Thursday, November 22, 2012

பெண்கள் எப்போது முழு திருப்தியடைகிறார்கள்? [சத்தியமா 18+ இல்லை!!]


மணமகன்களை விற்கும் கடை ஒன்று புதிதாகத் திறக்கப் பட்டது. பெண்கள் அந்தக் கடைக்குப் போய் அங்கே உள்ளவர்களில் தனக்குப் பிடித்த மணமகனை தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம்.  

அந்தக் கடையில் மொத்தம் ஆறு தளங்கள், ஒவ்வொரு தளமாக மேலே செல்லச் செல்ல அந்தந்தத் தளத்தில் கிடைக்கும் மணமகன்களின்  நற்க்குணங்களும் அதிகரித்துக் கொண்டே செல்லும், ஆனால் ஒன்னு,  மேலே போயிட்டா   கடையை விட்டு வெளியே வரலாமே தவிர கீழே வரப்படாது, இது தான் கண்டிஷன்.



தனக்கேத்த மணமகனைத் தேட [வாங்க] இந்தக் கடைக்கு ஒரு பெண் போகிறாள்.


முதல் தளம் இந்த அறிவிப்போடு வரவேற்கிறது:


Floor 1- வேலைக்குச் செல்லும் மணமகன்கள் இங்கே உள்ளார்கள்.

இதைப் படிச்சதும் "ம் ... இத்தனை நாளா ஒரு வெட்டிப் பயலோடு சுத்திகிட்டு இருந்தோம், அதைக் காட்டிலிலும் இது பரவாயில்லைதான்", -ன்னு மனசுக்குள்ளநினைச்சுகிட்டு, "இருந்தாலும் அடுத்த ஃபுளோர்ல இதை விட பெட்டரா என்ன இருக்குன்னு போயி பார்ப்போமே" ன்னு இரண்டாவது தளத்துக்கு போகிறாள். 

 
Floor 2 – வேலைக்குச் செல்லும் வாலிபர்கள், இவர்களுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் அவர்களை அன்போடு கவனித்துக் கொள்பவர்கள்.

"ஆஹா..... சூப்பர், இவனுங்களும் ஒ.கே தான்.  அதுசரி மூணாவது ஃபு
ளோருக்கும் போய்ப் பார்ப்போமே........."
 
 
Floor 3 – "இவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள் குழந்தைகளையும் அன்போடு கவனித்துக் கொள்வார்கள், மேலும் ஹிருத்திக் ரோஷன், சல்மான்கான் மாதிரி லுக்காகவும் இருப்பார்கள்"

 
“ம்ம்ம்ம்ம்ம்........  
ரொம்ப டெம்ப்டிங்கா இருக்கே.........  பரவாயில்லை,  அடுத்த  ஃபுளோரையும் பாத்திடுவோம்.”
 

Floor 4 – இவங்க வேலைக்கும் போவாங்க குழந்தைகளையும் பார்த்துக்குவாங்க, சினிமா ஸ்டார் மாதிரி குட் லூகிங், வீட்டு வேலையிலும் உதவியா இருப்பாங்க.

 
“வாவ்..... இதைவிடவும் பெட்டரா அடுத்த ஃபுளோர்ல என்ன இருக்குன்னும் பார்த்திடுவோமே" அப்படின்னு லிப்ட்ல அடுத்த தளத்துக்கு போகிறாள்.

 
 
Floor 5 – இங்கே வேலைக்குச் செல்லும், குழந்தைகளை கவனித்துக் கொள்ளும், அழகானவீட்டு வேலையிலும் உதவியாய் இருக்கும், கொஞ்சம் ரொமான்ஸ் அதிகமான ஆடவர்கள் கிடைப்பார்கள். 

“ஆ...... கடவுளே, என்னால தாங்க முடியல, அடுத்த தளத்துல இன்னும் என்ன இருக்குதோ தெரியலையே" என்று ஆறாவது 
ஃபுளோருக்குச் செல்கிறாள்.

 
Floor 6 – "வாங்கம்மா வாங்க......நீங்கதான்  இந்த தளத்தோட 345,67,89,012 -வது விசிட்டர்........... இங்க மணமகன்கள் யாரும் இல்லை, ஒரு பெண் எதிலுமே திருப்தியடையமாட்டாள்  என்பதற்கான நிரூபணம் தான் இது, கடைக்கு வந்ததற்கு நன்றி, போயிட்டு வாங்கன்னு ஒரு எலக்ட்ரானிக் போர்ட் காமிச்சதாம்!!

திருந்துங்கையா........... திருந்துங்க............ நன்றி: வெங்காயம் பிளாக் ஸ்பாட்.

No comments:

Post a Comment