.டி-யின் செயல்பாடுகளின் தாக்கம் இந்தியப் பிராந்தியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி... அது சட்டத்​துக்குப் புறம்பான செயல்களுக்கு வழிவகுப்​பதுடன் இந்திய ஒருமைப்பாடு மற்றும் ஆட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என்று எச்சரிக்கை செய்கிறது அந்த அறிக்கை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பார்த்தால், கடந்த மே மாதமே இந்த அறிவிப்பு வந்திருக்க வேண்டும். மாறாக இரண்டு மாதங்கள் கழித்து இந்த அறிக்கையைத் தூசிதட்டி வெளியிட வேண்டிய அவசியம், டெசோ மாநாட்டைத் தடுப்பதற்குத்தான்.''

''ஞாயிறு மதியம் 4 மணிக்கு சிதம்​பரம் வருகிறார் என்பதே ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. ஒரு மணி நேரத்​துக்கு முன்னதாகத்தான் தனது வீட்டுக்கே தகவல் சொல்லி இருக்கிறார் ப.சி. பொதுவாக விமான நிலையத்துக்கு தன்னை வரவேற்க வருபவர்களை தனது காரில் சிதம்பரம் ஏற்றிக்கொள்வார். ஆனால் இம்முறை, 'யாரும் ஏற வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுத் தனியாக தனது வீட்டுக்கு வந்தார். அங் கிருந்தபடி, கருணாநிதியைச் சந்திக்க சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் சென்றார். இரவு வேறு எந்தச் சந்திப்பும் இல்லாமல் மீண்டும் டெல்லிக்குப் பறந்துவிட்டார் சிதம்பரம்.''

டெசோ மாநாடு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு வைக்கும் ஆசிட் டெஸ்ட் என்று நினைத்தாராம் கருணாநிதி. சிதம்பரம் சென்ற பிறகு ஆழ்ந்த யோசனையில் இருந்த கருணாநிதி, 'தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை வைத்தால்தானே தவறு. அந்தக் கோரிக்கையை வைக்காமல் இலங்கைத் தமிழர் நல்வாழ்வு என்று பேசினால் என்ன?’ என்று யோசித்தாராம். அதனால்தான் திங்கள் கிழமை காலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். 'தனித் தமிழ் ஈழம் என்பது தீர்மானமாக இருக்காது’ என்றும் சொன்னார். 'தனி ஈழத்துக்காகப் போராட்டமோ கிளர்ச்சிகளோ எதுவும் இப்போது இல்லை. இந்த மாநாட்டின் தலைப்பே ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்பு மாநாடு’ என்றும் அறிவித்து விட்டார் கருணாநிதி. 'டெசோ’ என்றாலே  'தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு’ (Tamil Eelam Supporters Organization) என்பதுதான். தமிழ் ஈழத்துக்கான தீர்மானமே அதில் இல்லை என்றால் புஸ் ஆனது மாதிரிதான்!''

No comments:

Post a Comment