Tuesday, November 29, 2011

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு

carree_fouraசில்லரை வணிகத்தில் அன்னிய நாடுகளின் நேரடி முதலீடு என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்திருப்பது மிகப்பெரிய தவறாகும். ஏற்கனவே இந்தியா தாராளமயமாக்கல் மற்றும் பொருளாதார சீர்த்திருத்தம் என்ற பெயரில் இந்தியா தன் அடையாளத்தையும், கலாசாரத்தையும் இழ்ந்து தவிக்கிறது.


லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் புதிய தலைமுறையினர், புதிய புதிய பொருட்கள் வாங்கிக் குவித்து பெற்றோர், உற்றார், உறவினர்களை மதிக்க முடியாத நிலைக்கு இன்றைய இளைய சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது. தங்கள் உயிருக்கு உயிரான உறவுகளைவிட கலாசார மோகத்தில் வாங்கப்படும் உயிரற்ற பொருட்களை கட்டிக் கொண்டு அழும் கூட்டம் நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறது.


இந்த நிலையில், சில்லரை வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவு, இந்த நாட்டையே மீண்டும் வெளிநாட்டுக்கு அடகு வைப்பது போன்றதாகும்.


ஏற்கனவே காய்கறி, மளிகை, பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன. ரீலையன்ஸ், ஃப்ரஷ், மோர், பிக் பஜார் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த தொழிலில் இறங்கி சில்லரை வியாபாரிகளை கடும் நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது.


சாதாரண மளிகைக் கடை காய்கறிக் கடை வைக்க 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். இதில் வாடகை என்பது மிகக் குறைவாகவே இருக்கும். அட்வான்ஸ் தொகையும் ஓரளவுதான் இருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் குதித்ததும் வாடகை தாறுமாறாக ஏறிவிட்டது.


wal_martகார்ப்பரேட் நிறுவனங்கள் இருக்கும்போதே இந்த நிலையில் இருந்தால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தத் தொழிலில் குதித்தால் வாடகை மற்றும் அட்வான்ஸ் விவகாரம் எந்த அளவுக்கு உயரும் யோசித்துப் பார்க்க வேண்டும்.


இது மட்டுமல்ல, காய்கறி மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் உற்பத்திக்காக நிலங்களை வாங்கும் முயற்சியிலும் வெளிநாட்டு கம்பெனிகள் இறங்கும். இதில், நிலத்தின் விலையை தாருமாறாக உயர்த்தி இந்தியர்கள் நிலத்தை வாங்க முடியாதபடி செய்துவிடுவார்கள்.


சில்லறை வணிகங்களுக்காக கடைகள், குடோன்கள் என்ற பெயரில் இடங்களை மிக உயர்ந்த விலைக்கு வாங்கும் சக்தி கொண்டவையாக
வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்படும். இவர்களோடு இந்தியாவில் இருக்கும் சில்லரை வணிகர்கள் வியாபாரிகள் போட்டிபோட முடியுமா?


reliance-fresh-mukesh1வெளிநாட்டு நிறுவனங்களின் படையெடுப்பால் சிறப்பு பொருளாதார மண்டலம் என்று ஏற்படுத்தப்பட்டு அங்கே பல வெளிநாட்டுக் கம்பெனிகள் தொழில் தொடங்கி இருப்பதால் நிலத்தின் மதிப்பு ஏற்கனவே உச்சத்தில் இருக்கிறது. அந்த தொழிற்பேட்டைக்கு அருகே இருக்கும் விவசாய நிலங்களெல்லாம் இன்று வீட்டு மனைகளாக மாறிவருகின்றன.


காரணம், அந்த விலை நிலங்களில் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட, வீட்டுமனைகளாக போட்டுவிட்டால் பலகோடி ரொக்கம் கிடைக்கும் என்று ஆசைப்பட வைத்திருக்கிறது நமது விவசாயிகளை. விவசாயம் குறைந்துபோய் காய்கறிகளின் விலை விண்ணைத் தொடுகின்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் சில்லரை வியாபாரம் என்ற பெயரில் வெளிநாட்டு காய்கறிகளை இங்கே இறக்குமதி செய்து இன்னும் விலையை உயர்த்தி மக்களை வதைக்கச் செய்வது நியாயமா?


சில்லரை வணிகத்திலும் வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைந்தால் நிலங்களின் மதிப்பும், வீட்டுமனையின் மதிப்பும் தாறுமாறாக உயர்ந்துவிடும்.


பிறகு, சாதாரண குடிமகனின் கனவாக இருக்கும் ஒரு வீடு வாங்குவது என்ற கனவு கனவாகியே போய்விடும்.


Indian-supermarket1ஏற்கனவே, வெளிநாட்டு நிறுவனங்கள் கார் தொழிற்சாலை, கண்ணாடித் தொழிற்சாலை, கம்ப்யூட்டர் தொழிற்சாலை, டி.வி. தொழிற்சாலை என்று இருக்கும் போதும் சில்லரை வணிகத்திலும் வெளிநாட்டு கம்பெனிகள் தேவையா என்பதை மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.


இத்தனை எதிர்ப்புகளையும் மீறி சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதித்தால் மீண்டும் இந்தியாவை அந்நியநாட்டுக்கு அடிமை சாசனம் எழுதித் தருவது போலாகுமே தவிர வேரொன்றுமில்லை.

No comments:

Post a Comment