Monday, July 30, 2012

வருகிறதா அடுத்த சி.டி.? திக்குமுக்காடும் அமைச்சர்


ர்ச்சைகள், தகராறுகள் மூலமாகவே மக்களால் அறியப்படுபவர் என்றால், அது தொழி லாளர் நலத் துறை அமைச்சர் செல்லப் பாண்டியன்தான்! 
'தலைமறைவு சின்னத்துரை... சிக்கலில் செல்லப்பாண்டியன்’ என்ற தலைப்பில், அமைச்சர் செல்லபாண்டியனின் மகன் ஜெபசிங், சில பெண்களோடு உல்லாசமாக இருந்தது குறித்த கட்டுரையை ஆதாரத்துடன் வெளியிட்டு இருந்தோம்.
இந்த ஆதாரங்களைக் கொடுத்த சின்னத்துரையைத் தேடும் நடவடிக்கையை தற்காலிகமாக போலீஸார் நிறுத்தி இருக்கிறார்கள் என்றாலும் அவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் ஏகத்துக்கும் பரபரப்பைக் கிளப்பிய அந்தச் செய்தியால் எப்போதும் ஏசி போட்டது போல இருக்கும் கொடநாட்டிலும் அனல் பறந்ததாம். ''கட்சியினரால் ஆட்சிக்குக் கெட்ட பெயர் வரும் அளவுக்கு சம்பவங்கள் நடப்பதைக் கண்டு முதல்வர் எரிச்சல் அடைந்திருக்கும் நேரத்தில், இந்தத் தகவல் மேலும் அவரை ஆத்திரமடையச் செய்திருக்கிறது. எனவே கூடுதல் விவரங்களைச் சேகரிக்க சொல்லி உத்தரவிட்டு இருக்கிறாராம். விரைவில் சென்னைக்குத் திரும்பும் முதல்வர், பெரிய அளவில் களையெடுப்பு நடத்த இருக்கிறார். அந்தக் களையெடுப்பில் செல்லப்பாண்டியனுக்கும் நிச்சயம் பதவி பறிபோகும்'' என்கிறார்கள் எஸ்டேட் வட்டாரத்தினர்.
ஆனால் இந்த விவகாரத்தை அமைச்சர் செல்லப்பாண்டியன் தரப்பில் வேறு விதமாகச் சொல்கிறார்கள். ''நகருக்கு வெளியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும்னு அம்மா வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், தங்களோட சுய லாபத்துக்காக அந்தத் திட்டத்தை செயல்படுத்த விடாமல், சில அ.தி.மு.க-வினரே தடுக்கிறார்கள். 'அம்மா அறிவித்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன்’ என்று அமைச்சர் சபதம் போட்டு செயல்பட்டு வருகிறார். அதனால் அமைச்சரை முடக்கவே இந்த சி.டி. மேட்டரை வெளியேவிட்டுள்ளார்கள்'' என்று வித்தியாசமான காரணத்தைச் சொல்கிறார்கள்.
சரி இந்த விவகாரத்தில் போலீஸின் அடுத்த நடவடிக்கை என்ன?
தூத்துக்குடி எஸ்.பி. ராஜேந்திரனிடம் பேசினோம். ''யாருமே புகார் கொடுக்கலை. அதனால் நாங்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று கூலாகச் சொன்னார்.
அடுத்து சில சி.டி-களும் விரைவில் உலா வர இருக்கிறது என்பதுதான் இப்போது தூத்துக்குடி டாக். ஆக, தூத்துக்குடியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது!

No comments:

Post a Comment