Tuesday, November 27, 2012

அருள்வாக்கு மரணத்திலும் எது பெரியது?



குரு யார்? 

உண்மையை அறிந்தவர். தன்னை அண்டின சிஷ்யர்களின் கேஷமத்தைக்கருதினவர்.

மோட்ச மரத்துக்கு விதை எது?

உள்ளதை உள்ளபடி அறிந்து காரியத்தில் காட்டுவது.

எது பத்தியம்? (ஹிதமானது)

தர்மம்.

எவன் சுத்தன்?

எவன் மனது சுத்தமாக இருக்கிறதோ அவன்.

எவன் பண்டிதன்?

விவேகி. (விவேகத்தையுடையவன்)

எது விஷம்?

பெரியார் வார்த்தையை அலக்ஷ்யம் செய்வது.

சத்துரு யார்?

சோம்பேறித்தனமே

மதிப்புக்கு மூலம் எது?

ஒருவனை எதையும் கேட்காதிருத்தல்

வறுமை யாது?

த்ருப்தியின்மை

உயர்ந்த ஜீவனம் யாது?

குற்றமின்மை.

அறிவின்மை யாது?

தேர்ச்சியிலும் அப்யாஸமின்றியிருத்தல்.

நரகம் யாது?

பிறர் வசமாயிருத்தல்.

ஸௌக்யம் யாது?

ஸர்வஸங்க பரித்யாகம்.

மரணத்திலும் எது பெரியது?

அசட்டுத்தனம்.

எவன் ஆத்மாவை நல்வழிப்படுத்த முடியாது?

போக்கிரிகள், நித்ய ஸந்தேஹி, அழுமூஞ்சி, நன்றியில்லாதவன்.

(ப்ரச்னோத்தர ரத்னமாலை - என்ற நூலிலுள்ள வடமொழி கேள்வி பதிலை தமிழாக்கம் செய்து 27.1.33-ல் சென்னையில் மகா பெரியவர் பேசியது)

No comments:

Post a Comment