Friday, November 18, 2011

ரயில் கட்டணத்தை விட பஸ் கட்டணம் அதிகம்



பஸ் கட்டண உயர்வின்படி, சென்னையிலிருந்து கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் கட்டணம் ரூ. 100 முதல் ரூ. 170 வரை அதிகரிக்கவுள்ளது.

எக்ஸ்பிரஸ் பஸ் கட்டணம், எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதியுடன் கூடிய ரயில் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் ரூ.19 முதல் ரூ.87 வரை கூடுதலாக உள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுடன் கூடிய கட்டணத்துடன் எக்ஸ்பிரஸ் பஸ் கட்டணத்தை ஒப்பிடுகையில் சற்று அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது, பஸ் கட்டண உயர்வைத் தொடர்ந்து ரயில் கட்டணம் மிகக் குறைவாக உள்ளது.

ரயில்களில் முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு பயணிகள் கட்டணம் அதைவிடவும் குறைவு. ஏற்கெனவே ரயில்களில் முன்பதிவு செய்வதற்கு குறிப்பாக விழா காலங்களில் கவுன்டர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இப்போது பஸ் கட்டணம் அதிகரித்துள்ளதால் இனி வரும் காலங்களில் இந்தக் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment