Friday, November 18, 2011

பார்த்திபன் நல்லவன்... அமீர்தான் எனக்கேத்த களவாணிப் பயல்!

பருத்திவீரனைக் கொடிவீரனாக்கி, கோடம்பாக்கத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார் பாரதிராஜா. அவருடைய கனவு சினிமாவான 'அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தில் அமீர்தான் ஹீரோ. 'கொடிவீரன்’ பாத்திரத்துக்குப் பார்த்திபனை வைத்து போட்டோ ஷூட் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அதிரடி மாற்றமாக அமீரை அழைத்திருக்கிறார் பாரதிராஜா.
சமீபத்தில் நடந்த இயக்குநர் சங்கத் தேர்தலின்போது இரு துருவங்களாக நின்று வெளிப்படையாகவே மோதிக்கொண்ட பாரதிராஜாவும் அமீரும் திடீரென இணைந்தது எப்படி?

காய்ச்சலில் அமீர்... கலங்கிய பாரதிராஜா!

இளையராஜாவின் மனைவி ஜீவாவின் இறுதி நிகழ்ச்சிக்கு தேனி சென்றுஇருந்தார் அமீர். இரண்டு நாட்கள் தூக்கம் விழித்த அசதியோடு காய்ச்சலும் சேர்ந்துகொள்ள... தேனியில் ஒரு விடுதியில் தங்கினார். துக்கம் விசாரிக்க வந்து இருந்த பாரதிராஜாவிடம், 'அமீருக்குக் காய்ச்சல்’ எனச் சொல்லப்பட, அவர் அமீர் தங்கி இருந்த அறைக்கு வந்தார். ''ஆஸ்பத்திரியில் காட்டினியா?'' என்பதுதான் பல மாதங்களுக் குப் பிறகு அமீரிடம் பாரதி ராஜா பேசிய வார்த்தைகள். இதில், அமீர் உருக, அவரது உடல் நிலை கண்டு பாரதி ராஜா கலங்க... பிரிந்தவர்கள் இணைந்தால் பேசவும் வேண் டுமோ! 'அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தில் அமீரை நடிக்கவைத்தால் எப்படி இருக்கும் என்கிற எண்ணமே அந்தச் சூழலில்தான் பாரதிராஜாவுக்கு உருவாகி இருக்கிறது.


மூன்றாவது முயற்சி!

இதற்கு முன்னரே பாரதிராஜா இயக்கத்தில் உருவாவதாக இருந்த 'குற்றப்பரம்பரை’ படத்தில் அவருக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பும், 'அப்பனும் ஆத்தாளும்’ படத்தில் சேரனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் அமீருக்கு வந்தன. ஆனால், அவை கைகூடவில்லை.

தேனியில் இருந்து சென்னை திரும்பிய அமீருக்கு பாரதிராஜா அலுவலகத்தில் இருந்து போன். '' 'அன்னக்கொடியும் கொடி வீரனும்’ படத்துல நடிக்க உங்களுக்குச் சம்மதமானு டைரக்டர் கேட்கிறார்!'' எடுத்த எடுப்பில் ஒரே கேள்வி. ''அவர் படத்தில் நடிக்க நான் எப்படிங்க மறுப்பேன்... என்னிக்கு ஷூட்டிங்னு சொல் லுங்க!'' என ஆனந்தமாகப் பதில் சொல்லி இருக்கிறார் அமீர்!

ஆளே மாறிய அமீர்!

மறு நாள் காலையிலேயே பாரதிராஜா அலுவலகத்தில் அவருடைய ஆக்ஷனுக்கு நடித்துக்காட்டிக்கொண்டு இருந்தார் அமீர். முதல் கட்ட போட்டோ ஷூட்டில் பாரதிராஜாவுக்கு ஓரளவுக்குத் திருப்தி. தொடர்ந்து இரண்டாவது போட்டோ ஷூட் தேனியில் நடந்தது. ''அவனோட தாடியை ஷேவ் பண்ணுங்கய்யா'' என பாரதிராஜா சொல்ல, அமீருக்குத் தூக்கி வாரிப்போட்டது. ''இதுவரை தாடியை எடுத்ததே இல்லையே...'' என அமீர் தயங்க... தொடர் வற்புறுத்தலில் தாடி நீக்கப்பட்டு, அடர்த்தியான மீசை, ஒட்ட வெட்டப் பட்ட தலைமுடியுமாக மாறினார் அமீர். சட்டையைக் கழற்றிவிட்டு பொட்டல் காட்டில் அமீரைக் களம் இறக்கி ஆட்டுவிக்கத் தொடங்கினார் பாரதிராஜா.
இனியாவை அமீரோடு நிற்கவைத்து ஜோடிப் பொருத்தமும் பார்க்கப்பட்டது. படத்துக்கு ஒப்பந்தம் செய்தது முதல் போட்டோ ஷூட் முடித்த வரை அமீரும் பாரதிராஜாவும் பேசிக்கொள்ளவே இல்லை.

''பார்த்திபன் நல்லவன்... அமீர்தான் எனக்கேத்த களவாணிப்பயல்!''

'அன்னக்கொடியும் கொடி வீரனும்’ படத்துக்கு முதலில் பார்த்திபனைத்தான் தேர்ந்தெடுத்து போட்டோ ஷூட் நடத்தி இருந்தார் பாரதிராஜா. ''சம்பளம் பற்றிக்கூடக் கேட்காமல் நடிக்கச் சம்மதிச்சேன். காரணம், பாரதிராஜாங்கிற உயரிய கலைஞன் மேல நான் வெச்சிருக்கிற அபரிதமான மரியாதையும் அன்பும். போட்டோ ஷூட் போனேன். நல்லா பண்ணி இருப்பதாகச் சொன்னார்கள். என்ன காரணம்னு தெரியலை. திடீர்னு இப்போ என்னை மாற்றிவிட்டு அமீரைப் போட்டிருப்பதா சொல்றாங்க. யார் நடிச்சா என்ன... சாரோட படம் வெற்றி அடைய வாழ்த்துற முதல் ஆள் நானாத்தான் இருப் பேன்!'' என விளக்கம் சொல்லி இருக்கிறார் பார்த்திபன்.

பாரதிராஜாவுக்கு நெருக்கமானவர்கள் இதற்குச் சொல்லும் காரணம்தான் ஹைலைட்!

''படத்தில் கட்டுவிரியன்கிற பாத்திரம் களவாணிப்பயல் கேரக்டர். பார்த்திபன் உடல் அளவில் அந்தப் பாத்திரத்துக்கு ஃபிட்டாதான் இருந்தார். ஆனாலும், போட்டோ ஷூட் பார்த்த இயக்குநருக்கு அவ்வளவு திருப்தி வரலை. 'என்ன பண்ணினாலும் பார்த்திபன் நல்லவன் மாதிரியே தெரியிறான்யா’னு பாரதிராஜா சொன்னார். அப்பதான் தேனியில்வெச்சு அமீரைப் பார்த்திருக்கார். உடனே, அவரைவெச்சு போட்டோ ஷூட் எடுக்கச் சொன் னார். ஸ்டில்ஸ் பார்த்து அசந்துட்டார் பாரதி ராஜா. 'நான் தேடின களவாணிப்பய இவன்தான்யா. மீசைய எறக்கி, ஒட்ட வெட்டுன முடியில் நம்ம ஊரு களவாணிப்பய அப்படியே கண்ல தெரியிறான்யா’னு புகழ்ந்து தள்ளிட்டார். 'போட்டோஸ்ல மட்டும் இல்லய்யா... எதிர்த்துப் பேசுறது, முறுக்கிட்டு நிக்கிறதுனு எல்லாத்துலயுமே திமிரோட அலையிற இந்தப் பயதான்யா நமக்குச் சரிப்படுவான்’னு சொல்லி உறுதி பண்ணிட்டார் பாரதிராஜா!'' என்கிறார்கள் யூனிட் பார்ட்டிகள்.

அமீர் என்ன சொல்கிறார்?

''எனக்கும் பாரதிராஜா சாருக்கும் மோதல்னு யாருங்க சொன்னது? கருத்துரீதியா ஒரு குடும்பத்துக்கு உள்ளயே கோடிப் பிரச்னைகள் இருக்கும். மத்தபடி எப்பவுமே அவரோட பக்கத்துல நிக்க ஆசைப்படுற ஆட்கள்ல நானும் ஒருத்தன். ஓர் இயக்குநரா அவர் நிகழ்த்தி இருக்கிற சாதனைகளை என்னை மாதிரி இயக்குநர்கள் பாட மாத்தான் படிக்க முடியும். ஒரு நடிகரா மட்டும் இல்லை... ஒரு இயக்குநராகவும் அவர்கிட்ட இருந்து நிறையக் கத்துக்கணும்னு நினைச்சேன். அதுக்கான வாய்ப்பு இப்போ அமைஞ்சிருக்கு. படத்தைப் பத்தி என்கிட்ட கேட்டீங்கன்னா, நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஏன்னா,என்ன கதை, எத்தனை நாள் ஷூட்டிங், யார் ஜோடி, யார் இசையமைப்பாளர்னு எந்த விவரங்களையும் அவர் கிட்ட நான் கேட்கலை... கேட்கவும் மாட்டேன். அவர் ஆடுடானு சொல்லிட்டா, நாம ஆடித் தீர்த்திட வேண்டி யதுதானே சார்?'' என்கிறார் நெகிழ்வோடு.

பாலசந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் எனத் தலைமுறை தாண்டிய இயக்குநர்கள் தேனிக்கே கிளம்பிப்போய் வாழ்த்த, 'உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா’ இன்னும் இளமை யோடு இயக்கிக்கொண்டு இருக் கிறார் அமீரை!

No comments:

Post a Comment